Monday 13 January 2014

Brussel Sprout & Bell Pepper Kurma (களக்கோஸ் & குடமிளகாய் குருமா)

தேவையான பொருட்கள்

 களக்கோஸ்      -      200 Gm
(Brussel sprout)
குடமிளகாய்  - 1
பெரிய வெங்காயம் – 1
தக்காளிப்பழம்  -  2
பூண்டு   -  5 பல்
உப்பு   -  தேவையான அளவு


அரைக்கத் தேவையானவை

தேங்காய்த் துருவல்  -  8 மேசைக்கரண்டி
சோம்பு   - 1 தேக்கரண்டி
பொட்டுக்கடலை   - 1 மேசைக்கரண்டி
வரமிளகாய்   -  10
மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்

தாளிக்கத் தேவையானவை

எண்ணெய்  -  2 மேசைக்கரண்டி  
பட்டை   -   1 (விருப்பம் இருந்தால்)
பிருஞ்சி இலை   -  1


வாணலியில் எண்ணெய் சூடானவுடன் பட்டை, பிருஞ்சி இலை போடவும். பின் நறுக்கிய வெங்காயம், பின் பூண்டு, தக்காளி என ஒவ்வொன்றாக வதங்க வரிசையாக போட்டு வதக்கவும். இப்போது நறுக்கிய களக்கோஸ், குடமிளகாய் போட்டு வதக்கவும்.

அரைத்து வைத்திருக்கும் கலவையை இதில் போட்டு சற்று வதக்க பச்சை வாசனை போகும். பின் மிக்ஸி கழுவிய நீரைய் விட்டு, கலக்கி உப்பு போடவும்.

.
குக்கரில் 1 விசில் விடவும், அல்லது வாணலியில் மூடி போட்டு 8 நிமிடங்கள் விட்டால் வெந்து விடும்.
சப்பாத்தி, அடை, இட்லி, 
தேசை,ப்ரைட்ரைஸ், பிரியாணிக்கு பொருத்தமாக இருக்கும்.



களக்கோஸ் பார்க்க முட்டைக்கோஸ் மாதிரி இருக்கும். ஆனால் முட்டைக்கோஸ் போல வாசம் இருக்காது. ஆனால் மு.கோஸ் போல எளிதில் வெந்து விடும்.



 R Umayal Gayathri

1 comment:

  1. இது போல் செய்ததில்லை... செய்முறை குறிப்பிற்கு நன்றி அம்மா...

    ReplyDelete