Thursday 20 February 2014

ராம ரசம் -1




ஓம் ஸ்ரீ ராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்
ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்


ஓம் ஸ்ரீ ராம ஜெயம்........!



பாடல் - 1



ராமா ராமா நீவா ராமா
சீதா ராமா நீவா ராமா

அணுவெல்லாம் ராமாமிர்தம் பாடிடுதே காணாமிர்தம்
அண்டமெல்லாம் தேவாமிர்தம் இசைக்குதே ஜீவாமிர்தம்
கண்கள் பூத்திருக்கு காண நோம்பிருக்கு
காவிஉடை ராஜா காட்சிதர வாவா

ராமா ராமா நீவா ராமா
ராமா ராமா வைகுண்ட ராமா

தோள்கொடுக்கும் தோழனாய் தம்பி இலக்குமனா
கஷ்டத்தில் பாதி சுவிகரிக்க சீதாபிராட்டி
வனமெல்லாம் உன்னடி ஆசிர்வதிக்க
கல்உருமாறி அகலிகை வந்தால்

ராமா ராமா ஆனந்த ராமா
ராமா ராமா ஆத்மா ராமா

குணமான குகனோ உன் தோழன் ஆனான்
சொல்லின் செல்வன் சொல்கிறான் உன் நாமம்
நாமம் சொல்லும் இடமே அவன் இருப்பிடம்
இராவணனின் மோக்ஷம் உன் அருள் தானே

ராமா ராமா சீதா ராமா
கோதண்டராமா நீவா ராமா






ஆர்.உமையாள் காயத்ரி.



1 comment:

  1. அருமை...

    வாழ்த்துக்கள்...

    ராமா ராமா ஆனந்த ராமா...
    ராமா ராமா ஆத்மா ராமா...

    ReplyDelete