Thursday, 27 February 2014

ராம ரசம் - 2 Ramarasam

ராம் ராம் ராம் ராம் ராம் ராம்  ராம்....

பாடல் - 2


செப்பவா செப்பவா செப்பிடவா…..
உன் மீது என்னாசையை 
செப்பவா செப்பவா செப்பிடவா…..


கண்டேன் கண்களில் காதல்
தந்தாயே என் ராமா
ராமாமிர்த மோகம்
நாளும் என்னைக் கொள்ளுதைய்யா                                          (செப்பவா)


வளை கழண்டது எதனால்.?
வயோதிகம் வந்தது எதனால்.?
கண்களில் ஏக்கம் எதனால்.?
காண்பது உன் முகம் அதனால்...!

                         (செப்பவா)

கேட்போரிடம் என்ன சொல்வேன்
கேளி செய்வோரிடம் என்ன சொல்வேன்
மன்னவன் மதி மயக்கினான் என்றா..?
மாதவன் மனதில் ஏறினான் என்றா..?

                           (செப்பவா)R.Umayal Gayathri.

1 comment:

  1. சிறப்பான பாடல்...

    வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete