Sunday 2 February 2014

Belum Caves - பூமிக்குள் ஒரு சுற்றுப்பயணம் போவோமா..?


நாம் எல்லோரும் சுற்றுப்பயணம் போவோம்.    உள் நாடு, வெளி நாடு.  சமதளம், மலைகள், பள்ளத்தாக்கு, கடல் மேல்  மற்றும் நீர் மூழ்கிக் கப்பலிலும் கடலின் அற்புதங்களைக் காணவென.



கிணற்றுக்குள் போய்யிருக்கீங்களா… ?    என்னது இல்லையா…?   வாங்க போகலாம்.    என்ன பயந்துட்டீங்களா…..   இல்லங்க நிஜமாத்தான்.    அதெல்லாம் மூச்சு முட்டாம    நான் கூட்டிக்கிட்டுப் போறேன்.    என்ன மனச திடப் படுத்திட்டு ரெடியாகிட்டீங்க போலா   வா ஒரு கை பார்க்கலாம் அப்படின்னு சொல்வது கேட்கிறது.    ஒகே..
சுற்றிலும் பச்சப் பசேர்னு விவசாய பூமி. அரிசி, கொத்தம்ல்லி, மிளகாய், சூரியகாந்தி பூக்கள், சோளம், கம்பு, பஞ்சு என அழகான இடம். சிறிய ஊர். அழகான மலைகள் உண்டு.
இந்த சூற்றுப் புறத்தில் மலை மேல் புத்தர் சிலை உயரமா இருந்து நம்மள பார்த்துட்டு இருக்கார். இப்போ நாம கிணற்றுக்கு பக்கத்தில வந்திட்டோம். படிகள் இருக்கு இறங்குவோமா….விசாலமான இடமா இருக்கிறது. 
என்ன தண்ணியைக் காணோம்னு பாக்குறீங்களா… நான் கிணறுன்னு தானே சொன்னேன்…..!
ஓகே…..  உள்ளே போகிற பாதையில போவோம். இருட்டாகத் தான் இருக்கும். ஆங்காங்கே ஆந்திர சுற்றுலா துறையினர் லைட் போட்டு இருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் நிலத்தடி நீர் ஓடிய பாதை இது. அதனுடைய வேகமும் ,சுழன்று ஓடிய சுழல் ஏற்படுத்திய பாறைத் தடங்களும், நீர்ப் பிரவாகம் கிளை பரப்பி பரவ அவைகள் துளைத்த வழித்தடங்களும் நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.
பாதை வழியே செல்லும் போது மேலே சுண்ணாம்புப் படிமங்கள் தொங்குகின்றன.  இதைச் சுற்றிய பரப்பில் போர்வெல் போடக் கூடாது என தடை இருக்கிறது.  1.5 கி மீ வரைய் நாம் சென்று பார்க்கும் பாதை நீள்கிறது.  
விசாலமான இடத்தில் இருந்து பாதை செல்கிறது. நேரே உள்பக்கமாக ஒரு குகை  இருக்கிறது குறுகிய பாதையில் சற்று தவழ்ந்தார்ப் போல் செல்லவேண்டும். சற்று விலாசமான குகை அது. முன்பு ஜென், புத்த மத துறவிகள் தவம் செய்த இடம் என்கிறார்கள். அதை பார்க்கும் போது அப்படி தான் இருக்கும் எனத் தோன்றுகிறது.
சரி நாம் பாதையில் பயணிப்போம். பாதை அகன்றும் குறுகியும் ஏற்றமும் இறக்கமுமாகச் செல்கிறது.  
நடப்பதற்க்காக கொஞ்சம் பாதை சரி பண்ணியிருக்கிறார்கள். நீரின் சுழல் விளையாட்டு நம்மை பிரம்மிக்க வைக்கும். பாறையை எப்படியெல்லாம் அது வளைவாக கூம்பாக ஆக்கியிருக்கிறது!!
நாம் செல்லும் வழித்தடம் இன்றி நிறைய வழிகள் போகின்றன. அதெல்லாம் இன்னும் ஆய்வில் உள்ளன. ஆகையால் அடைத்து வைத்திருக்கிறார்கள். தலைக்கு மேலே கால்சியம் படிமங்கள் உருவாகி இருக்கின்றன. பள்ளமாக உள்ள இடத்தில் சிறிய பாலம் கடக்க இருக்கிறது. மீண்டும் சற்று பெரிய இடத்திற்கு வந்து இருக்கிறோம்.
இங்கு நன்றாக மூச்சு விட, துளை போட்டு பைப் வைத்து இருக்கிறார்கள். காற்று நன்றாக வரும். வேர்த்து விறுவிறுத்து போனதற்கு அப்பாடியோவ்னு இருக்கு இல்ல..? வெயில் காலத்துல போனோம்னா….சும்மா வேர்வையில குளிச்சிடுவோம். தண்ணீர் மட்டும் கொண்டு போகலாம். வேறு உணவுப் பொருட்களுக்கு தடை.உண்டு
பள்ளத்துல சிறிய பாலம் அப்படின்னு சொன்னேன் இல்ல… ஆனா இப்போ பெரிய பள்ளம் அதனால சுருள் படிக்கட்டுக்கள் வைத்து இருக்கிறார்கள். அதுல நாம இறங்கலாமா..? பார்த்து வாங்க… என்ன… ரொம்ப சின்னது. 
ஆனா இந்த மாதிரி இடங்களில் ஓவ்வொரு அடி வைத்து போகும் போதும்  ஆர்வமா இருக்கும். பிரம்மிப்பா, மலைப்பா…இருக்கும். கல்லு, மண்ணுன்னு, குனிந்து போனது எல்லாம் வலியே தெரியாது.
என்ன… இப்போ இறங்கிட்டோம் இல்லயா… அப்படிங்கிறீங்க.. ஓகே.. வந்துட்டேன். இடது பக்கமா இறங்கி போற வழியில போனா தண்ணி விழற சத்தம் கேக்குதா..? இல்லையா…? சரி தண்ணியவே காட்டுறேன்… ஆனா  குனிந்து வரணும். சிவலிங்கம் இருக்கு…அதன் பின் புறம் எங்கேயோ போகிற வழியில இருந்து தண்ணி வந்து சின்ன அருவியா விழுது. சுவையான நல்ல தண்ணி. கலப்படம் இல்லாத தண்ணியை பார்ப்பதே அதிசயம் இல்லையா..?
எட்டி நின்னு குடிக்க பிடித்து கொள்ளலாம். பார்க்கலாம். கீழே விழுகிற தண்ணி கீழேயே எங்கோ செல்கிறது. எங்கிருந்து வருதுன்னும் தெரியாது, மறுபடி எங்கே போகுதுன்னும் தெரியாது. மழைக்காலம், குளிர்காலத்தில் மட்டும் தான் தண்ணீர் வரும். மற்ற நாட்களில் நீர் கசிவு தான்.
திரும்பி நாம் வந்து இடது பக்கம் போகிற வழியாக பார்த்துக் கொண்டு வந்தால் பாதி வழியில் நாம் சென்ற பாதையில் சேர்வோம். பின் மீண்டும் அதே வழி வந்து ஜென் துறவி குகை முன் துளை உள்ளது. மறுபடி நல்ல மூச்சு விட வேண்டியது தான்.
நாம் இறங்கின பெரிய இடத்தில் கல் இருக்கைகள் போட்டு உள்ளார்கள்.. அமர்வோம். அப்பா வெளிக் காற்று…! இப்போ நிமிர்ந்து பார்த்தால் கிணற்றுக்குள் இருப்பது புரியும். மேலே போவோமா…
கேட்டை விட்டு வெளியே வந்தால் குழந்தைகளுக்கு பார்க் இருக்கிறது. இயற்கையின் இன்னல்களுக்கு இடம் இருக்கிறது.
சிறிய ரொட்டி,மிட்டாய்க்கடை , ஆந்திரா சுற்றுலா ஹோட்டல் இருக்கிறது.
சாயங்காலம் ஹோட்டல் அடைத்து.விடுவார்கள்.
ஆகையால் காபி. டீ எதிர்பார்க்க முடியாது. மதியம் சாப்பாடு சைவம் அசைவம் உண்டு. வரும் போகும் வழியில் சிறிய ஊர்கள் தான் இருக்கும்.
அவர் அவர் கார்களில் ஏறலாமா…?  புத்தரை வணங்கி விடை பொறுவோம் மெயின் கேட் தாண்டி நம் ஊர்தி வேகம் பிடிக்கிறது.
ஓகேங்க…   பார்க்கலாம்.  சுற்றுலா சுகமாய் இருந்துதா ?  
பார்வையாளர்கள் கட்டணம் உண்டு. பொரியவர்களுக்கு, சிறியவர்களுக்கு என தனித்தனியே.  உங்களுக்கும் உண்டு….. என்னடா..ன்னு நினைக்கிறீர்களா ? கமண்ட் போடுங்க அதான்.                
இறைவன் விரும்பினால் மீண்டும் சந்திப்போம்.


ஆர். உமையாள் காயத்ரி.

6 comments:

  1. அருமையான படங்கள் மூலம் நாங்களும் பயணித்தோம்...

    எழுத்துநடையை மிகவும் ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. It would have been helpful if you have provided details about the cave like where in Andhra Pradesh it is and the way to reach it

    ReplyDelete
  3. Could you please provide details about this Cave like location and routes to reach it

    ReplyDelete
  4. This cave is in Kurnool District of AP. If you are coming from Chennai by train, you can get down in Yerraguntla and reach this place by road. The distance is about 50 Km from Yerraguntla. You can also get down in Tadipatri and reach this place which is around 30 KM. There is no lodge or resting place in Yerraguntla. You can reach Proddatur from Yerraguntla where you have decent lodges are there. Distance from Proddatur to Belum caves is around 50 Kms.

    ReplyDelete
  5. பயங்கிரமான கிணறாக இருக்கும் போல. படங்கள் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஆத்தாடியோவ் பயமாக்கீது....

    ReplyDelete