Saturday 15 February 2014

பீட்ரூட் ஹல்வா



தேவையான பொருட்கள்


பீட்ரூட் – 1 கிலோ
சுகர் - -1/2 கிலோ
பாதாம் – 12
முந்திரி - 12


ஏலம் – சிறிதளவு
நெய் – 3 மேசைக்கரண்டி
முந்திரி வறுக்க - 10 
பால் - சிறிதளவு





 பீட்ரூட்டை  துருவி  வைத்துக்  கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில்  1 மேசைக்கரண்டி நெய் விட்டு  பீட்ரூட்டை சற்று  வதக்கவும்.

பால்  சேர்த்து  வேகவிடவும்.



பாதாம்,  முந்திரியை  முன்பே  நன்கு ஊற  வைத்துக் கொள்ளவும்.


அதை  பால்  விட்டு மிக்ஸியில்  அரைத்துக்  கொள்ளவும்.

பீட்ரூட்  வதங்கவும்  அரைத்த  விழுதை  அதில்  சேர்த்து  கலக்கி  வேகவிடவும்.





நீர்  வற்றியவுடன்  சுகர்  போட்டு  கெட்டியாக வரும் வரைகிண்டவும்

அல்வா  பதம்  வந்தவுடன்  1 மேசைக்கரண்டி  நெய்விட்டு  ஏலம்  போட்டு இறக்கவும்.


1 மேசைக்கரண்டி  நெய்விட்டு  முந்திரியை  வறுத்து சேர்க்கவும்.  பரிமாறவும்





                                                           ஹல்வா............. ! ரெடி.


ஆர்.உமையாள் காயத்ரி.

1 comment: