Thursday 13 March 2014

சக உயிர்கள்...கவிதை - 15


கோழி  கூவும் முன் -
ஹெலிகாப்டரின்  பறத்தல்  கூவும்...!

சிலசமயம்
ஒன்றிற்கு  இரண்டாய்
வட்டமிடும்  வானில்  தொடர்ந்து...!

மாலையில்  இயல்பான
உல்லாச  களைகட்டல்
ஊரில்  தொடங்கி  விடும்...


இரவின்  ஆர்பரிப்பில்
வெடிப்பது  பட்டாசா...?
இல்லை...
துப்பாக்கியா...?
சப்தம்  புரியவில்லை...
மறுநாள்-
செய்தி  அறியும் வரை...

அங்கங்கு  பீரங்கி
அழகாய்  நிற்கும்...

வீதிவழி  கத்தரிப்பு
முக்கிய  இடங்கள்  தன்னில்...

பாதைகள்  மாறும்
பல  கடைகள்  மூடியிருக்கும்
முழிக்கும்  கடைகள்
முன்னேற்பாட்டுடன்  இருக்கும்

இந்தியர்களுக்கு
இன்முகமாய்...
வரவேற்பு  சொல்வார்கள்
நாட்டிற்கு வந்ததற்கு
வந்தனம்   உரைப்பார்கள்

தெரியா  முகமெனினும்
தெரிந்தவர்  போல்  முறுவல்  பூப்பர்
ஆசையாய்  அரபியில்  பேச
அன்பை  மட்டுமே
நம்மால்  பகிரமுடியும்...
ஆங்கிலம்  தெரியா - சில

நண்பர்களிடம்...!

குளிர்  காலங்களில்
சீதாஷனம்  மாறும்
மணியில் நொடியில்...!
அதே  போல்
நாட்டின்  நிலவரமும்...
சில  சமயங்களில்

திகில்  படம்  பார்ப்பது  போல்
பயமும்  பதைபதைப்புமாய்...

திடீரென  இயல்பு  வாழ்க்கை
திரும்பும்...!

கார்,  வண்டிகளில்  ஊர்வலம்...
சிலர்  நடந்தும்...
கொடிகள்  பறக்கும்  அவர்களின்  கைகளில்
சிறுமியர்  முதல் பெரிய  பெண்கள்வரை
கோஷமிடுவர்....
ஆண்களுடன்....
ஆச்சரியமாய்  இருக்கும்...!!!

சக  உயிர்கள்  அல்லவா - அவர்கள்
நம்மால்  முடிவது  - அவர்களுக்கான
பிரார்த்தனை  மட்டும்  தான்.
 

24.8.2013  மதியம், எகிப்தில் நிலவிய சூழ்நிலையின் பாதிப்பில் வடித்த கவிதை இது.


ஆர்.உமையாள் காயத்ரி.


4 comments:

  1. // அன்பை மட்டுமே
    நம்மால் பகிரமுடியும்... //

    என்றும் தேவை அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Maybe this is a true representation of the reality.. different from the media presentation!!

    ReplyDelete