Wednesday 9 April 2014

மொச்சை மண்டி Mochai Mandi

தேனான செட்டிநாட்டு மொச்சை மண்டி

தேவையான பொருட்கள்
மொச்சை – ½ கோப்பை
சின்னவெங்காயம் – 2 கையளவு
பூண்டு – 6 or 7
பச்சைமிளகாய் – 7 or 8
புளி – பெரிய எலுமிச்சை அளவு
உப்பு – ருசிக்கு ஏற்ப
பச்சைஅரிசி கழுவியநீர் – 1 1/2 கோப்பை

தாளிக்க தேவையானவை
எண்ணெய் – 3 மே.க
கடுகு – ½ தே.க
உ.பருப்பு – ½ தே.க
க.பருப்பு – 1 தே.க
சீரகம் – ½ தே.க
வர மிளகாய் - 1
                                                                             தாளிக்கவும்
               



பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.









                                         வெங்காயம் சேர்த்து வதக்கவும்.








இப்போது பூண்டுபோட்டு வதங்கிய பின்








( மொச்சையை முதல் நாளே ஊறப்போட்டு வைக்கவும் ).

அரை உப்பு போட்டு வேகவைத்த மொச்சையை சேர்க்கவும்


                       



பச்சை அரிசியைக் கழுவிய நீர் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். சற்று நேரம் ஆனவுடன் நீர் தெளியும்.     ( மேல் நீரில் புளி ஊறப் போட்டு கரைத்துக் கொள்ளலாம் ).
புளிக்கரைசல் சேர்த்து உப்பு போடவும்.
 ( மொச்சையில் ஏற்கனவே உப்பு உள்ளது )




இப்போது நன்றாக கொதிக்கும் போது மிதமான தீயில் வைக்கவும். நன்றாக மொச்சையில் சாரவும் அரிசி நீர் சேர்த்து சேர்மானமாக மண்டி வரும் போது அடுப்பை அணைக்கவும்.



                      தேனான செட்டி நாட்டு மொச்சை மண்டி தயார்.................!!!

                        சும்மா சொல்லவில்லை..... சுவைத்தால் உணர்வீர்கள்
.
                       வரட்டா.... புதிய சுவையில் மீண்டும் நான் உங்களுடன்....

       தெரியாதவர்களுக்கு இது புதிது...... தெரிந்தவர்களுக்கு இது அனுபவம்.


ஆர்.உமையாள் காயத்ரி.




2 comments: