Saturday 19 April 2014

Yoghurt Rava Idli - தயிர் ரவா இட்லி



                               ரவா இட்லி 
தேவையான பொருட்கள்
ரவை - 1 1/2 கோப்பை
தயிர் - 1 டம்ளர்
மஞ்சள் தூள் - 1/4
உப்பு - ருசிக்கு
கொத்தமல்லி - சிறிது







தாளிக்க வேண்டியவை
வரமிளகாய் - 1
ப. மிளகாய் 1
கடுகு - 1/4 தே.க
உ பருப்பு - 1 தே.க
க.பருப்பு - 1 தே.க
சீரகம் - 1/2 தே.க
மிளகு - 1/2 தே.க
கருவேப்பிலை - சிறிது
முந்திரி - 8 
எண்ணெய் - 1 மே.க

 

ரவையை  மிதமாக  வறுத்து  புளித்த தயிரில் மஞ்சள் தூள்,உப்பு போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
சமையல் சோடா உப்பு  வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.
நான் பொதுவாக சமையல் சோடா சேர்ப்பது இல்லை.

தாளித்து கொட்டி கலந்து 10 or 15 நிமிடங்கள்  ஊறவிடவும். இட்லி மாவு பதமாக வந்து விடும்.  இட்லியாக வார்க்கவும்

 

                                                  இப்போது  ரவா இட்லி ரெடி...! 

                       மணமாக இருக்கும். சுட சுட  சட்னியுடன் பரிமாறவும்




                                                          தயிர் ரவா இட்லி


ரவாஇட்லி - 2
தயிர் - 3/4 கோப்பை
கொத்தமல்லி
உப்பு

தாளிக்க வேண்டியது
எண்ணெய்
வர மிளகாய் - 1

கடுகு
உ.பருப்பு
சீரகம்


ரவா இட்லியை துண்டுகளாக ஆக்கிக் கொள்ளவும்.

தயிரில் தாளித்து போட்டு, உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கி விட்டு,
இட்லியில் சேர்த்து கலக்கி  3  நிமிடங்கள் விட்டு பரிமாறவும்.




                                புதுமையான  தயிர் ரவா இட்லி சுவைக்கத் தயார்.
                                          பார்க்கவும் அழகு சுவைக்கவும் தான்.

                                         ஒரே கல்லுல ரெண்டு மாங்கா......எப்படி....?                             


R.Umayal Gayathri


                                       முடிந்தவர்கள் comment  பண்ணவும். Thanks.

3 comments:

  1. இட்லி இப்படி ஈசியா செய்யலாமா. எனக்கு இட்லி சாப்டா வருவதே இல்லை. ஒவ்வொருத்தரின் குறிப்பா செய்துபார்க்கிறேம்.ம்ம்ம் இதையும் விடுவதாயில்லை.

    ReplyDelete
  2. இட்லி சாப்டா வர கொஞ்சம் ஈனோ..(அ) சமையல் சோடா கொஞ்சம் சேர்க்கவும். முதலில் மாவுகரைத்து ஊறவிட்ட பின் வார்க்கும் முன்பாக சமையல் சோடா போட்டு கலக்கவும். மாவு சற்று உப்பி பொங்கி வரும். பின் இட்லியாக வார்க்கவும். அப்போது மிருதுவாக இட்லி வரும்.

    விருந்தாளிகள் நிறைய பேர் வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக மாவில் சமையல் சோடா அவ்வப்போது கலந்து கொண்டு வார்க்கவும். ஏனெனில்.. முதலிலேயே கலந்து வைத்தால் நேரம் ஆக ஆக இட்லியாக வார்க்கும் போது பிரவுன் கலராக இட்லி
    மாறி வரும்.அதனால் தான். நன்றி.

    ReplyDelete