Saturday, 7 June 2014

Suez Canal & Port Said Suez Canal & Port Said சூயஸ்கால்வாய் & போர்ட் சைட் ஊர்படகு ஓடும் வீதி 
பார்த்ததுண்டோ சொல்வீர் ?


கப்பல்கள் சீறிபாயும் 
கால்வாயை கண்டதுண்டா ?

கனத்த கப்பல்கள் கண்டங்களை கடக்கும் 
கால்வாயும் இதுதான் .....

சொகுசு கப்பல்கள் சுற்றாமல் சுற்றும் 
சுகவாசல் இது தான் .....

மரக்கலங்களின் அணிவகுப்பு
மன்னர்காலத்து பரிசளிப்பு .....

மறைந்து இருக்கும் வரலாறு
மக்களுக்கு தெரியாது .....

சுகமாய் ஒரு கால்வாய்
சூயஸ் கால்வாய் .....

முன்னோர்களுக்கு
முத்தாய் ஒரு வணக்கம்
முயற்சிக்கு முன்னோர்கள்
என்றும் ஒரு எடுத்துக்காட்டு .....!!!!!!!


( 2012 டிசம்பரில் எழுதிய கவிதை. ப்ளாகரில் (2013 Oct) முதல் பதிவு செய்து இருக்கிறேன்.  இதற்கு பொருத்தமாக இருந்ததால் மேலே போட்டிருக்கிறேன்)  

சூயஸ் கால்வாய் எகிப்து நாட்டில் போர்ட் சைட் என்னும் ஊரில் இருக்கிறது. 
செங்கடலையும் மத்திய தரைக்கடலையும் இணைக்கின்றது.
நூறு மைல் நீளத்திலும், 200அடி அகலத்திலும் உள்ள இக் கால்வாய் மன்ஸாலா , டிம்ஸா, பிட்டர் என்னும் மூன்று ஏரிகளின் ஊடாக செல்கிறது.
இக்கால்வாய்  1869 இல் திறக்கப்பட்டது
அதன் முன்னர்  கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றியே பயணித்து செல்ல   வேண்டியிருந்தது ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான போக்குவரத்தை இது  மிக  இலகுவாக்குகிறது.

(சூயஸ் கால்வாய் மத்தியதரைக்கடலில் இருந்து ஆரம்பித்து செல்வது அதனை ஒட்டுய நடை பாதை .- புகைப்படம்)இந்து  மகாசமுத்திரத்தை  அடைய  வசதியாக  இருப்பதால், உலக  நவீனக்  கப்பல்கள் யாவும்  சூயஸ் கால்வாயைத்  தவறாது  பயன்படுத்திக்  கொள்கின்றன.


           (நவீன கப்பல்கள் வந்து நிற்குமிடம் - புகைப்படம்)

இக் கால்வாய் வழியாகவே தினமும் 50 கப்பல்கள் செல்கின்றன. ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய 25,000 கப்பல்கள் செல்கின்றனவாம்.
அலைகள்  மூலம்  கால்வாயில்   அரிப்பைத்  தடுப்பதற்காக கப்பல்கள் ஒரு குறைந்த  வேகத்தில்  பயணிக்க  வேண்டும்.  கால்வாய்யைக்   கப்பல்கள் கடந்து  செல்ல  சுமார்  11  முதல்  16  மணி   நேரம்   எடுக்கின்றது.   .
 
                    சூயஸ்  கால்வாயில்  மிக அருகருகே     இரண்டு   கப்பல்கள்  செல்ல போதுமான  அளவில்  இடம் இல்லை. அதனால் காலையில் மத்திய தரைக் கடலில் இருந்து 25 கப்பல்கள் கால்வாயை உபயோகப் படுத்துகின்றன. மதியத்தில் செங்கடலில் இருந்து வரும் கப்பல்கள் வருகின்றன.
இதனால் மத்திய தரைக் கடலில் உள்ள கப்பல்கள் கடலில் காத்திருந்து மறுநாட்கள் செல்வதால் நாம் நிறைய கப்பல்களைப் பார்த்து மகிழலாம். வரிசையாக நிற்கும் கப்பல்களால் இரவில் அவற்றின் மின்விளக்குகள் அழகாக தெரியும். கடலுக்கு அந்தப்பக்கம் ஊர் இருப்பது போல் தோன்றும்.
இரவில் வந்து கொண்டிருக்கும் கப்பலைப் பார்த்தால் தெப்பத் திருவிழாவில் மிதக்கும் தெப்பம் போல் காட்சியளிக்கும்.. 
கப்பல் தளத்தில் கண்டெய்னர் அடுக்கியிருப்பது பார்த்தால் தீப்பெட்டி அடுக்கினார்ப் போல் நமக்கு பார்க்கத் தெரியும்.  சொகுசுக் கப்பல்கள் பிரமிப்பை ஏற்படுத்தும். சில சொகுசுக் கப்பலகள் இரண்டு நாட்கள் சுற்றுலா வந்தவர்களுக்காக நிற்கும். இங்கிருந்து பேருந்து மூலம் பிரமிடு, மற்றும் இதர இடங்களைச் சுற்றிப் பார்க்கச் செல்வார்கள். 

இங்கு கடல் உணவு பிரசித்தம். சூயஸில் மற்றும் கடலில் மீன் பிடிப்பு நடை பெறுகிறது. மாட்டுக்கறி இவர்கள் உணவில் முக்கிய இடம் வகிக்கிறது. கடைகளில் மாடுகள் உரித்த நிலையில் தொங்கவிடப்பட்டு இருக்கும். அதன் முகங்களை கம்பிகளில் மாட்டி வைத்து இருப்பர். ரம்ஜான், அப்போது இத்தோரணங்கள் அதிகமாக இருக்கும். சைவ உணவுகள் - காய்கறி பீஸா, தமயா (ஆமவடை போல் பருப்பு வடை),கோஸரி ( பாஸ்தா + வெங்காய பக்கோடா, தோலுடன் கூடிய சிகப்பு முழு துவரம் பருப்பு,சாதம்,சாஸ்,மிளகாய் சாஸ் இவற்றின் கூட்டுக் கலவை)
       (சூயஸ் கால்வாயின் நிர்வாக அலுவலகம் - புகைப்படம்)  

போர்ட் சைட்டை இக் கால்வாய் பிரித்துச்செல்வதால் பிரிக்கப்பட்ட இடங்கள்  போட் சைட் மற்றும் போட் பார்டு என தனி ஊர்களாக உருமாறி இருக்கிறது. இவற்றிற்கு இடையே ஆன போக்குவரத்துக்கு Ferry இயக்கப்படுகிறது. இரண்டு 

                  (Ferry நிற்குமிடம் போர்ட் பார்டில்இருந்து - புகைப்படம்)


பக்கத்திலும் மூன்று Ferry கள்  நிற்க அமைப்பு உள்ளது. அடுத்தடுத்து தொடர்ந்து Ferry கள் போய் வந்து கொண்டு இருப்தால் போக்குவரத்து இலகுவாக உள்ளது. இதில் ஊர்திகளும் பயணம் செய்கின்றன. அவைகள் ஏறி இறங்குவதே நன்றாக இருக்கும். கட்டணம் ஏதும் இல்லை. இதன் அருகாமையில் தான் சூயஸ் கால்வாயை நிர்வகிக்கும் அலுவலகம் இருக்கிறது. பாதுகாப்பு படை இராணுவத்தின் கண்காணிப்பு எப்போதும் இரண்டு பக்கங்களிலும் உள்ளது. கடற் பறவைகளை இங்கு கண்டு மகிழலாம்.
                      (கண்காணிப்பு சிறு கப்பல்)

 போட் பார்டில் இருந்து மக்கள் பொரும் பாலும் எல்லா வற்றிற்கும் போட் சைடுக்குத்தான் வரவேண்டும். போட் பார்டில் புதன் கிழமை இவ்வூரின் நடன நிகழ்ச்சி நடை பொறுகிறது. 
முதலில் இங்கு பெரும் பான்மையினர் கிறுஸ்துவர்களாக  இருந்து உள்ளனர். நிறைய மக்கள் மதம் மாறி இப்போது முகமதியர் ஆகிவிட்டனர். மற்ற முகமதியர் நாடு போலல்லாமல் இங்கு பெண்கள் சற்று சுதந்திரமாக இருக்கிறார்கள். 
இவர்கள் அருந்தும் தேநீர், குளம்மிகளில் பால் சேர்த்துக் கொள்வதில்லை. பசும் பால், எருமைப் பால் இரண்டும் கிடைக்கும். ஆனால் கோவா எதுவும் இங்கு உபயோகத்தில் இல்லை. தேநீர் கடைகள் சிறிய உணவு விடுதி போல் தான் இருக்கும். அருந்த வருபவர்கள் நிதானமாக அருந்தி, சிலர் பொழுது போக்கிற்காக சில விளையாட்டுகள் விளையாடுவார்கள்.
சில தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஆனாலும் முக்கியத் தொழில் கப்பல்களை நம்பித்தான் உள்ளது. சுற்றுலா, மற்றும் இறக்குமதி பொருட்கள். உலகத்தைச் சுற்றி வருபவர்களை இங்கு காணலாம். 
இங்கு சீதோஷனம் நன்றாக இருக்கும். July & august தான் இங்கு சித்திரை வைகாசி போல கோடைகாலம். குளிர் காலத்தில் குளிர் மிக அதிகமாக  இருக்கும். திடீர் திடீரென குளிர் அதிகமாகி சடாரென மாறி விடும். குளிர்க் 

 (சூயஸ் காய்வாயில் பயணித்த வண்ணம் சூயஸ் அலுவலகம்,மற்றொரு Ferryயும் வந்து கொண்டு இருக்கிறது. - புகைப்படம் )


காற்று அடித்து தள்ளி விடும். பனிமூட்ட மாக இருப்பதால் ஒரே புகை போல் இருக்கும். என்னடா… பனி இருந்தால் புகை போலத்தானே இருக்கும் என நீங்கள் நினைப்பது சரிதான் நான் இல்லை என்று சொல்லவில்லை…… ஆனால் இதே போல் மணற்புகையும் இங்கு வரும். பாலைவனப் புயல் காற்றும் திடீரென அதிக வெப்பத்துடன் அடிக்கும். மணற் துகள்களின் மூட்டம் இருக்கும். இந்நாட்டின் தலை நகர் கைரோவில் தான் பாலை வனம் இருக்கிறது. இந்த ஊரின் பாலை வனத்தில்  தான் உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடும் உள்ளது. ஊர், இந்தப் பக்கம் பாலைவனம் அந்தப் பக்கம்.  இவ்வூரின் குறுக்கில் தான் வற்றாத ஜீவநதி நைலும் செல்கிறது. அதிசயம் அல்லவா…? இறைவனுடைய படைப்பின் அருள் என்பதைவிட…..வேறு என்ன சொல்வது. 

மசூதிகள் எக்கச்சக்கமாக இருக்கிறது. தேவாலயங்கள் சற்று குறைவாக இருக்கிறது. கோவில்கள் ஒன்று கூட இவ்வூரில் இல்லை. இந்தியர்கள் இவ்வூரில் 200 பேர்வரை இருக்கலாம்.  


( சூயஸ் கால்வாய் செங்கடல் நோக்கி செல்லும் பாதை - புகைப்படம் )
கீழே முந்தய சுற்றுலா பதிவு....... Link சேர்த்து உள்ளேன் படிக்காதவர்கள் பார்க்க எளிதாக இருக்கும் என்பதால்.

Belum Caves - பூமிக்குள் ஒரு சுற்றுப்பயணம் போவோமா..?

http://umayalgayathri.blogspot.com/2014/02/belum-caves.htmlஆர்.உமையாள் காயத்ரி.


5 comments:

 1. அருமையாக சரித்திர விசயங்களை தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள் நன்றி நேரமிருப்பின் எமது வலைப்பதிவை காணவும் நன்றி.
  Killergee
  (தேவகோட்டையான்)

  www.killergee.blogspot.com

  ReplyDelete
 2. புள்ளி விவர கணக்குகள் எல்லாம் துல்லியமாக சொல்லுகிறீர்கள்.

  நீங்கள் பதிவு இடும்போது, புகைப்படத்தை இணைக்கும் பொத்தானுக்கு இடது புறத்தில் இணைப்பு/LINK என்று ஒரு பொத்தான் இருக்கும் அதை கிளிக் செய்து இந்த முகவரியை http://umayalgayathri.blogspot.com/2014/02/belum-caves.html அதில் கொடுத்தால், இன்னும் சுலபமாக இருக்கும்.

  தற்சமயம், நாங்கள் இந்த லிங்கை copy paste செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி செய்தால், சும்மா கிளிக் பண்ணினால் போதும்.

  ReplyDelete
 3. Link பற்றி தெரிவித்ததற்கு நன்றி.

  பார்த்தது,கேள்விப் பட்டது, படித்து தெரிந்து கொண்டது இவற்றை மற்றவர்களும் அறிய எளிதாக இருக்கும் என்பதால் குறிப்பிட்டேன்.

  ReplyDelete
 4. அப்படியே எங்களையும் கூட்டிச்சென்றுவிட்டீர்கள் உங்களுடன் அவ்வளவு அழகா சுற்றுலாவினை பகிர்ந்திருங்கீங்க. படங்கள் எல்லாமே அருமை,அழகு. நீங்களா படத்தில் இருப்பது?.நன்றிகள்.

  ReplyDelete