Monday 14 July 2014

கடல் - கவிதை -25

                                                                           கடல்





உப்புப்  பாலின்  நுரைகண்டேன்
உவப்பாய்  காற்றின்  ருசிகண்டேன்
மணலில்  கால்  தடம்கண்டேன்
மனம்  சற்று  நிற்கக்கண்டேன். 



காலியாய்  கடலின்  முன்நின்றேன்
கவிதை  தானாய்  பெருகநின்றேன்
வரிசையாய்யழைத்த  அலையின்முன்  கை
வாரியணைக்க பயம்  கொண்டேன்

காலைதழுவிட  விட்டாலோ  நீ
கட்டிய  ஆடைக்கு முயன்றுமுத்தமிடுவாய்
முத்தம்தவிர்க்க  முயன்றேன்  தினம்
முடியாமல்  தோற்றேன் உன்னிடம்தினம்

கொடுக்கும்  குணமுனக்கு  அட்சயமாம்
கொட்டாரம்  வந்தால் விடுவாயா.?
அன்பு  முத்தம்  ஆசையாய் 
ஆனந்தக்  கவிதை  ஊமையாய்.



ஆர்.உமையாள் காயத்ரி.



10 comments:

  1. வணக்கம்

    கவிதை வரிகள் மிக அற்புதம் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உடன் வந்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரரே.

      Delete
  2. உப்புக்கவிதையும் இனிக்குமாம்,,,,
    கடலும், மணலும் இணக்கமாம்,,,
    ஊமை வரிகள்கூட பேசுமாம்,,,

    கவிதை நன்று சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...கவிதையிலே...கருத்திட்டமைக்கு நன்றி சகோதரரே.

      Delete
  3. கலையும் நினைவுகள் காற்தடம் காண
    அலையொடு பாடியதோ ஆழ்ந்து!

    அருமையான நினைவலைகள்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கலையும் நினைவுகள் காற்தடம் காண
      அலையொடு பாடியதோ ஆழ்ந்து!

      நன்றி. சகோதரி.

      Delete
  4. "காலைதழுவிட விட்டாலோ நீ
    கட்டிய ஆடைக்கு முயன்றுமுத்தமிடுவாய்
    முத்தம்தவிர்க்க முயன்றேன் தினம்
    முடியாமல் தோற்றேன் உன்னிடம்தினம்" என்ற
    சிறந்த வரிகளை விரும்புகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ரசித்து,தொடர்ந்து, கருத்திடுவதற்கு நன்றி சகோதரரே.

      Delete
  5. ஆஹா அருமையான ரசனைமிக்க ஒரு கவிதை.
    "//கட்டிய ஆடைக்கு முயன்றுமுத்தமிடுவாய்
    முத்தம்தவிர்க்க முயன்றேன் தினம்
    முடியாமல் தோற்றேன் உன்னிடம்தினம்//"

    அட, கடல் அலையையும் காதலின் வரிகளாக்கி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. கடலும்..அலையும் அற்புதமான ஒன்றல்லவா..?

      ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரரே..

      Delete