Monday 7 July 2014

சிட்டுக்குருவி - கவிதை 23

மரம்  கொள்ளாத  சிட்டுக்குருவியைக்  கண்டுகளித்து,  பரவசப்பட்டேன். அதன் ஆட்டத்தை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

வானில் பறந்து, பறந்து என்னை சந்தோஷக் கடலில் ஆழ்த்தியது.

சென்னையில் சிட்டுக்குருவி குறைந்து வருகிறது, அட்டைப்பெட்டியை வீடுகளில் வைத்தால் அது வந்து தங்கும் என முன்பு படிந்தது ஞாபகம் வந்தது.

சின்ன சிட்டுக்குருவிக்காக...அந்த செல்லக் குட்டிகளுக்காக.. அவைகள் பெருகி வாழ வேண்டும் என நினைத்து, என் பிறந்த நாளின் பரிசாக இந்தக் கவிதையை சமர்ப்பிக்கிறேன்.

கவிதை

சிட்டுக்குருவி...!   குட்டிக்குருவி...!
அப்பப்பா...  உன்  சிறகடித்தல்
மின்னலாய்யல்லவா..?  இருக்கிறது
என்ன  வேகம்...!  என்ன  லாவகம்...!


உன்  நடவடிக்கை  தான்
பரபரப்பாய்  இருக்கிறதே....!!!
துறு  துறுவென பார்க்க  பார்க்க  இனிக்கிறதே.
ஆனால்...  என்ன...  கண்டு  களிக்கையிலேயே
மாயமாய்  மறைந்து  விடுகிறாய்

ஒரு  மரவீடு
கூட்டுக்  குடும்ப  வாழ்க்கை  -  அதில்
குதூகலமாய்  பேசி  கும்மாளம்  அடிக்கிறீர்கள்
அணி அணியாய்  வானில்  பறந்து  திரிகிறீர்கள்
ஓடிப்  பிடித்து  நீங்கள்  விளையாடுவது
ஒய்யாரமாய்த்தான்  இருக்கிறது

எங்கு  சுற்றித்  திரிந்தாலும்
அவ்வப்போது  இளைப்பாற
வீடு  வந்து  சேர்ந்து  விடுகிறீர்கள்
க்ரீச்...  க்ரீச்...  என்று அப்போதும்
விடாமல்  கதைத்துக்  கொண்டே  இருக்கிறீர்கள்
உங்கள்  மொழி  புரியவில்லை  -  ஆனால்
கேட்க  இனிமையாக  இருக்கிறது

சந்தோஷமாகத்தான்  நீங்கள்  கதைத்துக்  கொள்கிறீர்கள்
என்று  தான்  என்  மனம்  சொல்கிறது
உங்கள்  துயரம்  கூட...
எங்களுக்கு  புரிவதில்லை  -  ஏனென்றால்
மனிதர்கள்  போல்  நீங்கள்  முடங்கி  விடுவதில்லை
உல்லாசம்  உல்லாசம்  உல்லாசமாய்  இருக்கிறீர்கள்

சாயங்கால  வேளையிலோ...!!!
வந்த  கதை  போன  கதை  பேசி 
என்னமாய்  பரி  மாறிக்கொள்கிறீர்கள்....!!!


மரத்தில்  இலைகள்  அதிகமா...?  இல்லை
மரத்தில்  அமர்ந்த  நீங்கள்  அதிகமா...?
பட்டி  மன்றமே  வைக்கலாம்  போல...

சும்மா...  இருக்க  மாட்டாயா...
யானை  மாதிரி  அசைந்து  கொண்டே  இருக்கிறாயே...?  என்பது
உங்களுக்கும்  சாலப்  பொருந்தும்

உங்களைப்  பார்த்தால்  போதும்
உற்சாகமும்  சுறுசுறுப்பும்  தானாக  வந்துவிடுகிறது
கைபேசிக்  கோபுரங்களின்
காந்த  அலை  உங்கள்  எதிரி
பாவம்  நல்லதே  செய்யும்  உங்களுக்கு
மனிதனின்  சுயநலம்  தெரியாது...

உங்களுக்கு  இப்போது  வீடு  கிடைப்பதே....!
சிரமமாய்  அல்லவா  இருக்கும்...?
அதான்....
நாங்கள்  மரத்தை  வெட்டிக்  கொண்டிருக்கிறோமே...
அன்பால்  சிலர்
அட்டைப்  பெட்டி  வீடு  கொடுத்தாலும்
ஆசையாய்  வாழ்கிறீர்கள்...!!!
சிறிய  உடல்....!!!  பெரிய  உள்ளம்...!!!
சிட்டுக்குருவி...  குட்டிக்குருவி...!!!


சிட்டுக்குருவிப் புகைப்படம்  - கூகுளுக்கு நன்றி.


ஆர்.உமையாள் காயத்ரி.



9 comments:

  1. வணக்கம்
    சகோதரி

    சின்னச் சிட்டே எங்கள் செல்லச் சிட்டே
    உன் கருணை உள்ளம் கண்டு
    மனிதன் வாழும் வீட்டில்
    நீயும் ஒருவராய் வாழ்கிறா.

    தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. கவிதை மிக அருமையாக உள்ளது
    என்ன உள்ளம் இப்படியான கருணை உள்ளங்கள்இருக்கும் போது சிட்டுக்குருவிகள் நிச்சயம் வாழும் என்பது உண்மை பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. //சின்னச் சிட்டே எங்கள் செல்லச் சிட்டே
      உன் கருணை உள்ளம் கண்டு
      மனிதன் வாழும் வீட்டில்
      நீயும் ஒருவராய் வாழ்கிறா.//

      அழகாக இருக்கிறது கவிதை. நன்றி.

      Delete
  2. ரசித்தேன்... [இனி இப்படித் தான் ரசிக்கவும் வேண்டுமோ...?]

    ReplyDelete
    Replies
    1. நன்றி. எப்படி வேண்டுமானாலும் ரசிக்கலாம்...இப்படியும் கூட ரசிக்கலாம்

      Delete
  3. சிட்டுக்குருவி இனம் அழிந்து வரும் வேளையில் நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! நன்றி!

    ReplyDelete
  4. சிட்டுகுருவிகளின் வாழ்வாதாரம் மானிடனால் வதைக்கப்படுகிறது என்பது உண்மையே சகோதரி.
    பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சிட்டுக்குருவியை எப்படி ரசிக்க வேண்டும் என்று படம் எடுத்துவிட்டீர்கள்.

    கடைசி பத்தி - சிந்திக்க வைக்கக்கூடிய பத்தியாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete