Wednesday 30 July 2014

கொத்சு பொடி

கத்தரிக்காய் கொஸ்துக்கான பொடி இது.


முன்னமே செய்து வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் போது எளிதாக இருக்கும்.

முடிந்தவர்கள் அவ்வப்போது செய்து கொள்ளலாம். வாசம் படு ஜோராக இருக்கும்.

ஓ...     இம்புட்டுத்தானா...?





தேவையான பொருட்கள்

மல்லி – 10 மே.க
க.பருப்பு – 10 மே.க

மிளகாய் – 22 – 25





எல்லாவற்றையும்  எண்ணெய்யில்லாமல் வறுத்துக் கொள்ளவும்.

பொடியாக செய்தால் ......இதோ....தயாரித்து விட்டீர்களே....!!!






குறிப்பு:

இதை சாம்பாரிலும் போடலாம். அன்று சாம்பார் வித்தியாசமாக, மணமாக இருக்கும். சாம்பாரில் போடும் போது கடைசியாகத்தான் போட வேண்டும் அப்போதுதான் அதன் மணம் வீட்டை தூக்கும்.

வீடு பறந்து போனால் நான் பொறுப்பல்ல சாமி...ஹி...ஹி...!!!



19 comments:

  1. இப்படியெல்லாம் சொல்லி நீங்கள் தப்பித்துக்கொள்ள முடியாது.
    இங்கு எங்கள் வீடு பறந்து போனால், உங்கள் ஊரில் எங்களுக்கு ஒரு வீடு வாங்கி கொடுக்க வேண்டும். ஆமாம் சொல்லிப்புட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. இங்கு வெளிநாட்டினர் வீடுவாங்க முடியாதுங்கோ...
      நன்றி.

      Delete
  2. மணம் வீட்டை தூக்குமா ? கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம்.

    ReplyDelete
    Replies
    1. சாப்பாட்டுக்கு யோசிக்கவே கூடாதுங்கோ...
      நன்றி

      Delete
  3. அட... இவ்வளவுதானா?..:)

    அருமை! பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ...அவ்வளவே தான்..
      நன்றி

      Delete
  4. அவனவன் லட்சகணக்கில் பணம் கொடுத்து கிரேன் வாங்குகிறார்கள் இனிமே இந்த பொடிமட்டும் தயாரித்தால் கிரேன் வாங்குற செலவு குறைந்துவிடும்.... சூப்பர் ஐடியாங்க........

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க..உங்களுக்கு மட்டும் தான் ஐடியா...வருமா..எங்களுக்கும் வருமுங்கோ..
      நன்றி

      Delete
  5. சுவையான சமையல் குறிப்புக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ் அவர்களே

      Delete
  6. வணக்கம்
    சகோதரி

    அருமையான சமயல் குறிப்புசமைத்து பார்க்கிறோம்...பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் அவர்களே

      Delete
  7. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. பயனுள்ள பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  9. அது எல்லாம் சரி... இதில "கொத்து கறி" போட்டா நல்லா இருக்குமா, அதை சொல்லுங்க...

    ReplyDelete
    Replies
    1. "கொத்து கறி" - நீங்கள் சாப்பிடுபவராக இருந்தால் முயன்று பாருங்கள்.

      சைவத்தில் செய்வது தான் தெரியும் ஐயா. நன்றி.

      Delete
  10. அட இவ்வளவு தானா அப்பாடா தப்பிச்சேண்டா சாமி. அதுசரி வீடு போயிடுமே அப்புறம் நடுத் தெருவில நிக்கிற மாதிரி ஆயிடுமில்ல அதான் யோசிக்கிறன். நன்றிம்மா தோழி...!

    ReplyDelete