Thursday 31 July 2014

ஸ்வீட் கார்ன் ரைஸ்


சோளத்தில் ஒரு கலந்த சாதம்.....

சுவையும் வண்ணமும்  அபாரம்.....

சத்தும் சாதமும் பிரமாதம்.....

வாங்க செய்யலாம் வரப் பிரசாதம்...

என்னங்க ரெடியாயிட்டீங்க

போல..போகலாம்.




தேவையான பொருட்கள்
அரிசி - 1 கோப்பை ( உளக்கு)  சாதமாக முன்பே  செய்து கொள்க.ஆறவிடவும்.
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - 1/2 துண்டு
பூண்டு - 3
சோளம் - 1 டின்
கொத்தமல்லி - சிறிது
மிளகாய்ப் பொடி - 1/4 தேக
உப்பு - தே.அ



தாளிக்க வேண்டியது
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலம் - 2
சோம்பு - 1/4 தே.க
பிருஞ்சி இலை - 1/2
மிளகு சீரகப் பொடி - 1/4 தே.க
முந்திரி - 5
நெய் - 3 மே.க




நெய் விட்டு முந்திரி போடவும்.





தாளிக்கவும்.











மிளகு சீரகப் பொடி போடவும்.







 பச்சைமிளகாய்.பூண்டு,இஞ்சியை
இடித்து வைத்துக் கொள்ளவும்.






அதை சேர்த்து வதக்கவும்..






                                                                                 சோளத்தில் உள்ள நீரை வடிகட்டி விட்டு சேர்க்கவும்.
           
                       (அல்லது)

புதிதான சோளத்தை வேக வைத்து சேர்த்துக் கொள்ளவும்          






மிளாகாய்ப் பொடி சேர்க்கவும். அதன் பச்சை வாசம் போன பின்பு  உப்பு சேர்க்கவும்.






சாதம் சேர்த்துக் கிளறவும்.









கொத்தமல்லி தூவவும்.







புதிய சுவை....
புதிய நிறம்....
புதிய மணம்.... 
புதிய வகை சாதம்...!!!
புதிதாய்  உண்டு மகிழுங்கள்.


வரும் அனைவரும் ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்.

நன்றி.



12 comments:

  1. Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  2. வணக்கம்
    சகோதரி
    பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊறுது..... அருமையான சமையல். பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  3. உண்மையிலேயே எனக்கு இது ஒரு புது வகையான உணவு தான். செய்து பார்க்கிறோம்.
    பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  4. புது டிஷ்ஷா இருக்கே! அருமை!

    ReplyDelete
  5. தங்கள் பதிவுகள்
    பயன்தரும் தொடர்கள்
    தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  6. சமையல் தெரியாதவர்கள் கூட படித்து செய்யலாம் போலயே....

    ReplyDelete
    Replies
    1. அப்ப, நீங்க செய்யப்போறீங்கன்னு சொல்லுங்க !!!

      Delete
    2. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி. சொக்கன் கேட்டது போல நீங்க செய்யப் போறீங்களா..செய்தால் எப்படி என்று வந்து சொல்லுங்கள்.

      Delete