Monday 18 August 2014

நெய் காய்ச்சலாமா....?


இப்பொழுதெல்லாம் கடைகளில் தாயாரான நிலையில் நெய் கிடைக்கிறது. 
இருந்தாலும் நல்ல வெண்ணெய் கிடைக்கின்ற இடத்தில் நாமே நெய் தயார் 
செய்தால் அதன் மணமே தனி தான்.

ஒரு காலத்தில் பால்க்காரப் பெண்கள் மாதாமாதம் வெண்ணெய் கொண்டு 
வந்து நம் வீட்டிலேயே உருக்கி தந்து விட்டு போவார்கள்.

அது வாடிக்கையாக இருக்கும். விஷேச தினங்கள் என்றால் முன்பே எவ்வளவு வெண்ணெய் வேண்டும் எனக் கேட்டுக்கொள்வார்கள்.




ஆத்தா மக்க சொக்கியமா...? அப்பச்சி சொக்கியமா...? ஆயா,அப்பத்தா எல்லாம் எப்படி இருக்காக...? பிள்ள குட்டிக என்ன படிக்குதுக என எல்லோரையும் நினைவில் கொண்டு கோட்பார்கள்.

அன்று கொடுக்கல் வாங்கலில் அன்பும் அன்யோன்யமும் இருந்தது. வெளியூரில் இருந்து வந்தவர்கள் ஏதாவது சடாரெனக் கேட்டு விட்டால்.....தாயா பிள்ளையா பழகினோமே...இப்படி பொசுக்குனு கேட்டுப்புட்டீகளே...? என்பார்கள்.

அவர்கள் பேசுவதும் அவர்கள் நெய் காய்ச்சும் விதமும் சுவாரஸ்யமாக இருக்கும். 
     

நாமும் நெய் காய்ச்சலாமா...?

தேவையான பொருட்கள்
வெண்ணெய் - 400 கிராம்
வரமிளகாய் - 1
உப்பு - 1 சிட்டிகை
சீரகம் - 1/4 தே.க
கருவேப்பிலை - சிறிது    ( அல்லது ) முருங்கை கீரை கொழுந்து - சிறிது




 வெண்ணெய்யை அடி கனமான பாத்திரத்தில் இட்டு வேக விடுங்கள்

அது வேக வேக மேலே மிதக்கும்
வெண்தன்மை இளகி,இளகி வரும்.கரண்டியில்பார்த்தால் அடியில் உள்ள திடமானது வெள்ளையாக தெரிகிறது இல்லையா...? அது வேக வேக (ப்ரவுன் கலர்) சற்று நிறம் மாறி சிவக்க ஆறம்பிக்கும் போது











இப்பொருட்களை அதில் போடவும்.












கருவேப்பிலையின் ஈரப்பதம் போன பின் அடுப்பை அணைத்து விடவும். .

 அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். பாத்திரச் சூட்டுக்கே
அது இன்னும் நிறம் மாறும்.

எனவே இங்குதான் கவனமாக
இருக்கவேண்டும். இல்லையெனில்
முறுகி விடும் என்பார்கள்.



 ஆற ஆற நுரை அடங்கி விடும்.



பொன்னிறமாக தெரிகிறதா....?
ஆறிய பின் நாம் வைக்கும் பாத்திரத்தில் மாற்றி விடலாம்.



அடியில் தங்கும் கக்கல் நிறைய இருந்தால் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் சிறிது எடுத்துக் கொண்டு மிளகு சீரகத்தூள், உப்பு சேர்த்து சூடு பண்ணி சுடு சாத்தை அதில் சேர்த்து கலந்து உண்ண    உம்....உம்.....  வாயே திறக்க முடியலையே...அம்புட்டு ருசியாவுல்ல இருக்கு...!!!





12 comments:

  1. ஆய்ச்சியர் கை மணக்க, நெய் காய்ச்சிய அந்நாளைய நினைவுகளை சுவையாகச் சொன்னீர்கள். நெய் காய்ச்சிய பிறகு தங்கும் அந்த முறுகலான முருங்கைக் கீரையின் ருசியே தனிதான். சமையல்கட்டில் கேமராவும் கரண்டியுமாக
    செய்முறையையும் ந்ன்கு எளிமையாகச் செய்திட படங்களோடு விளக்கியமைக்கு நன்றி.
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. நெய் கக்கல் சாதம்... அது அமிர்தம்.. நன்றி ஐயா..

      Delete
  2. போட்டோவே நாக்குக்கு சுவையை தரும் போலயே.....

    ReplyDelete
    Replies
    1. இது ரஜினிகாந்த் ரோபோவில் புத்தகத்தை பார்த்தவுடன் படித்தது போல் அல்லவா இருக்கிறது..!!! நன்றி ...

      Delete
  3. ஆஹா இங்க வரைக்கும் கம கமனு மணக்குதுங்க! கறிவேப்பிலை மணமும் அருமையா இருக்கும்.. கசண்டு என்று சொல்லுவோம் கக்கலை...அதில் சாதம் கலந்து சிறிது பருப்பும் இட்டு கலந்து சாப்பிட ...ஸ்ஸ்ஸ்பா என்ன ருசி!

    ReplyDelete
    Replies
    1. கசடு என்று சொல்லுவோம்......அதற்கு சரியான தமிழ் வார்த்தை கசண்டு என இன்று தெரிந்து கொண்டேன்.

      //அதில் சாதம் கலந்து சிறிது பருப்பும் இட்டு கலந்து சாப்பிட ...ஸ்ஸ்ஸ்பா என்ன ருசி!//

      ஆம் அதன் ருசியே தனிதான்.

      நன்றி ஐயா.

      Delete
  4. உண்மையில் வாசம் இங்க வரைக்கு வீசுது. இப்பதான் அறிந்துகொண்டேன். நெய் காய்ச்சும் முறை.

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் வாசம் இங்க வரைக்கு வீசுது. இப்பதான் அறிந்துகொண்டேன். நெய் காய்ச்சும் முறை.//

      நன்றி பிரியசகி....

      Delete
  5. நெய் காய்ச்சும் விதத்தை பாங்காய் சொல்லித் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  6. வணக்கம்
    சகோதரி

    வித்தியாசமான முறையில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    நெய் என்றவுடன் ஓடிவந்தது வீட்டு நினைவுதான் பசு நெய்தான் எங்கள் வீட்டில் உபயோகிப்பது ஏன் என்றால் பசு மாடு அதிகம்... அம்மா உருக்கி உருக்கி போத்தலில் அடுக்கி வைப்பார்கள் எப்போது தாயகம் கடந்து வாந்தேன் அப்போது எல்லாம் மறந்தாச்சி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தாயகம் திரும்புங்காலம் விரைவில் மலரட்டும்.
      நெயின் வாசம் வீட்டில் பரவட்டும்.
      அன்பு மணத்தின் சுகந்தம் மகிழ்ந்து நிறையட்டும்
      தாய்நாட்டின் மடி திரும்ப நிறையட்டும்.

      நன்றி

      Delete
  7. இது
    என் மனைவிக்கு மட்டுமல்ல
    எல்லோருக்கும்
    நல்வழிகாட்டலே!

    ReplyDelete