Wednesday 27 August 2014

Ragi DryFruits Kozhukattai


விநாயக சதுர்த்திக்கு புதிய வகை பூரணக் கொழுக்கட்டை....!!!




இனிப்பு சாப்பிடக் கூடாதவர்களும் இதை கூட இரண்டு சாப்பிடலாம்.

அவ்வளவு ஆரோக்கியம்னு சொல்ல வந்தேன்.

புதிய முயற்சி..... செவ்வாய்க் கிழமை லலிதா சகஸ்ரநாமப் பாராயணம் எங்கள் இல்லத்தில்,

பிரசாதமாய் செய்தேன்... நன்றாக வந்தது. நன்றாக இருக்கிறது என தோழிகள் சொன்னார்கள்.

புதிய முயற்சி.... அதனுடன் காரமும் செய்ய வேண்டும் இல்லையா...? அதற்கு கட்லட் செய்தேன்.

அதுவும் நன்றாக வந்தது. அதை அடுத்த பதிவில் போடுகிறேன்.



தேவையான பொருட்கள்

மாவிற்கு

ராகி மாவு - 1 1/2 கோப்பை
வெல்லம் - 3/4 கோப்பை
ஏலம் - சிறிது
நெய் - 2 தே.க








வெல்லத்தை 1 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைய விடவும். பின் வடி கட்டிக் கொள்ளவும்







வடிகட்டிய வெல்ல நீரை கொதிக்க விடவும். அதில் ஏலம், நெய் விடவும்.









இப்போது மாவை சிறிது சிறிதாக போட்டு கிளறவும். 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். மாவு தயார்.






பூரணத்திற்கு தேவையானவை

தேன் - 1 1/2 மே.க
பாதாம்  
முந்திரி
பொட்டுக்கடலை
கிஸ்மிஸ்
கடலை
இது  அனைத்தையும் சமமான அளவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

நான் பாதாம் 15 பருப்புகள் எடுத்துக் கொண்டு அந்த அளவில் மற்றவற்றை எடுத்துக் கொண்டேன்.




நறுக்கிக் கொண்டு தேனில் கலந்து கொள்ளவும்.









மாவை உருண்டையாக உருட்டிக் கொண்டு குழியாக செய்து கொண்டு பூரணத்தை வைத்து கொழுக்கட்டைகளாக செய்யவும்.







இட்லிச் சட்டியில் அவிக்கவும். 5 நிமிடத்தில் வெந்து விடும்







5 மே.கரண்டி கொப்பரைத் துருவலை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.








கொழுக்கட்டை வெந்தவுடன் சற்று சூடாக இருக்கும் போதே கொப்பரைத் துருவலில் பிரட்டி எடுக்கவும்.

சூடலில்லை என்றால் ஒட்டாது.









                    புதுமையான ராகிபருப்பு...பூரணக் கொழுக்கட்டை தயார்...!!!






8 comments:

  1. ஆஹா கொழுக்கட்டை அல்வா கட்டிபோல அழகாக இருக்கிறதே ? ரசித்து பார்க்க முடிகிறது ஆனால் ? ருசித்து பார்க்க முடியவில்லை... இதுதான் விநாயகரின் விளையாடலோ.... ?

    ReplyDelete
  2. புதிய ரிசிப்பி....கண்டிப்பாகச் செய்து பார்க்க வேண்டும்.....சத்துள்ளதும் கூட!

    மிக்க நன்றி பகிர்வுக்கு!

    ReplyDelete
  3. வித்தியாசமான குறிப்பு. செய்துவிட்டு சொல்லலாம் என நினைத்தேன். ராகியில் கேள்விப்படாத குறிப்பு.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான குறிப்பு.
      ராகியில் கேள்விப்படாத குறிப்பு.நன்றி.// ஆம்...இது என்னுடைய புதிய குறிப்பு

      புதிய தயாரிப்பு முறையில் ஏதாவது செய்ய வேண்டும் , அதுவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினத்தேன்...முயன்றேன். முதல் முயற்சியே சூப்பராக வந்து விட்டது.

      இங்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்து விட்டது.

      இனிப்பு நீர் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் இல்லையா... !!!


      Delete
  4. புதுமையான ராகிபருப்பு...பூரணக் கொழுக்கட்டை அருமை.

    ReplyDelete
  5. நன்றி அம்மா.

    ReplyDelete