Tuesday 26 August 2014

சாலட்

சத்தான சாலட்...!!!
எளிமையான சாலட்...!!!
யாவர்க்கும் உகந்த சாலட்...!!!
புதுமையான சாலட்...!!!

பூ... இவ்வளவுதுதானா....?   அப்படின்னு நினைக்கிறீங்க....!!!  அப்படித்தான் நினைக்கனும்.... அப்படியே செய்யனும்...!!!

சரிங்களா....!!!

மேட்டர் ஒன்னும் பெரிசு இல்ல... வாங்க






தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்காய் - 2

ஆரஞ்சு அழகி கேரட் - 1

சிவப்பழகி தக்காளி - 1

பச்சை ஆடையுடுத்தி மஞ்சள் மேனியழகி பாசிப்பயறு - 2 மே.க
( ஊறவைத்து முளைகட்டியது )

கருப்பாகவும் இருப்பேன்,
சத்து கொடுத்து காப்பேன்  கருப்பு ஆலிவ் - 2 மே.க

(இது கடைகளில் இவ்வாறு நறுக்கி ஊறுகாய் போல கிடைக்கும் அதுதான் இது.  தண்ணீர் இல்லாமல் காயை மட்டும் எடுத்துக் 
கொள்ளவும். )


எலுமிச்சை - 1

மிளகு & சீரகப் பொடி - 1 தே.க

உப்பு - தே.அ


அவ்வளவுதுதாங்க. காய்களை நறுக்குங்க மற்றவற்றை சேருங்க...

சாப்பிட்டுப்பாருங்க...

அப்புறம் என்ன அடிக்கடி உங்கவீட்டுல இதுவந்து விடும் இல்லங்க...!!!
டாக்டர்க்கு தண்டம் எதுக்குங்க...!!!






சரி சரி கிளம்பு அப்படின்னு முனு முனுக்காதீங்க... நிறைய வேலை இருக்கு

வரேன்...!!!


வணக்கம்




6 comments:

  1. வணக்கம்
    சுவையான உணவு அழகான செய்முறை விளக்கம் பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சத்தான சாலட்...!!!
    எளிமையான சாலட்...!!!
    யாவர்க்கும் உகந்த சாலட்...!!!
    புதுமையான சாலட்...!!!

    சமையல் கலையில்கூட கவிதை சொல்லலாமோ ?

    ReplyDelete
    Replies
    1. ரசித்து செய்வதில்....கவிதை தானாக வந்து விடுகிறது.

      எதிலும்.....
      எதையும்....
      பிரிக்கமுடியாது இல்லையா...?

      ஒன்றுடன் ஒன்று கலந்து
      பரிமாறுவதே....
      எந்தன் பதிவின் நோக்கம்...!!!

      நன்றி சகோதரரே

      Delete
    2. அப்படீனாக்கா... ? ஒரே கரண்டியில சோறும், குழம்புமா ? குழம்பிடாம.... இருந்டா(DAL)ல் சரிதான்.

      Delete
    3. ஒரு எளிமையான சாலடை மிக அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!!

      Delete
    4. தங்களின் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி அம்மா.

      Delete