Wednesday, 29 October 2014

இடியாப்பம் பொரித்தகூட்டு


வெள்ளை நிறத்தில்
சிக்கலான இடியாப்பம்
சிக்கலெடுத்துண்ண...உடன்
பொரித்தகூட்டு...!!!

ஆவியில் பஞ்சாய்...
ஆவலைத்தூண்டும்...!!!
காய்கறிக் கலவையுடன்
சுவையை மிஞ்சும்...!!!

இலகுவான உணவதுவாம்
ஊட்டமாய் பருப்பும்
பலபலகாயின் ஊணும்
ஒரு சானை நிறப்பிடுமே...!!!
தேவையான பொருட்கள்.

சின்ன உ.கிழங்கு - 1
சின்ன கேரட் - 1
பீன்ஸ் - 5
சின்ன வெங்காயம் - 10
அல்லது
பெரிய வெங்காயம் -1
தக்காளி - 1
பட்டாணி - சிறிது
சோளம் - சிறிது
பா.பருப்பு - 1 1/2 மே.க
மஞ்சள் தூள் - சிறிது
கொத்தமல்லி - சிறிது


அரைக்க தேவையானவை

தேங்காய் - 4 மே.க
பொட்டுக்கடலை - 1/2 தே.க
மிளகு - 8
சீரகம் 1/2 தே.க
பச்சைமிளகாய் - 2


தாளிக்க வேண்டியவை

எண்ணெய் - 2 மே.க
கடுகு - 1/4 தே.க
வரமிளகாய் - 1
பெருங்காயம் - சிறிது
கருவேப்பிலை - சிறிது


                                                   தாளிக்கவும்


வெங்காயம் சேர்த்து வதக்கவும்.காய்களை சேர்த்து வதக்கவும்.முதலில் பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.

வதக்கிய காய்களை சேர்க்கவும்உப்பு போடவும். 1 விசில் குக்கரில் வேக விடவும்.
அரைத்ததை ஊற்றவும். 3 கொதி விட்டு கொத்தமல்லி சேர்க்கவும் 

                                                 அப்பாடியோவ் ஒரு வழியா செய்து முடித்தாச்சு....

என்னங்க கிளம்பிட்டீங்க...ஓ  செய்யப்போறீங்களா...சரி சரி...இனிமே நான் ஏதாவது சொன்னா கோச்சுக்க போறீங்க...!!!


சந்தோஷமாக செய்து உண்டு மகிழுங்கள்.

செட்டி நாட்டு சமையலில் இதுவும் ஒன்றாகும்.

இடியாப்பத்துக்கு மட்டும் இல்லீங்க... இது இட்லி, தோசைக்கும் சூப்பராக இருக்கும். 
குறிப்பு

பட்டாணி , சோளம் இல்லைனாலும் மற்றவற்றைக் கொண்டும் செய்து கொள்ளலாம்.

நன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி.

22 comments:

 1. ஆகா இடியாப்பத்துக்கு சூப்பர் டிஷ். நிச்சயம் செய்கிறேன்.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. சிட்டென முதலாய் வந்த தோழியே...
   சூப்பர் டிஷ்...தான்..ஆக்குங்கள்..

   நன்றி
   வாழ்க வளர்க
   உமையாள் காயத்ரி

   Delete
 2. இடியாப்பமும் காய்கறி குழம்பும் பசியை தூண்டுது :)
  ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் ரெசிப்பி அருமை

  ReplyDelete
  Replies
  1. அடடா..பசியைக் கிளப்பி விட்டுட்டேனா..

   நன்றி
   வாழ்க வளர்க
   உமையாள் காயத்ரி

   Delete
 3. யதார்த்தமிகு பதார்த்தம்
  யாவருக்கும் நல்விருத்தம்
  நோயற்ற வாழ்வுக்கு
  உமையாள் காயத்ரி உன் உணவே
  சமையலுக்கு நல் பொருத்தம்

  நன்றியுடன்,
  புதுவை வேலு
  http://www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. புது விருந்தாளியே வருக..வருக

   கவிதையோடு வந்தீரைய்யா
   புகழ்ந்து சென்றீரைய்யா
   தொடர வேண்டுமைய்யா
   தொடர்ந்து வருவேனய்யா

   நன்றி
   வாழ்க வளர்க
   உமையாள் காயத்ரி

   Delete
 4. ஆஹா......அருமையான உணவு சமைத்து அசத்தி விட்டீர்கள் தோழி !
  (யாருக்குத் தெரியும் நாவூற நின்ற கதை :)) )படங்கள் பசியைக் கிளப்பி
  விட்டாது அதனால் தான் இந்த ஓட்டம் :) பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்
  என் தோழியே .

  ReplyDelete
  Replies
  1. நாவூர நின்ற கதை
   தாம் செப்பி அறிந்தோம்
   வயிறு கூவியதால்
   வந்த வழி விரைந்தோட்டம்..ம்ம்


   நன்றி
   வாழ்க வளர்க
   உமையாள் காயத்ரி

   Delete
 5. பாவாலே நாவூற வைத்தீர்
  செயலாலே செய்முறை கூறி
  இடியப்பத்திற்கேற்ற பொரித்தகூட்டு என்றிருக்க
  இட்லி, தோசைக்கும் சிறப்பாக இருக்கும் என்கிறியளே!
  தொடரட்டும் தங்கள் பணி!

  ReplyDelete
  Replies
  1. பாவோடு வந்தீரைய்யா
   பாவாலே நாவூற வைத்தீர் என்றீரைய்யா


   நன்றி
   வாழ்க வளர்க
   உமையாள் காயத்ரி

   Delete
 6. இடியாப்பத்திற்குப் பொரித்த கூட்டு! காம்பினேஷன் புதியதாய்.....நாங்கள் இடியாப்பத்திற்கு கொழும்புவில் செய்யும் சொதி செய்வோம்.....மிகவும் ருசியான ஒன்று! - கீதா

  இந்த வகைப் பொரித்தக் கூட்டு சப்பாத்திக்கு.....செய்வதுண்டு...இடியாப்பத்திற்கும் செய்துவிட்டால் போச்சு.....ஹப்பா சாப்பாட்டிற்கும் கவிதை அருமை...தமிழ் சுவையும் சேர்த்து....

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் பலாக்காய், உருளைக்கிழங்கில் சொதி செய்வோம். மதிய சாப்பாட்டிற்கு மற்றும் சப்பாத்திக்கு... இங்கு அதைப் பற்றி நினைக்க முடியாது.

   ரசனைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பதற்கு ஏற்ப நாம் சொதி, பொரித்த கூட்டை மாற்றி உண்டு மகிழ்கிறோம் ஹஹஹஹா...

   தமிழ் சுவையாய் கவிதையை ரசித்தமைக்கு நன்றி

   நன்றி
   வாழ்க வளர்க
   உமையாள் காயத்ரி

   Delete
 7. சமையல் பதிவுக்குமே கவிதையா சூப்பர் தான். இடியாப்பத்துக்கு பொரித்த கூட்டு வித்தியாசமாக தான் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. இடியாப்பம் பதிவிட
   முயலுகையிலே..
   முதலாய் கவிதை வந்து
   முளைத்தது... தானாய்
   முந்திவந்த கவிதையை
   படைத்து விட்டு...
   பதிவிட்டேன் பொரித்த கூட்டை

   நன்றி
   வாழ்க வளர்க
   உமையாள் காயத்ரி

   Delete
 8. கூட்டு செய்முறையும் அதற்கேற்ற கவிதையும் சூப்பர்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வந்து வாழ்த்தியமைக்கு...

   நன்றி
   வாழ்க வளர்க
   உமையாள் காயத்ரி.

   Delete
 9. #இடியாப்பம் பதிவிட
  முயலுகையிலே..
  முதலாய் கவிதை வந்து
  முளைத்தது..#
  எனக்கும் இடியாப்பம் பற்றி பதிவிட ஆசை வந்து விட்டது ,ஆனால் கவிதை முளைக்குமா என்றுதான் தெரியவில்லை :)
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. இடியாப்பம் பதிவிட தங்களுக்கு ஆசைவந்தல்லோ..ஆசை வந்தல்லோ...வரவேண்டும் வரவேண்டும்.

   கவிதை முளைக்கவில்லை என்றால் என்ன..? நகைச்சுவை முளைத்து கொட்டுகிறதல்லவா.......ஐயா.

   நன்றி
   வாழ்க வளர்க
   உமையாள் காயத்ரி.

   Delete
 10. வணக்கம் சகோதரி.!

  நல்ல கவித்துவத்துடன் காய்கறிகளின், அணிவகுப்பு.! படங்களும், தங்களின் செய்முறைகளும், நாவின் சுவையை அதிகரித்து விடுகின்றன.! அதன் பிறகு என்ன? செய்து உண்ணத்தான் வேண்டும்.! பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி.! வாழ்த்துக்கள்.!

  நானும் இந்தமாதிரி நிறைய சமையல் குறிப்புகளை எழுத விழைகிறேன்.! நேரம் ௬டி வருகிறதா என்று பார்ப்போம்.!

  நட்புடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 11. காய்கறிகளின் அணிவகுப்பு..கண்டு செய்து உண்ணத்தான் வேண்டும் என்கிறீர்கள்...உண்டு மகிழுங்கள்.

  நானும் இந்தமாதிரி நிறைய சமையல் குறிப்புகளை எழுத விழைகிறேன்.! நேரம் ௬டி வருகிறதா என்று பார்ப்போம்.! //

  ஆவலுடன் காத்திருக்கிறோம்...

  நன்றி
  வாழ்க வளர்க
  உமையாள் காயத்ரி.

  ReplyDelete
 12. கவிதை,ரெசிபி இரண்டும் அருமை.ரெசிபியை செய்து பார்க்கிறேன்...

  வாழ்க வளமுடன்
  சரிதா

  ReplyDelete
  Replies
  1. செய்து பாரும்மா

   நன்றி
   வாழ்க வளர்க
   உமையாள் காயத்ரி.

   Delete