Wednesday, 15 October 2014

என்னவளே...!!!

வாசலில் காத்திருப்பு 
மனம் போனதெங்கே என்மயிலே
உள்நோக்கம் நிலைத்திருக்க 
ஓரப்பார்வை எதைக்கவ்வுதடி…?
எதைநினைத்து பூத்தாய் புன்முறுவல் 
எனைத்தானடி நினைத்தாய் கள்ளி
குயில்போல நிறமும்குரலும் 
ஆனால் மயிபோல சாயலடி மங்கைநீ
மாம்பழமயிலே மச்சானை நினைக்க 
உனக்குநான் அகிலே

இருப்புக் கொள்ளாமல் 
இமையது துள்ளாமல்
கன்னப்பொழிவது காட்டுதடி 
உன்காதல் வீக்கத்தை
கொல்லன் வார்த்தானோ 
பொன்மேனி பதுமை உன்னை…?
அடடாயில்லையில்லை… 
நானடிவார்த்தேன் ஓவியமாயுன்னை
சிந்தைபித்தான என்தோழி 
நீ சித்திரவழி குடியேறினாய்
உள்மொழிப் பேசினாலும் 
உனைநேர்கண்டு அளவளாவ…
நாளும்காணவென உன்னை 
நடுவீட்டில் இருத்திவைத்தேன்

லெட்சுமியின் வாசம் 
நடுவீட்டிலே தானே அம்மையே
மருத்துவ அதிசயம்… 
அறுவை இன்றி இதயம் மாறியது
சகலஉறவான நீயெனக்கு 
சரிபாதி உயிரல்லவா…? கண்ணம்மா
வசந்த காலம் வருகையிலே 
வாசல்படி வாய்க்காதடி
வயிறுகாயயிலும் காதல் தேனுறுதடி அயல்நாட்டில்
வருவாய்க்கு வந்தேனிங்கு 
வாழ்க்கைக்கு உன்னடிக்கு வருவேன்

கண்ணிமை மட்டும் காணத்துடிக்குதடி 
கட்ட நினைக்குதடி
மனத்தனிமையின் தவம் வரம் தருமேயடி… 
என்செல்லக்கிளி யுன்னை
ஓவியத்தில் உயிர்வார்த்து வளர்த்தேன் 
பாதுகாப்பாய் வாழ்கிறேனடி நான் 
இனியபொன் இல்லறம் மனப்பூமியிலே...
உயிரேவாவென உயிர்துடிக்க நீயும் 
உள்புகைந்து,வெளிநகைத்து
உன்வாசலில் என்வரவுக்காய் 
அமர்ந்திருப்பாயா… ? என்னவளே.
படம் கூகுள் நன்றி

22 comments:

 1. மனம் மகிழத் தந்த அருமையான கவிதைப் பகிர்வுக்குப்
  பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி !

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் வாயால் என் கவிதை புகழப் பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் தோழி. நன்றி

   Delete
 2. சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கு என் நன்றி ஐயா.

   Delete
 3. அழகான ஓவியம். கொள்ளை கொண்டு விட்டது. அருமையான கவிதை.

  "//வயிறுகாயயிலும் காதல் தேனுறுதடி அயல்நாட்டில்வருவாய்க்கு வந்தேனிங்கு
  வாழ்க்கைக்கு உன்னடிக்கு வருவேன்/"

  குடும்பத்தை விட்டுவிட்டு சம்பாதிப்பதற்கு சென்றுள்ள ஒவ்வொரு ஆண்மகனுடைய ஏக்கம் தான் இந்த கவிதை. அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இளயராஜா அவர்களின் உயிர் ஓவியம் இது. கூகுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
   ஆம் மனதி கொள்ளையடிக்கும் ஓவியங்கள் தான்.

   //குடும்பத்தை விட்டுவிட்டு சம்பாதிப்பதற்கு சென்றுள்ள ஒவ்வொரு ஆண்மகனுடைய ஏக்கம் தான் இந்த கவிதை//...... வெளி நாட்டில் இது போல் வாழ்பவர்கள் தான் அதிகம் இல்லையா...? அதான்..

   Delete
 4. உயிர்ப்பும் அழகும் சேர்ந்த கவிதை ..பொருத்தமான படமும் கூட..

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜெயசீலன் ரசித்து கருத்திட்டமைக்கு.

   Delete
 5. #உள்புகைந்து,வெளிநகைத்து#
  இந்த கொடுமை விரைந்து தீரட்டும் !
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. ஆம் //விரைந்து தீரட்டும் !// நன்றி ஐயா.

   Delete
 6. மிக அருமையான கற்பனை!
  படத்திற்கேற்றாற்போல் வரிகளும் கனகச்சிதமாக இருக்கின்றது!

  வாழ்த்துக்கள் உமையாள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களை விடவா சகோதரி....ம்ம்....// படத்திற்கேற்றாற்போல் வரிகளும் கனகச்சிதமாக இருக்கின்றது! //

   தங்களின் இனிய கருத்திற்கு நன்றி சகோதரி.

   Delete
 7. ஓவியக் கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. வணக்கம்
  சகோதரி..

  வரிக்கு வரி இரசித்துப்படித்தேன் சொல்லிய விதமும் இறுதியில் முடித்த விதமும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி
  த.ம 4வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 9. ஓவியக் கவிதை அழகாக வந்துள்ளது வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete