Tuesday 14 October 2014

வெங்காயம் பூண்டு சட்னி



தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் - 16
பூண்டு பற்கள் - 6
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
பழ மிளகாய் பெரிது - 1
வெல்லம் - சிறிது
உப்பு - ருசிக்கு
எண்ணெய் - 1 தே.க





வாணெலியில் எண்ணெய் விட்டு எல்லாவற்றையும் வதக்கவும்.

வெல்லத்தை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

மிக்ஸியில் அரைக்கும்போது வெல்லத்தையும் சேர்த்து அரைக்கவும்.


தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
சீரகம் - 1/4 தே.க
பெருங்காயம் - சிறிது
கருவேப்பிலை - சிறிது 

தாளித்து போடவும்.




                                                 மணமணக்கும் சட்னி தயார் ...!!!



15 comments:

  1. ஆஹா பூண்டுசட்னி நான் கேள்விப்பட்டதே இல்லை பூண்டு நல்லதல்லவா உடலுக்கு ஆகையால் நிச்சயம் செய்து பார்க்கவேண்டும். தேங்காய் துருவல் சேர்த்தால் இன்னும் பொலியுமல்லவா அத்துடன் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். செய்து பார்த்து விட்டு சொல்கிறேன். மிக்க நன்றி புதிய dish க்கு தொடர வாழ்த்துக்கள் மா ....!

    ReplyDelete
    Replies
    1. தேங்காய் துருவல் சேர்த்தால் இன்னும் பொலியுமல்லவா அத்துடன் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்//

      தேங்காய் சேர்த்தால் நன்றாக இருக்கும் தான். சட்னிகளில் நானும் தேங்காய் சேர்ப்பதால் இதற்கு மருத்துவ குணத்துடன் இருக்கட்டும் என தவிர்த்து விட்டு செய்தேன்.

      நீங்கள் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் தங்கள் கருத்தினை. நன்றி சகோ.

      Delete
  2. ஒ! செஞ்சுட்டா போச்சு:)))

    ReplyDelete
  3. இன்னுமொரு சட்னியா... அசத்துங்கள். (கொடுத்து வைத்த கணவர்!!!!!)

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ..ஹஹஹ...ஹா...

      Delete
  4. யும்மி! வீட்டில் செய்வதுண்டு! வெல்லம் புதிது....

    மிக்க நன்றி! சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா....நன்றி சகோ

      Delete
  5. எளிமையான விளக்கம் படத்துடன்..

    ReplyDelete
  6. அருமையான பூண்டுச் சட்னி!

    நானும் நேரம் கிடைக்கிறப்போ கூடுதலாகச் செய்வேன்.
    மிகக் குறைவாக வெந்நீர்த் துளியாகச் சேர்த்தரைத்துப்
    பேஸ்ட்டாக குளிர்சாதனப் பெட்டியில்
    ஸ்ரோர் பண்ணிவிடுவேன். தேவைக்கு அப்பப்ப எடுத்துக்குவோம்.
    எல்லாவற்றையும் வறுத்தரைப்பதால் 1 வாரமானாலும் கெடாமல் இருக்கும்!
    அப்படி இருந்தாற்தானே. ப்ரட்டுக்கும் பூசிச் சாப்பிடுவார்கள்! சோற்றுக்குமே காரம் வேண்டுமெனில் கூட்டுடன் சேர்த்து... ஸ்.. செம ருசியாக இருக்கும்..:)

    நல்ல பகிர்வு! நன்றியுடன் வாழ்த்துக்கள் உமையாள்!

    ReplyDelete
    Replies
    1. ஓ..நல்ல யோசனையாக இருக்கிறதே...கருத்திற்கு நன்றி தோழி.

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete