Thursday 30 October 2014

ஶ்ரீ ரங்கா.. ரங்கா...



ரங்கப்பா ரங்கப்பா நாராயணா - ஶ்ரீரங்கத்தில்
வைகுண்டபதியாய் ஆனாயப்பா
உற்சவ உல்லாசப்பதியது உனக்கப்பா
உன்னழகைக் கண்டு நான் நின்றேனப்பா    ( ரங்கப்பா )


உண்டேன் பிரசாதம் ரங்கநாத
ஊண்கண்ணில் சுவைத்தேன் ரங்கநாதா
விழிவழி சுவைநீர் வழிந்தோடிட
மதியது மயங்கி கிடந்தேனப்பா             ( ரங்கப்பா ) 


நாவின் பிரசாதம் நின் நாமமப்பா
நாளும் அருள்வாய் ரங்கநாதா
சுவைக்கு ஏங்கி நில்லாவாய்
தினம் சாறுபருருகும் ராமரசத்தில்          ( ரங்கப்பா )

மெய்யது சுற்றும் உன்னுருவை
பாதம் பணிய பாதம்சுற்றுமே
நினைவில் நீங்கா நின்னுருவே
கனவிலும் வந்து காட்சிதருமே             ரங்கப்பா )    


   

கைகள் தளிகை ஆக்கிடுமே
காலமெல்லம் உனக்கு படைத்திடவே
நறுமணப்பூக்களை மாலை தொடுத்து
நாவிலும் பாமாலை சூட்டிடுமே             ( ரங்கப்பா )



என்னுள் இருந்து பாபுனைந்தமைக்கு நன்றி ரங்கநாதா.

படம் கூகுள் நன்றி


நன்றி 
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி.



14 comments:

  1. வணக்கம் சகோதரி.!

    கவிதை அருமை.! பக்திப்படங்களுடன், பரவசமான வார்த்தைகளை சேர்த்து, பாப்புனைந்து பகிர்ந்த தங்களுக்கு என் பாராட்டுக்கள்.! இனியும் தொடர வாழ்த்துக்கள்.!

    நாராயணன் நலமுடன் நல்லுலகை காக்க பிராத்திக்கிறேன்.!

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஒம் நமோ நாராயணாய
      ஒம் நமோ நாராயணாய
      ஒம் நமோ நாராயணாய
      ஓம் நமோ நமோ...!

      நன்றி
      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி

      Delete
  2. நல்ல பாடல் சகோதரி...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஒம் நமோ நாராயணாய
      ஒம் நமோ நாராயணாய
      ஒம் நமோ நாராயணாய
      ஓம் நமோ நமோ...!

      நன்றி
      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி

      Delete
  3. சிறந்த பக்திப் பா வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஒம் நமோ நாராயணாய
      ஒம் நமோ நாராயணாய
      ஒம் நமோ நாராயணாய
      ஓம் நமோ நமோ...!

      நன்றி
      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி

      Delete
  4. வணக்கம்
    சகோதரி

    இரசிக்கவைக்கும் பாடல் பகிர்வுக்கு நன்றி த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஒம் நமோ நாராயணாய
      ஒம் நமோ நாராயணாய
      ஒம் நமோ நாராயணாய
      ஓம் நமோ நமோ...!

      நன்றி
      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி

      Delete
  5. அருமையான ஒரு பக்தி பாடல். ரசித்தேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஸ்ரீ ரங்கநாதனை இரங்கவைக்கும் இனிய பாமாலை!
    மிக அருமை உமையாள்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அங்கமே தங்கமாய் ஆனரங்கன்
    வேங்கடத்தில் சல பதி ஆனான்
    தூங்கியவன் எழுகையில் இனி
    உமையாள் காயத்ரி மந்திரத்தை
    சுவைத்தே கேட்டு எழுந்திடுவான்.

    (ஓம் நமோ நாராயணாய)

    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. ஒம் நமோ நாராயணாய
      ஒம் நமோ நாராயணாய
      ஒம் நமோ நாராயணாய
      ஓம் நமோ நமோ...!

      நன்றி
      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி

      Delete
  8. அருமையான பக்தி பாடல் அரங்கன் அருள் பெற்றுய்ய வாழ்த்துகிறேன் ....!

    ReplyDelete
    Replies
    1. ஒம் நமோ நாராயணாய
      ஒம் நமோ நாராயணாய
      ஒம் நமோ நாராயணாய
      ஓம் நமோ நமோ...!

      நன்றி
      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி

      Delete