Thursday 20 November 2014

ஆத்மா ராமா






கண்கள் மூடிட நிழலாடும்
காவிய நாயகன் திவுருவம்
மெய் மேனி நிஜமாகும்
மெய்யே அவன் நிஜமாகும்
கல்வி கேள்வி தேவையில்லை
கண்டால் போதும் மனமதுவே

பூஞ்சோலைகள் தஞ்சம் செய்து
பூரணனனுடன் மகிழ்ந் திருக்கும்
நவமணி தங்கம் வைரமும்
நவநீதனை அழகு பாடும்
அர்த்தர் புணுகு சந்தனமும்
அவனோ டினைந்து மெய்சிலிர்க்கும்

பக்தோர் பாடும் பஜனையிலே
பரமனும் கலந்து லயிப்பானே
வார்த்தை ஜாலம் தேவையில்லை
வார்த்தாயா மனநைய் வேத்தியம்  
ஆனந்த உச்சிக்கு கூட்டிச்செல்வான்
ஆத்மா ராமன் என்பவனே   






     என்னுள் இருந்து மீண்டும் கானம் இயற்றிய கண்ணா உனக்கு நன்றி

படம் கூகுள் நன்றி





15 comments:

  1. கண்ணனின் கானம் அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரரே...கருத்திற்கும் த மவுக்கும்.

      Delete
  2. அர்த்தர் புணுகு சந்தனமும்
    அவனோ டினைந்து மெய்சிலிர்க்கும்// அதுதான் பரவசம்.அருமைக்கவி.

    ReplyDelete
    Replies
    1. அதுதான் பரவசம் //
      நன்றி சகோதரரே

      Delete
  3. பக்தோர் பாடும் பஜனையிலே
    பரமனும் கலந்து லயிப்பானே
    வார்த்தை ஜாலம் தேவையில்லை
    வார்த்தாயா மனநைய் வேத்தியம்
    ஆனந்த உச்சிக்கு கூட்டிச்செல்வான்
    ஆத்மா ராமன் என்பவனே //

    எங்களையும் கவிமூலம் கூட்டிச்செல்வதற்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. எங்களையும் கவிமூலம் கூட்டிச்செல்வதற்கு
      மனமார்ந்த நன்றி //

      நன்றி ஐயா

      Delete
  4. அருமையான பக்திப் பாமாலை!

    மனம் லயித்தது!.. வாழ்த்துக்கள் உமையாள்!

    ReplyDelete
  5. "//ஆனந்த உச்சிக்கு கூட்டிச்செல்வான்ஆத்மா ராமன் என்பவனே//"

    அருமை சகோதரி

    ReplyDelete
  6. பாடல் வரிகள் மனம் கவர்ந்தது...

    ReplyDelete
    Replies
    1. பாடல் வரிகள் மனம் கவர்ந்தது...

      நன்றி சகோதரரே

      Delete
  7. தமவுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete
  8. பக்தோர் பாடும் பஜனையிலே
    பரமனும் கலந்து லயிப்பானே

    அருமை சகொதரி. இசைத்தமிழால் நெகிழச்செய்கிறீர்கள். பரமனை அறிந்த பக்தனும் கூடவே ல்யிப்பான். நன்றி.

    ReplyDelete