Saturday 1 November 2014

மோர்க் குழம்பு





தேவையான பொருட்கள்

கெட்டி மோர் - 1 டம்ளர்
உப்பு - ருசிக்கு
மஞ்சள் தூள் சிறிது
வெங்காயம் - 1
தக்காளி -1


அரைக்க தேவையானது

தேங்காய் - 3 மே.க
பழ மிளகாய் பெரிது - 1
சீரகம் - 1/2 தே.க
க.பருப்பு - 1/2 தே.க
ப.அரிசி - 1/2. தே.க

கடலை பருப்பு, பச்சரிசியை முதலிலேயே
ஊறப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.



தாளிக்க வேன்டியவை

எண்ணெய் - 1 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
வரமிளகாய் - 1
மிளகு - 7
சீரகம் - சிறிது
பொருங்காயம் - சிறிது
கருவேப்பிலை - சிறிது

                                                   தாளிக்கவும்.





வெங்காயத்தை வதக்கவும்.












தக்காளியை சேர்த்து வதக்கவும்.










அரைத்தை ஊற்றி பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும். கரண்டியால் கிண்டிக் கொண்டு இருக்கவும். அப்போது தான் கட்டி தட்டாமல் குழம்பு சரியாக வரும்.








                                    சேர்ந்து வரவும்





கெட்டி மோர் விட்டு, உப்பு சேர்த்து விடவும்.



முதல் கொதி வர ஆரம்பிக்கும் போதே அடுப்பை அணைத்து விடவும்.

கொத்தமல்லி வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம். அருமையாக இருக்கும்.





                                                                         மோர்க் குழம்பு தயார்...!!!


கீழே பக்கோடா மோர்க் குழம்பு

http://umayalgayathri.blogspot.com/2014/03/pakoda-mor-kuzhambu.html




நன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி.


19 comments:

  1. எனக்கு மிகவும் பிடிச்ச மோர்க்குழம்பு .....இதுவரை அரிசி ப்ளஸ் பருப்பு அரைத்து செய்யவில்லை ..இம்முறையில் செய்து பார்க்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. முதலாவதாய் வந்து கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோதரி.

      சாய் ராம்
      உமையாள் காயத்ரி.

      Delete
  2. நல்ல பகிர்வு அம்மா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ

      சாய் ராம்
      உமையாள் காயத்ரி.

      Delete
  3. தயிர் வடை
    கேள்விப்பட்டிருக்கிறேன்
    நெய்த் தோசை
    கேள்விப்பட்டிருக்கிறேன்
    ஆனால்
    இன்று தான்
    மோர்க் குழம்பு பற்றி
    கேள்விப்படுகிறேன்!

    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. இன்று தான்
      மோர்க் குழம்பு பற்றி
      கேள்விப்படுகிறேன்! //

      அப்படியா ...ஐயா.. அவசியம் சகோதரியிடம் செய்யச் சொல்லி... உண்டும் பாருங்கள்


      சாய் ராம்
      உமையாள் காயத்ரி.

      Delete
  4. ஹா! இது புதிய வகை மோர்குழம்பாக இருக்கின்றதே! சகோதரி! நாங்களும் ஒரு 8, 9 வகை மோர்குழம்பு வகைக்ள் செய்வதுண்டு....அரைப்பது சேம் என்றாலும் அந்த தக்காளி வெங்காயம் புதிது......செய்து பார்த்துவிடவேண்டும்....செய்துவிட்டுக் கண்டிப்பாக உங்களுக்குச் சொல்கின்றோம்.....----கீதா

    ReplyDelete
    Replies
    1. .செய்து பார்த்துவிடவேண்டும்....செய்துவிட்டுக் கண்டிப்பாக உங்களுக்குச் சொல்கின்றோம்.....----கீதா //

      வாங்க கீதா மிக்க நன்றி

      சாய்ராம்
      உமையாள் காயத்ரி.

      Delete
  5. செய்முறை படங்கள் ப்ரசண்டேஷன் எல்லாம் மிக அருமையான முறையில் தந்து இருக்கின்றீர்கள். இப்படியே தொடருங்கள்.. சமையலறையில் அனுபவம் இல்லாதவர்கள் இதை பார்த்து எளிதில் செய்ய உதவும் பதிவு.பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நன்றி

      சாய்ராம்
      உமையாள் காயத்ரி

      Delete
  6. ருசி ஆளைத் தூக்கிடும் போலிருக்கே! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ

      ஓம் சாய் ராம்
      உமையாள் காயத்ரி.

      Delete
  7. ஆகா!!! மோர்குழம்பு மிகவும் வித்தியாசமாக இருக்கு உமையாள். செய்து பார்க்கிறேன். சகோ சொன்னமாதிரி செய்முறை,படங்கள் எல்லாம் தெளிவு. அருமை. நன்றிகள்.

    ReplyDelete
  8. அருமை. அருமை.

    ReplyDelete
  9. செய்முறையும்,விளக்கப்படங்களும் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சாரதா

      Delete
  10. தயவு செய்து உங்கள் அனைத்து சமையல் குறிப்புகளையும் மின் நூலாக மாற்றி விடுங்க, காலம் கடந்து பலருக்கும் உபயோகமாக இருக்கும் அல்லவா? வீட்டில் சாப்பாடு விசயத்தில் சச்சரவு வரும் போதெல்லாம் உங்க தளம் தான் எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. காரைக்குடி ருசி இன்னமும் அடங்காமல் தவிக்கின்றது. நன்றி சகோதரி. அவசியம் எகிப்து பற்றி நிறைய எழுதலாமே?

    ReplyDelete