Thursday 13 November 2014

கண்ணன் பாடல்


கதைக்குள் கதையாய் யுறைந்தாயப்பா பாகவத்தில்
கவர்ந்திட்டாய் நாளுமெனை மறந்து கிடக்க
காதுதுடிக்கிறது கேளா திருந்திட்டால் என்செய்வேன்
காதுகுளிர நாளும்கதை கொடு

தாமைரக் கண்கள் எனைக்கடிக்க இன்பம்
தாதா மெய்சிலிர்க்க வலிமதுவை விரைவாய்
வெண்ணெய்ருசித்த மென்னதர ரோஜா வாய்திறந்து
வெண்ணெய்சிதரிட அழைக்காதோ பெயர்

முத்துப்பற்கள் மறைத்த வெண்ணெய் முகிலே
முழுங்கிட வெண்சங்கு தொண்டையில் வழுவிடாயோ
மல்லிகை மணமுடன் மணவாளன் என்பெயர்
மகிழ்ந்தழைக்க சிரிக்காதோ முத்து

காதலுடன் தளிகையாக்கி கண்ணனுக்கு ஊட்ட
காலமெல்லாம் இக்கைகளுக்கு தருவாய் நல்வரம்
பக்தியோடு ஷனப்பொழுதேனும் விலகிடா கட்டிட்டு
பார்த்தா யெனைபார்த்துக் கொள்  


படம் கூகுள் நன்றி.

15 comments:

  1. முத்துப்பற்கள் மறைத்த வெண்ணெய் முகிலே
    முழுங்கிட வெண்சங்கு தொண்டையில் வழுவிடாயோ
    மல்லிகை மணமுடன் மணவாளன் என்பெயர்
    மகிழ்ந்தழைக்க சிரிக்காதோ முத்து

    பாடல் அருமை என்றால் படம் அழகு அம்மா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. காதலுடன் தளிகையாக்கி கண்ணனுக்கு ஊட்ட
    காலமெல்லாம் இக்கைகளுக்கு தருவாய் நல்வரம்

    அருமையான வரிகள்.

    ReplyDelete
  3. "//கதைக்குள் கதையாய் யுறைந்தாயப்பா பாகவத்தில்//" - உண்மை தான். மகாபாரதத்தில் தான் எத்தனை எத்தனை கிளைக்கதைகள்.

    அருமையான கண்ணன் பாட்டு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. காதலுடன் தளிகையாக்கி கண்ணனுக்கு ஊட்ட
    காலமெல்லாம் இக்கைகளுக்கு தருவாய் நல்வரம்
    பக்தியோடு ஷனப்பொழுதேனும் விலகிடா கட்டிட்டு
    பார்த்தா யெனைபார்த்துக் கொள்

    அருமை அருமை நிச்சயம் பார்த்துக் கொள்வான் . வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  5. கதைகூறிக் கண்ணனே காட்டும் நெறி!.நல்
    விதையாம் மனமே விரும்பு!

    அருமையான கண்ணன் கீதம்!
    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  6. செந்தமிழ் வார்த்தைகள் எல்லாம் தேன் சொட்டும் அழகு ... ரசித்துப் படித்தேன் ...கண்ணனின் கிருபை என்றும் உங்களுக்கு கிட்ட வேண்டுகிறேன் ...வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  7. பக்தி ரசம் சொட்டும் அற்புதமான கவிதை
    மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. கவிதையை மிகவும் ரசித்தோம்! எல்லா ரசமும் சொட்டுகின்றது!

    முத்துப்பற்கள் மறைத்த வெண்ணெய் முகிலே
    முழுங்கிட வெண்சங்கு தொண்டையில் வழுவிடாயோ
    மல்லிகை மணமுடன் மணவாளன் என்பெயர்
    மகிழ்ந்தழைக்க சிரிக்காதோ முத்து//

    அழகிய வரிகள்!

    ReplyDelete
  9. காதலுடன் தளிகையாக்கி கண்ணனுக்கு ஊட்ட
    காலமெல்லாம் இக்கைகளுக்கு தருவாய் நல்வரம்
    பக்தியோடு ஷனப்பொழுதேனும் விலகிடா கட்டிட்டு
    பார்த்தா யெனைபார்த்துக் கொள்//

    அருமையான பாடல், படம் பகிர்வு அருமை.

    ReplyDelete