Saturday 29 November 2014

வெங்காயம் தக்காளி சட்னி - 1





தேவையான பொருட்கள்

வெங்காயம் - 1
தக்காளி - 1
வரமிளகாய் - 3
புளி - சிறிது
கருவேப்பிலை - சிறிது
உப்பு - ருசிக்கு




அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் பச்சையாக அரைத்துக் கொள்ளவும். சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.


தாளிக்க வேண்டியவை
நல்லெண்ணெய் - 3 மே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
பெருங்காயம் - சிறிது
சீரகம் - 1/4 தே.க
கருவேப்பிலை - சிறிது
                                            தாளிக்கவும்.
                                 




அரைத்ததை சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.

சட்னி சேர்ந்து வரவும் இறக்கவும்.

ஃப்ரிஜ்ஜில் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.




இட்லி, தோசை, அடை, குழிப்பணியாரம், வெள்ளைப்பணியாரம் என பலவற்றிற்கு  அருமையாக இருக்கும்



18 comments:

  1. வணக்கம்
    சுவையான உணவுஇலகுவான செய்முறை விளக்கம் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மிக விரைவில் அதுவும் எளிதாக செய்யக்கூடியது - தக்காளிச் சட்னி..

    சட்னியைத் தாளித்ததும் ஏற்படும் நறுமணத்திற்கு ஈடு இணை இல்லை!..
    பதிவினைப் படிக்கும் போதே - நினைவில் அந்த வாசம் கமழ்கின்றது..

    (இந்த சட்னிக்கு - ஒன்னும் பாட்டு போடலையா!?)

    ReplyDelete
    Replies
    1. சட்னியைத் தாளித்ததும் ஏற்படும் நறுமணத்திற்கு ஈடு இணை இல்லை//
      உண்மை தான் தாங்கள் அற்புதமாக சமைப்பீர்கள் அல்லவா...அதான் அனுபவித்து சொல்கிறீர்கள்

      நன்றி ஐயா

      Delete
  3. ஆஹா சுவைக்காக தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. சுவைக்காக அஹா...
      நன்றி சகோ

      Delete
  4. அருமை ...இந்த அவசர யுகத்தில் இதுபோல சமையல் நிச்சயம் உதவும்

    ReplyDelete
  5. எனக்கு பிடித்த ஒரு உணவு இது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. #ஃப்ரிஜ்ஜில் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.#
    இது முக்கிய குறிப்பாச்சே:)
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. இது முக்கிய குறிப்பாச்சே:)//

      நன்றி ஐயா

      Delete
  7. நானும் இது போல் செய்வேன், ஆனால் தண்ணீர் விடாமல் அரைப்பேன், தாளிக்கும் போது சீரகம் போட மாட்டேன்.
    நீங்கள் சொல்லும் முறையில் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வாருங்கள்.....தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
      நன்றி சகோ

      Delete
  8. சூடா இட்லி இருந்தா இன்னும் சூப்பரா சாப்பிடலாம் போலவே...வாழ்த்துகள்மா

    ReplyDelete
    Replies

    1. சூடா இட்லி இருந்தா இன்னும் சூப்பரா சாப்பிடலாம் போலவே...//

      ஆமாம் இட்லி தான் கணக்கு இல்லாம உள்ளே போயிட்டே இருக்கும்..

      வாருங்கள் வாருங்கள்.....தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
      நன்றி சகோ

      Delete
  9. நல்லதோர் சட்னி....

    த.ம. 4

    ReplyDelete
  10. இட்லிக்கு தொட்டுக்கொள்ள எனக்கு மிகவும் பிடித்த சட்னி.

    ReplyDelete
    Replies
    1. இட்லிக்கு தொட்டுக்கொள்ள எனக்கு மிகவும் பிடித்த சட்னி.//
      அப்படிச் சொல்லுங்கள் சகோ
      நன்றி

      Delete