Tuesday 25 November 2014

சோயாஉருண்டை பீன்ஸ் ரைஸ்

ஒரு வித்தியாசமான சாதம் பார்க்கலாமா...




தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 1 கோப்பை
பீன்ஸ் - 1 /2கோப்பை
சோயா உருண்டை - 1/4 கோப்பை
வெந்நீரில் போட்டு ஊறவைத்துக் கொள்ளவும். பின் 2, 3 தடவை தண்ணீரில் அலசி பிளிந்து  கொள்ளவும்.
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1/2 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
மல்லித்தூள் - 1/2 தே.க
உப்பு - ருசிக்கு


அரைக்க வேண்டியது

கொத்தமல்லி - 1 கை
பூண்டு - 2
இஞ்சி - 1 துண்டு

தண்ணீர் சேர்க்காமல் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.


தாளிக்க வேண்டியது

நெய் - 1 தே.க
எண்ணெய் - 1 மே.க
பட்டை - 1
கிராம்பு - 2
பிருஞ்சி இலை - 1
ஏலக்காய் - 1



தாளிக்கவும். வுங்காயம் சேர்த்து வதக்கவும்.








தக்காளி, பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.











சோயாவை சேர்க்கவும்.











அரைத்ததை சேர்த்து பச்சை வாசம் போகும் அளவு வதக்கவும்.









அரிசி 10 நிமிடங்கள் ஊறின பின் சேர்த்து வறுக்கவும்.











பொடிகளையும்,உப்பையும் சேர்க்கவும்.








2 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.வேகவிடவும்.வாசனை தூக்கும்.








அப்புறம் என்ன சாப்பிட வேண்டியது தான். ரைதா ஏதாவது செய்து கொள்ளலாம்.

நான் சாத்துக்குடி ரைதா செய்தேன்.

நாளை சாத்துக்குடி ரைதாவின் பதிவு தான்.





17 comments:

  1. வெஜ். பிரியாணிக்குத் தங்கையா - இந்த மெனு!?..
    அருமை.. அருமை!..

    ReplyDelete
    Replies
    1. வெஜ். பிரியாணிக்குத் தங்கையா - இந்த மெனு! //

      அப்படியும் சொல்லலாம் ஐயா.

      நன்றி தங்கள் முதல் கருத்துரைக்கு.

      Delete
  2. அட அட்டகாசம்! விதவிதமாய் சமையல் பகிர்வுகளை தொடர்ந்து பகிர்ந்து அசத்துகிறீர்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் கருத்துரைக்கு நன்றி சகோ

      Delete
  3. அட அட்டகாசம்! விதவிதமாய் சமையல் பகிர்வுகளை தொடர்ந்து பகிர்ந்து அசத்துகிறீர்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. உண்மையிலேயே கேள்விப்படாத ஒரு வித்தியாசமான சாதம் தான்.

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் கருத்துரைக்கு நன்றி சகோ

      Delete
  5. ஒரு வித்தியாசமான பகிர்வு சமையல் பற்றி.

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் கருத்துரைக்கு நன்றி சகோ

      Delete
  6. பீன்ஸ் எனக்குப்பிடிக்காது ஆனால் புகைப்படத்தை பார்த்தால் உடன் செய்து சாப்பிட வேண்டும்போல் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் கருத்துரைக்கு நன்றி சகோ

      Delete
  7. படத்தை பார்த்தே சமச்சுடலாம் போல!!! சூப்பர்!!

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் கருத்துரைக்கு நன்றி சகோ

      Delete
  8. நாளையே செய்து விடுகிறேன் தோழி.
    சாத்துக்குடியில் ரைதாவா....? காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சாத்துக்குடியில் ரைதாவா....? //

      ஆம். சூப்பராக இருக்கும். நாளையே செய்து மகிழுங்கள் தோழி.

      Delete
  9. படங்களும் அருமையாக உள்ளது தோழி.

    ReplyDelete
  10. வாவ்!!! வித்தியாசமான சோயா ரைஸ். சோயா என் பேவரிட்.எப்படி உமையாள் எல்லாம் செய்வது. ஒவ்வொன்னாதான் செய்து பார்த்து படம் போடுவேன்.சரியா.டிசம்பர் மாதம் நேரமே இல்லாமலிருக்கே.????. thanks.

    ReplyDelete