Monday 15 December 2014

ரவா கிச்சடி






தேவையான பொருட்கள்

ரவை - 1 கோப்பை ( வறுத்துக் கொள்ளவும்)
வெங்காயம் - 1 
தக்காளி -1
கேரட் - 1 கை
பீன்ஸ் - 1 கை
பட்டாணி - 1 கை
ப.மிளகாய் - 2
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - ருசிக்கு



தாளிக்க வேன்டியது


பட்டை - 1 
பிருஞ்சி இலை - 1
கிராம்பு - 1
ஏலம் - 1
வரமிளகாய் - 1
கடுகு - 1/4 தே.க
சீரகம் 1/4 தே.க
மிளகு - 1/4 தே.க
எண்ணெய் - 3 மே.க
நெய் - 1 தே.க



                                 தாளிக்கவும்.








வெங்காயம் ,கருவேப்பிலை,ப.மிளகாய் சேர்க்கவும்.








தக்காளி,மற்றும் காய்களை சேர்க்கவும்.
2 1/4 டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

தண்ணீர் நன்குகொதிக்கவும் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.








 மூடி போட்டு 3 நிமிடங்கள் வைத்தால் அழகாக வெந்து விடும்.

கிளறி கஷ்டப்பட வேண்டாம்





ஆஹா...மசால் கமகமக்க.... 

ரவா கிச்சடி தயார்...சாப்பிடப்பிடிக்காதவர்களையும்...மூக்கு சும்மா இருக்க விடாம பேசாமல் சாப்பிடு எனச் சொல்லும்

தேங்காய் துவையல் அல்லது சட்னியுடன் சாப்பிட வேண்டியது தான். எப்போதும் தேங்காயா...? என நான் கார சட்னி செய்தேன்.

கார சட்னியும் செமையாய் இருக்கும் . வெங்காயம் தக்காளி சட்னி - 1 இந்த சட்னி தான் செய்தேன். 



29 comments:

  1. இதுவரை செய்ததே இல்லை. பார்க்க கலர்புல்லா உடன் செய்து சாப்பிட தூண்டுகிறது. நன்றி உமையாள்.

    ReplyDelete
    Replies
    1. இதுவரை செய்ததில்லையா...அப்படி என்றால் உடனே செய்யுங்கள் சகோதரி
      விரைவில் செய்திடலாம் இதை.

      Delete
  2. "//ரவா கிச்சடி தயார்...சாப்பிடப்பிடிக்காதவர்களையும்...மூக்கு சும்மா இருக்க விடாம பேசாமல் சாப்பிடு எனச் சொல்லும்//"

    நான் இந்த வரிசையில் வருபவன்.

    ReplyDelete
    Replies
    1. நான் இந்த வரிசையில் வருபவன். //
      ஆமாம்...நானும் அப்படித்தான்..இப்படி செய்தால் சாப்பிடாமல் சும்மா இருக்க முடியாது...அதான்...

      Delete
  3. நாங்கள் அவ்வப்போது செய்திருக்கிறோம்.

    :))))))

    ReplyDelete
    Replies
    1. பேஷ் பேஷ்...
      நன்றி சகோ

      Delete
  4. இன்று கில்லர்ஜி வலைச்சரத்தில் தங்களை அறிமுகப்படுத்தியது அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். ரவா கிச்சடி ருசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா...என்னுடைய டாஸ் போர்டில் வலைச்சரப் பதிவு வரவில்லை. தாங்கள் தெரிவித்ததால்...அறிந்து சென்றேன். மிக்க நன்றி.

      Delete
  5. ரவா உப்புமா செய்வார்கள்... இது புதிது... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. புதியவை செய்து ருசியுங்கள் சகோ

      Delete
  6. சூப்பர் கிச்சடி தோழி....!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வாருங்கள்...
      நன்றி தோழி

      Delete
  7. ஆஹா.. ரவா கிச்சடி!..

    இட்லி, இடியாப்பம் - இவற்றுக்கு அடுத்த விருப்பம் இதுதான்!..

    ரவா கிச்சடியும் - அதனைப் பதிவில் வழங்கிய தாங்களும் வாழ்க!..

    ReplyDelete
    Replies
    1. இட்லி, இடியாப்பம் - இவற்றுக்கு அடுத்த விருப்பம் இதுதான்!//
      பேஷ் பேஷ்...நன்றி ஐயா

      Delete
  8. வணக்கம் சகோதரி!

    படங்களும் செய்முறை விளக்கங்களும், அருமையாக இருக்கிறது சகோதரி.

    எப்போதும் செய்யும் ரவை உப்புமாவை விட இது நன்றாக இருக்குமென்று இதை (காய்கறிகள்ச் சேர்த்து ) அடிக்கடி நானும் செய்திருக்கிறேன். ஆனால், பட்டை போன்ற மாசாலா சேர்த்து செய்ததில்லை! இனி அதையும் முயற்சிக்கிறேன்.

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    இன்றைய வலைச்சரத்தில் வலைச்சர அறிமுகத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. பட்டை போன்ற மாசாலா சேர்த்து செய்ததில்லை! இனி அதையும் முயற்சிக்கிறேன்.// முயற்சித்து பாருங்கள் சகோ மிகவும் பிடிக்கும்.

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

      Delete
  9. செய்முறையை தெளிவான படங்களுடன் பதிவிடுவது உங்களின் தனிச்சிறப்பு! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ. அனைவரும் செய்து உண்டு மகிழவே....எனக்கு தெரிந்த விதத்தில் பதிவிடுகிறேன். சிலர் சமையலுக்கு புதிதாக இருப்பார்கள்...அவர்களுக்கு குழப்பங்கள் வரும்...எனவே முடிந்த மட்டும் எளிதாக..பார்த்து செய்ய இலகுவாக இருக்கும் என நினைத்து பகிர்ந்து கொள்கிறேன்.

      Delete
  10. கலரே அருமையாக இருக்கே...
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. காய்களின் வண்ணம்
      கண்ணையும் கருத்தையும் கவராதோ...

      நன்றி சகோ

      Delete
  11. கலர்கலராய் பார்க்கவே அழகா இருக்கு ரவா கிச்சடி. கமகமக்கும் கிச்சடி.

    ReplyDelete
    Replies
    1. கமகமக்கும் கிச்சடி
      கலர்கலராய் கிச்சடி
      காணவருவோரை
      கவர்ந்திழுக்கும் கிச்சடி...

      நன்றி சகோ

      Delete
  12. வண்ணமய ரவா கிச்சடியை பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊறுகிறது,!
    அதற்காகவே என் நாலாவது வாக்கு !

    ReplyDelete
    Replies
    1. நாலாவது வாக்கை
      நயமாய் இழுத்ததோ கிச்சடி..
      நாவூர வைத்ததோ
      நான் செய்த கிச்சடி..

      நன்றி ஐயா

      Delete
  13. ரவா கிச்சடி பற்றிய
    சிறந்த செய்முறை வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
  14. அவ்வப்போது இதுதான் எங்கள் வீட்டில் டிஃபன்.....பார்த்ததும் அப்படியே சாப்பிடத் தோன்றியது...

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  15. நானும் காய்கறிகள் எல்லாம் இருக்கும் போது இப்படி செய்வேன்.
    படங்களுடன் செய்முறை மிக அருமை.

    ReplyDelete