Saturday 13 December 2014

Broccoli & Sweet potato Soup

வாரே...வாவ்...சூப்



தேவையான பொருட்கள்

ப்ராகோலி - 1 கோப்பை
சக்கரைவள்ளிக்கிழங்கு - 1
பச்சைமிளகாய் - 1
தக்காளி - 1
பாசிப்பருப்பு - 1 மே.க
மஞ்சள் தூள் - சிறிது
மிளகு சீரகப்பொடி - 1/2 தே.க 
உப்பு - சிறிது
நெய் 1 தே.க



1/2 தே,க நெய் விட்டு பச்சை மிளகாயை வதக்கவும்.











தக்காளியை சேர்த்து வதக்கவும்.











சக்கரைவள்ளிக்கிழங்கு சேர்க்கவும்.











ப்ராகோலி சேர்க்கவும்










பாசிப்பருப்பு,மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும்.

ஆறிய பின் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.







1/2 தே.க நெய் விட்டு மிளகு சீரகப் பொடி சேர்த்து வறுக்கவும்.பின் அரைத்ததை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.







                                                                                     சூப் தயார்...!!!

ப்ராகோலி - மேலும் ஒரு டிஸ்
பொரியல் - Sauteed Broccoli



குறிப்பு

சூப் செய்முறை - முன்பு செய்த சூப்பில் வேண்டுமானால் பார்த்துக் கொள்ளவும்.



21 comments:

  1. சூப் பேரே வாரே வாவ் தானா? ஸூப்பர்
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. சூப் பெயர் அதுவல்ல....
      நன்றி சகோ

      Delete
  2. உமையாள்,

    நான் இதுவரை சூப் என்பதே செய்தது கிடையாது. உங்க குறிப்புல இருந்து வாழைத்தண்டு 'சூப்'பை செலக்ட் பண்ணியாச்சு. ஆனா வழைத்தண்டுக்கு எங்கே போவது ?

    ReplyDelete
    Replies
    1. வாழைத்தண்டு 'சூப்'பை செலக்ட் பண்ணியாச்சு. ஆனா வழைத்தண்டுக்கு எங்கே போவது ? //

      வாழைத்தண்டு கிடைக்கும் வரை வெயிட் பண்ண வேண்டியது தான்....

      பீட்ரூட்...கிடைக்கும் அல்லவா...முயற்சியுங்கள்....

      Delete
  3. சர்க்கரைவள்ளிக் கிழங்கா... இனிக்காது?

    படங்கள் ஈர்க்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. சர்க்கரைவள்ளிக் கிழங்கா... இனிக்காது?//

      இனிக்காது...பச்சை மிளகாய் & மிளகு சீரகம் போடுகிறோம் அல்லவா...அதனால் காரம் இருக்கும்.

      Delete
  4. அன்பின் சகோதரி..

    ப்ரகோலியை நான் சாம்பாரில் சேர்த்துக் கொள்வேன்..
    இனி உங்கள் கைப்பக்குவத்தின் படி - சர்க்கரைவல்லிக் கிழங்குடன் செய்து பார்க்கிறேன்..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. பாருங்கள் ஐயா.நன்றி

      Delete
  5. ப்ராகோலி என்பதற்கு தமிழில் பெயர் இல்லையா :)
    +1

    ReplyDelete
    Replies
    1. ப்ராகோலி என்பதற்கு தமிழில் பெயர் இல்லையா

      எனக்கு தெரிந்து இல்லை.

      Delete
  6. எனக்கும் இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு தான் கிடைப்பது கஷ்டம். கிடைத்தால் செய்வேன்்நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஓ... ஆமாம்...முதல்லயே சொன்னீங்க...

      Delete
  7. எங்களுக்கு இந்த இரண்டும் எளிதாக கிடைக்கும். செய்து பார்த்து விடுகிறோம்.

    ReplyDelete
  8. செய்து பாருங்கள்.சகோ

    ReplyDelete
  9. ப்ராக்கோலி சூப் செய்வதுண்டு ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து இல்லை...இனிப்பு என்று. சேத்து செய்தால் போச்சு....

    ReplyDelete
    Replies
    1. இனிப்பு தெரியாது சகோ. முயற்சியுங்கள்.

      Delete
  10. புதுவகையான சூப் , அருமை.

    ReplyDelete