Thursday 4 December 2014

நீவந்திடு என் முன்னாலே

பாடல்



கிருஷ்ண மோகன பரப்பிரம்மதாரி
ராதா மோகன பிரியதாரி
கேசவ மாதவ சியாமமுராரி
ஆயரை காத்த கிரிதாரி


யாதுமொன்றே யாவருமொன்றே
யாதவர் குல உதயதாரி
புல்முதல் புவன மெங்கும்
புரிந்தால் நீயே சயனதாரி

முன்பின் கால மெங்கிலும்
முதல்வன் நீயே முக்கியதாரி
ஆத்மாவின் வாச வைபவத்தில்
ஆட்சி செய்யும் அதிகாரி

தாயும் தந்தையும் நீயாவாய்
காக்கும் நீயே குடும்பதாரி
ஆத்மாவை நீயே சமைப்பாயே
பக்குவம் செய்யும் சமையல்காரி

இருப்பதும் போவதும் உன்னாலே
இருட்டும் வெளிச்சமும் நின்னாலே
இறையுணர்வு வரும் தன்னாலே
நீவந்திடு என் முன்னாலே





படம் - நன்றி கூகுள்

கிருஷ்ணா வந்திட்டாய் இவ்வாரமும்...கானம் இனிது இயற்றி மகிழ்வித்தாயென்னை யப்பா...நன்றி கோவிந்தா.





14 comments:

  1. லிப்டிலிருந்து காப்பாற்றிய கண்ணணுக்காகவா... அருமை
    த,ம. 1

    ReplyDelete
    Replies
    1. இன்று குருவாரம் அல்லவா...நன்றி உடனடி வருகைக்கும், கண்ணணுக்கு கொடுத்த பூவிற்கும்.

      Delete
  2. //யாதுமொன்றே யாவருமொன்றே
    யாதவர் குல உதயதாரி
    புல்முதல் புவன மெங்கும்
    புரிந்தால் நீயே சயனதாரி..//

    ஸ்ரீ கிருஷ்ணகானம் அருமை!..

    ReplyDelete
  3. நல்லதொரு பாடல் படித்து பார்த்தேன் பாடியும் மகிழ்ந்தேன் அதுவும் இந்த வரிகள் மனதை தொட்டன தாயும் தந்தையும் நீயாவாய்
    காக்கும் நீயே குடும்பதாரி
    ஆத்மாவை நீயே சமைப்பாயே
    பக்குவம் செய்யும் சமையல்காரி

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தினேஷ். என் வலைப்பக்கம் முதல் முறை வந்து இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
      நல்லதொரு பாடல் படித்து பார்த்தேன் பாடியும் மகிழ்ந்தேன் //

      மிக்க நன்றி சகோ

      Delete
  4. வணக்கம் சகோதரி!

    அருமையான கிருஷ்ணகானம்!

    \\இருப்பதும் போவதும் உன்னாலே
    இருட்டும் வெளிச்சமும் நின்னாலே
    இறையுணர்வு வரும் தன்னாலே
    நீவந்திடு என் முன்னாலே//

    ஆத்மார்த்தமாய் உணர்ந்த வரிகள்.
    அவன் அருகாமையை விட நமக்கு வேறென்ன வேண்டும்?
    கிருஷ்ணனின் துணை அனைவருக்கும் அமைய தங்களுடன், நானும் பிராத்தித்துக் கொள்கிறேன்.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. தங்களின் இந்த பாமாலையை கேட்டு கிருஷ்ணன் வந்துவிடுவான்.

    ReplyDelete
  6. வாயேம்ப்பா...
    அழகான பாடல்.

    ReplyDelete
  7. அருமை... பாராட்டுகள்.

    ReplyDelete
  8. நல்ல வரிகள் கிருஷ்ணரைக் குறித்து! அருமை!

    ReplyDelete