Thursday 4 December 2014

லிப்ட் - 2



மேலே சென்றது இப்போ கீழ் தளத்துக்கு வந்து விட்டது. அப்போது கதவு திறந்தது….ஆஹா..வெளியில போகலாம் என நினைக்கும் போது தான்…..ஆ…. அப்படியே எனக்கு பயம் உச்சிக்கு போய் விட்டது.

லிப்ட் - 1 - படிக்காதவர்கள் இதை கிளிக் செய்து படித்து விட்டு தொடருங்கள்...



பார்த்தால்…சுவர் இருக்கிறது. அடடா கீழ்…தளம் என்றால் இப்படித்தான் இருக்கும் போல என நினைத்தோம். அப்படியே எனக்கு பயம் உச்சிக்கு போய் விட்டது. யாருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலை…லிப்ட் எந்த அசைவும் இன்றி எனக்கு என்ன என்பது போல இருக்கிறது. யாரு எப்போ கவனித்து நாம வெளியே வருவோம் என நினைப்பு ஒருபக்கம், வேர்த்து விறுவிறுத்து ஒருபக்கம், அந்தப்பையன் பயந்து அழ ஆரம்பித்து விட்டான்… தலையில் அடித்துக் கொள்கிறான்..லிப்டை அடிக்கிறான்…

ஆஹா..அதிக எடையினால் தானோ லிப்ட கீழே போய்விட்டது…? மேலே பாதிசுவர், பாதி கதவுன்னு இருக்கும் போதாவது எப்படியாது கதவை திறப்பார்கள் குதித்து இறங்கலாம் என்கிற நம்பிக்கையும் போய்விட்டதே இப்போது. லிப்ட் என்ன ஆனது என்று யாரும் பார்க்கவில்லை. அவரவர் பாடு படிகளில் இறங்கி விடுகிறார்கள் இங்கு வசிப்பவர்கள். இதை பேசுகிற நாமளே அப்படி இருக்கோமா…? இல்லையே. பெரிய வேதாந்தம் சித்தாந்தம் எல்லாம் வாய்கிழிய பேச வேண்டியது தான். மற்றவர்களை குறை சொல்கிறதை நாம நிறுத்திட்டோம்னாலும்…

சமாதி கட்டுகிறதை படத்தில் பார்த்து இருக்கிறோம்…ஆனா நேர்ல பார்த்தது இல்லை…அப்படித்தான் எனக்கு இருந்தது. கீழ் இருந்து கால் வாசிக்கு கனமான காண்கிரீட் மேலே செங்கல் கட்டடம். உள்பக்கம் பூச்சு இல்லை. சமாதி மாதிரின்னு சொன்ன இல்ல… அப்புறம் உள் பக்கம் பூசுவாங்களா…? அப்படின்னு நீங்க கேட்கிறீங்க…? சரி தானுங்கோ…    

அப்போதும் கூட நண்பர் தான், அமைதியாக இருங்க என தைரியம் சொன்னார். பாவம் சின்னப் பையன் என நண்பரின் பெண் சொன்னாள். நண்பர் முயற்சிக்க கதவு லேசாக அசைந்தது. ஆனால் மூடிக் கொள்ள வில்லை. அது மூடினால் தான் லிப்ட் இயங்கும்.

அவன் வேறு கதவில் சாய்ந்து இருந்தான். அதனால் மூடவில்லை என தோன்றி அவன் தோளில் கைவைத்து என்பக்கமாக சற்று இழுத்துக் கொண்டேன். அவன் மறுபடி லிப்ட் பட்டனை தட்டாதவாறு அப்பெண் அவன் கைகளை தடுத்துக் கொண்டாள். பிரார்த்தனை தான் தொடர்ந்தது எல்லோருடைய மனதிலும். நண்பர் பொறுமையாக சிறிது நேரம் இருப்போம் எனச் சொல்லி, பின் பட்டனை தட்டி முயற்சித்தார். கதவு மூடியது. பயணம் தொடர்ந்தது. இப்போதாவது லிப்ட் கதவு திறக்கிறார் போல நிற்க வேண்டுமே என நினைத்துக் கொண்டோம். லிப்ட் நின்று கதவு திறந்தது 4 மாடியில். இறங்கினோம்.

இல்லை என்றால்…அம்மாடியோவ்…ஆபத்பாந்தவன்..அனாதகரக்ஷகன் அவருக்கு நன்றி சொன்னேன். இறங்கினவுடன் நண்பர் நீங்கள் இதிலேயே செல்லுங்கள் என்றார். இல்லை,இல்லை 4 மாடிதானே நான் நடந்தே போய்கிறேன் என்றேன். ஒன்னும் பயமில்லை நான் வந்து விடுகிறேன் என்றார். காற்றோட்டமாக நான் மெதுவா…. நடந்தே போறேன் என்று மேலே ஏறினேன். அந்தப் பையான் எல்லா பட்டனையும்  தட்டியதால் லிப்ட் கண்பியூஷனாச்சு. கொஞ்ச நேரம் விட்டு அமுக்கினால் அது போகும் என அவரின் அனுபவம் எனச்சொன்னார்.

ஓ…இப்படியெல்லாம் இருக்கா என அப்போது தான் தெரிந்து கொண்டேன்.நீங்க எங்களை பத்திரமாக கொண்டு வந்து விட்டு விட்டீர்கள் நன்றி என்றேன்.
அங்கு டென்ஷன் பார்டி யாராவது அவர் இடத்தில் அன்று இருந்திருந்தால் நினைக்கவே பயமாக இருந்தது.

அந்தப் பையன் 7 மாடிக்கு செல்ல வேண்டும் போல வேகமாக ஏறியே சென்று விட்டான். அவன் யாருக்கோ மருந்துக் கடையில் இருந்து மருந்து டெலிவரி செய்ய வந்த பையன் என அவன் கையில் இருந்த மருந்தும், சீட்டும் உணர்த்தியது. 7 மாடியில் கதவின் முன் பெல் அடித்து விட்டு காத்திருந்தான். நான் மேலே வந்த போது கண்டது இது. உடனே நான் அச்சிறுவனிடம் சைகயில் பட்டனை எல்லாம் அமுக்கக் கூடாது ஒன்றை மட்டும் அமுக்க வேன்டும் எனச் சொன்னேன். அவனுக்கு புரிந்தது போலும் சரி என தலையாட்டினான்.

கதவைத் தட்டினால் திறந்து கொண்டு வா எனக் குரல். அப்படியொரு களைப்பு. கதைதிறந்து உள்ளே சென்றால் இவர்வேற போனில் ஹாயாக பேசிட்டு பேசிட்டே இருக்கிறார். மின்விசிறியை சுழலவிட்டேன். தண்ணீர் பாட்டில் எடுத்துவந்து அமர்ந்தேன். பிரஷர், டென்ஷன் அப்படி ஏறிவிட்டது எனக்கு. சுவாசம் வர சிறு அவகாசம் தேவைப்பட்டது. லிப்ட் பயம் போக சற்று நேரம் ஆகுமல்லவா… என்னன்னு கேட்காது இருந்த கட்டட வாழ் மக்களில் என்னவரும் இருக்க கோபம் தான் வந்தது. போனை கட் பண்ணினார் என் டென்ஷனை பார்த்து. மாட்டிக்கொண்ட விபரம் தெரிந்து ஒரே..சிரிப்பு வேற… அவனவன் கஷ்டம் அவனுக்குத்தானே தெரியும்…அப்படிங்குறீங்க…. வேற என்னத்தைச் சொல்ல….ஹஹஹஹஹா…!

இப்போது அதை நினைத்தாலும் வேர்க்கிறது….


மின்விசிறியைச் சுழல விடப் போகிறேன். வரட்டா…    

இது கதையல்ல நிஜம்...!!!
    


30 comments:

  1. உமையாள்,

    நல்ல திகிலான அனுபவம்தான். அப்போதைய வெறுப்பு, கடுப்பு எல்லாம் பின்னாளில் நினைத்துப் பார்க்கும்போது நமக்கே சிரிப்புதான் வரும். அதான் நீங்களே சிரிச்சிட்டீங்களே !!

    நல்ல உடற்பயிற்சிதான். ! 8 மாடி ஏறி இறங்குவது என்றால் சும்மாவா !!

    ReplyDelete
    Replies
    1. அப்போதைய வெறுப்பு, கடுப்பு எல்லாம் பின்னாளில் நினைத்துப் பார்க்கும்போது நமக்கே சிரிப்புதான் வரும்//

      ஆமாம்...நினைவலையில்...

      நல்ல திகிலான அனுபவம்தான்.//

      ஆமாங்க பட்டுக்கோட்டையார் எழுதுவார் இல்ல...அந்த மாதிரி திக் திக் தாங்க எனக்கும்..

      நல்ல உடற்பயிற்சிதான். ! 8 மாடி ஏறி இறங்குவது என்றால் சும்மாவா !!//

      இல்லங்க அன்று சாயங்காலம் 6 .30 இந்த அனுபவம் அடுத்த நாளே லிப்ட்ல போயாச்சு. 8 மாடி ஏறி இறங்குனா என்ன ஆகிறது...இல்ல.

      Delete
  2. எங்களுக்கும் படிக்க வேர்க்கத் துவங்கிவிட்டது
    அனுபவத்தைச் சொல்லிச் சென்றவிதம் அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கும் படிக்க வேர்க்கத் துவங்கிவிட்டது
      அனுபவத்தைச் சொல்லிச் சென்றவிதம் அருமை//

      நன்றி ஐயா

      Delete
  3. பயங்கர அனுபவந்தான் !! நல்ல வேளை என்னைபோன்று முழு டென்ஷன் பார்ட்டி யாரும் அங்கில்லை :)

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை என்னைபோன்று முழு டென்ஷன் பார்ட்டி யாரும் அங்கில்லை :)//

      அடடா...அப்படியா செய்தி...

      Delete
  4. Replies
    1. ஆமாம் சகோ நிம்மதி தான்

      Delete
  5. "//சமாதி கட்டுகிறதை படத்தில் பார்த்து இருக்கிறோம்…ஆனா நேர்ல பார்த்தது இல்லை…//"
    இந்த ஒரு வாரியே போதும்,நீங்கள் அந்த நேரத்தில் எவ்வளவு பயந்திருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு.
    சரியான திகில் அனுபவம் தான்.

    ReplyDelete
    Replies
    1. சும்மாவா....நல்ல அனுபவம் இல்ல...4 பக்கமும் சும்மா பக்காவா...பத்திரமா இருந்தா பயம் தான் வருகிறது என்ன செய்வது... நன்றி சகோ

      Delete
  6. நல்லவிதமாக வீட்டுக்குச் சென்றது குறித்து மகிழ்ச்சி..

    அவனாவது சின்ன பையன்.. ஆர்வக் கோளாறினால் எல்லா பட்டன்களையும் தட்டி - மின் தூக்கியின் நினைவினைக் குழப்பி விட்டான்..

    அந்த வேலையை - இங்கேயும் சில ஜந்துகள் செய்து கொண்டுதான் இருக்கின்றன..

    அனைவரையும் இறைவன் தான் காக்கவேண்டும்!..

    ReplyDelete
    Replies

    1. அவனாவது சின்ன பையன்.. ஆர்வக் கோளாறினால் எல்லா பட்டன்களையும் தட்டி - மின் தூக்கியின் நினைவினைக் குழப்பி விட்டான்..

      அந்த வேலையை - இங்கேயும் சில ஜந்துகள் செய்து கொண்டுதான் இருக்கின்றன..//

      இங்கேயும் அவர்கள் லிப்டை படுத்துறபாட்டை பார்த்தா ....என்னடா ஒரு பொருளை எப்படி கையாள்வதுன்னு தெரியலையேன்னு இருக்கும் எனக்கு..நென்ன செய்வது..ம்...

      நன்றி ஐயா

      Delete
  7. இன்னைக்கு உங்க தொட்டி மீனுக்கெல்லாம் தீனி போட்டிருக்கேன்!..

    ReplyDelete
    Replies
    1. சிலரோட வலைத்தளத்தில் மீன் பார்த்தேன். அழகாக அது நீந்துவது என்னை கவர்ந்தது. சரியென கேஜட்டில் பார்த்தேன். அம்மீன் இருந்தது சரி அப்படியே மீன் தொட்டிக்கு பிளாகரின் வரவேற்பறையில் இருக்கை கொடுத்து விட்டேன்.

      ஒரு கிளிக் செய்யும் போது மீன்கள் ஒன்றாக கூடுவது அழகு இல்லையா..?

      சிறிது நேரம் அவற்றுடன் இருப்பது ஆனந்தமாக இருந்தது. so...யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என போட்டேன்.

      Delete
  8. "//சமாதி கட்டுகிறதை படத்தில் பார்த்து இருக்கிறோம்…ஆனா நேர்ல பார்த்தது இல்லை…//"

    அந்த நேரத்துல இது தோணுச்சே அதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ "//சமாதி கட்டுகிறதை படத்தில் பார்த்து இருக்கிறோம்…ஆனா நேர்ல பார்த்தது இல்லை…//"

      அந்த நேரத்துல இது தோணுச்சே அதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.//

      என்ன செய்றது தன்னால தோணுதே.....

      Delete
  9. அனுபவகதை. ஆனா திகிலாக இருந்தது. இனிமேல் லிப்ட் ல் போனா உங்க(கதை) ஞாபகம் வரும். பத்திரமா நீங்க திரும்பியது மன ஆறுதல்.

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் லிப்ட் ல் போனா உங்க(கதை) ஞாபகம் வரும்.//

      என்னோட ஞாபகம் தொடருமில்லையா...ஹஹஹஆ... நன்றி அப்பாடி எல்லோருடைய ஞாபகத்துலயும் இடம் புடித்து விட்டேன்.மகிழ்ச்சி.

      பத்திரமா நீங்க திரும்பியது மன ஆறுதல்.//

      நன்றி தோழி.

      Delete
  10. நல்லவேளை யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை.
    த.ம.5

    ReplyDelete
  11. ஆம் ஐயா..நன்றி

    ReplyDelete
  12. #அவன் யாருக்கோ மருந்துக் கடையில் இருந்து மருந்து டெலிவரி செய்ய வந்த பையன் என அவன் கையில் இருந்த மருந்தும், சீட்டும் உணர்த்தியது.#
    மருந்து போய் சேர தாமதம் ஆனதால் ....என்ன ஆனது என்று யோசித்து ஒரு பதிவைப் போடலாமே :)
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. மருந்து போய் சேர தாமதம் ஆனதால் ....என்ன ஆனது என்று யோசித்து ஒரு பதிவைப் போடலாமே :)//

      அது சாதாரணமான டோர்டெலிவரி தான் ஐயா.(மருந்து) நடந்ததை மட்டும் எழுதினேன்.

      Delete
  13. வணக்கம் சகோதரி!

    நலமாக நீங்கள் லிப்டிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியமைக்கு இறைவனுக்கு நன்றி ௬றி கொள்கிறேன். முதலில் படிக்கும் போது இருந்த திகில் நீங்கி நலமே நடந்தது குறித்து மகிழ்ச்சி.!

    சில சமயங்களில் நாம் எதிர்பாராதது நடந்தால், அந்த சம்பவம் நினைவிலிருந்து நீங்க பல நாட்களாவது இயற்கை.! இனி எனக்கும் லிப்டில் பயணிக்கும் போது, தங்கள் அனுபவம் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலாது.!

    தாமதமாக வந்து கருத்திடுவதற்கு வருந்துகிறேன். ( பிரயாண களைப்பு )

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  14. கதையல்ல நிஜம்....

    சில சமயங்களில் இப்படி மாட்டிக்கொண்டு அவதி தான். பொதுவாக அலுவலக/வணிக வளாகங்களில் lift operator உண்டு. அடுக்கு மாடி வீடுகளில் ஆட்களை வைத்து அவர்களுக்கும் ஊதியம் கொடுக்க வேண்டுமெனில் அனைத்து உரிமையாளர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதால் யாரும் வைப்பதில்லை.

    திகிலான அனுபவம் தான்... சில சமயங்களில் அலுவலக லிஃப்ட் நின்று ஐந்தாறு நிமிடங்கள் உள்ளே இருந்ததுண்டு!

    ReplyDelete
  15. ungal payam enakum thotrikkondathu unmai than akka

    ReplyDelete
  16. திகிலான அனுபவமெ! தப்பித்தீர்களே! இங்கு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒரு குடும்பம் அவர்கலது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்து லிஃப்டுக்காக காத்திருந்து லிஃப்ட் வந்ததும் ஒவ்வொருவராக உள்ளே செல்ல கடைசியாக உள்ளே நுழைந்த பையனின் அம்மா முழுவதும் உள்ளே நுழையும் முன் அந்தக் கதவு தடாரென மூட அந்தப் பெண்மணி நசுங்கி அந்த இடத்திலேயே மரணத்தைத் தழுவினார்.....அதிலிருந்து பல இடங்களில் லிஃப்ட் செல்லாமல் நடைதான்.....

    ReplyDelete