Sunday 7 December 2014

பாஸ்தா - 3




தேவையான பொருட்கள்

பாஸ்தா - 1 1/2 கோப்பை
வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1/2 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கு

தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 2 மே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1.2 தே,க
சோம்பு - 1/4 தே.க
கருவேப்பிலை சிறிது





                                              தாளிக்கவும்.









வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.




தக்காளி,கருவேப்பிலை  சேர்த்து வதக்கவும்.




பொடிகளை சேர்த்து கிண்டவும்.
பாஸ்தாவை குக்கரில் உப்பு சேர்த்து வேகவிட்டு வடிகட்டிக் கொள்ளவும்.
பின் குளிர்ந்த நீரில் நன்கு அலசி தண்ணீரை வடிகட்டி விட்டு சேர்க்கவும்.
                                               


நன்கு பூப்போல் பிரட்டி விடவும்.
உப்பு காரம் சேரவும் எடுத்து விடவும்.



பாஸ்தா தயார்... இதை சாயங்காலம் டிபனாகவும் சாப்பிடலாம்.

சாதத்துக்கு பொரியலாகவும் தொட்டுக் கொள்ளலாம் நன்றாக இருக்கும்.

காய்கறி இல்லையா....? கவலை வேண்டாம் திடீரென  பண்ணிக் கொண்டு சாப்பிடலாம்.

பாஸ்தாவின் மேலும் சில செய்முறைகள்....
பாஸ்தா - 1
பாஸ்தா - 2
பாஸ்தா - குழம்பு

21 comments:

  1. ஆஹா டிபன் ஸூப்பர்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் தமவுக்கும் நன்றி சகோ

      Delete
  2. அருமை!.. எனக்கும் இப்படிச் செய்வது ரொம்பவே பிடிக்கும்!

    பார்கவே இப்பவே செய்யத் தூண்டுகிறது படம்!..:)

    பகிர்விற்கு நன்றி சகோதரி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும், தமவுக்கும் நன்றி சகோ

      Delete
  3. குழந்தைகளுக்குப் பிடித்த உணவு.

    ReplyDelete
  4. பாஸ்தா உடம்பிற்கு நல்லதா....?

    ReplyDelete
    Replies
    1. பாஸ்தா, சேமியா இவைகள் மைதா மாவில் தயரிக்கப்பட்டவை. ஆகையால் நலம் இல்லை தான். ஆனால் மேகி போல் வாக்ஸ் கோட்டிங் இல்லை. சில சமயங்கள் சாப்பிடலாம். அடிக்கடி உபயோகிக்காமல் இருந்து கொள்ளலாம்.

      Delete
  5. நானும் இது போல் செய்வேன் மசாலா பொடி போடுவேன், சாம்பார் பொடி போட்டதில்லை இது போல் செய்து பார்க்கிறேன்.
    பருப்பு முனுக்கி சாம்பார் செய்தேன் சுவையாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நானும் இது போல் செய்வேன் மசாலா பொடி போடுவேன், சாம்பார் பொடி போட்டதில்லை இது போல் செய்து பார்க்கிறேன்//

      செய்யுங்கள் அம்மா.

      பருப்பு முனுக்கி சாம்பார் செய்தேன் சுவையாக இருந்தது.//

      நன்றிங்க

      Delete
  6. இங்கே - (....... Catering Co., Kuwait.) மாலையில் Pasta தான் Main Menu.
    வழக்கமான Tomato Paste -க்கு ஒரு மாற்றாக - தங்களின் செயல்முறை..
    நாளைக்கு செய்து விடுகின்றேன்..

    (மீன்களுக்கு தீனி போட்டதில் குண்டாக இருப்பதை கவனிக்க வில்லையா!)

    ReplyDelete
    Replies
    1. இங்கே - (....... Catering Co., Kuwait.) மாலையில் Pasta தான் Main Menu.
      வழக்கமான Tomato Paste -க்கு ஒரு மாற்றாக - தங்களின் செயல்முறை..
      நாளைக்கு செய்து விடுகின்றேன்.//

      செய்துவிட்டு சொல்லுங்கள் ஐயா.

      (மீன்களுக்கு தீனி போட்டதில் குண்டாக இருப்பதை கவனிக்க வில்லையா!) //ஆகையால் தானோ திடீரென குண்டாகி விட்டது...ஹஹஹா...

      Delete
  7. சாதத்துக்கு பொரியலாகவும்! - What a combination! :) Let me try!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. சில சமயங்களில் சாப்பாடுப் பொரியலாக செய்துண்போம். (காரக்) குழம்பு சூப்பராக இருக்கும். ஆபத்பாந்தவன் போல இது உபயோகப்படும்.

      Delete
  8. ஆபத்பாந்தவனை என் இல்லாளிடம் அறிமுகப் படுத்தி விட்டேன் ,எப்போ வேணாலும் வரலாம் :)
    த ம 5

    ReplyDelete
  9. வணக்கம் சகோதரி!

    படங்களுடன் செய்முறை விளக்கமும்,நன்றாக இருக்கிறது. இதை அவ்வளவாக செயததில்லை.(உடம்புக்காகுமோ என்ற பயந்தான்) இனி வாங்கி தங்கள் செய்முறைப்படி செய்து பார்க்கிறேன்.
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  10. இந்தியன் ஸ்டைல் பாஸ்தா சூப்பர்.

    ReplyDelete
  11. இது எப்படி மிஸ்ஸானது தெரியவில்லை. நிச்சயம் செய்கிறேன் உமையாள்.சுலபமானது.நன்றி.

    ReplyDelete
  12. வித்தியாசமான பாஸ்தா....இப்படிச் செய்ததில்லை. மேற்கத்திய ஸ்டைலில் செய்வதுண்டு....இது நம்மூர் ஸ்டைல்.....பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete