Tuesday 23 December 2014

தாய்வீடு அழைக்கிறது...!!!


தாயின் மடியில்லை
தாய்வீடு அழைக்கிறது...
அமைதியான இல்லமாகி விட்டது...
ஆர்பாட்டம், ஆரவாரமில்லை

ஆ...வென நடுவாசல்...
ஆகாயம் பார்த்து கிடக்கிறது...
நினைவலைகளை மேலே
தேடுகிறதோ...?




பெரியதூண்களை கட்டிக்கொள்ள முடியாத
பிஞ்சுக் கைகள் நெஞ்சுக்குள்...
ஆ..வென பயந்து தாண்டிய ஹால்...
கருமையாய்...பீரோல்களின் அணிவகுப்பு


சுத்துப்பத்தியும்...
சுற்றி நிற்கும் கற்தூண்களும்
மைதானம்போல் நடுவாசல்...
நியாபகப் படுத்துது
கல்லாமண்ணா   ஆடியதை...


பள்ளி விட்டுவந்து...
வானம் பார்த்து தூண் சாய்ந்து
வீட்டுப்பாடம் படித்த இடம்
விட்டுப்போனாயே நலமா என்பது போல் இருக்கிறது

கைகளின் தடவலில் அதற்கு
பதிலுரைத்தேன்...
அமர்ந்து பார்த்தேன் வானத்தை...
அதே நட்சத்திரமும்
எனக்கு கண்சிமிட்டின...




பழைய வயது வந்திடாதோ தவிப்பு..
பாட்டுக் கேட்ட ரேடியோ
அலைகளின் அதிர்வுகள்...
சிலோன் ரேடியோ...
பாலசுப்ரமணியன், ஜானகியின் டூயட்...

அப்பத்தா, பெரியத்தா, சித்தியென
வளவில் வலம் வந்தோம் சிறார் கூட்டம்
இரவில் நிலாச் சோறு
அண்ணன், அக்காவென..
பெரியப்பா, சித்தப்பாமக்கள் ஒன்று கூடி
உண்டோம்...வட்டமாய் நடுவாசலில்..


இன்று
ஆட்களைக் காணோம்...
ஒருவர் இருவரென...
அவ்வப்போது வந்து போகும்
வசந்தமண்டமாய் இப்போது

பெரியவர் தனிமை உணரவில்லை
வயது ஒத்த மக்கள்
வாயார பேசினர்...
ஆதரவாய் அணைத்துக் கொண்டனர்
காய்ச்சல் கஞ்சி...
தம் வீட்டு விருந்து பரிமாறிக் கொண்டனர்
 அவரவர் சுற்றம் வர
வருகை களிப்பு...
வசந்தமாய் அனைவருக்கும்.

மூலைக் கொருவராய்
முனங்கள்கள்....இப்போது
பார்க்க முடியவில்லை...
பகிர முடியவில்லை...

பொருளீட்டல் மட்டும் !! அது முன்னேற்றமா.. பின்னேற்றமா!!
தெரியவில்லை .. ஓடுகிறோம் ஓடுகிறோம்...
இளைப்பாற சுவை நினைவுகள் நமக்கு
ஆனால்...
நம் வாரிசுகளுக்கு...???





49 comments:

  1. மடி நிறைந்தாலும் பாழாய்ப் போன
    மனம் மட்டும் நிறையவேயில்லை!..

    அது நிறைவதே இல்லை!..
    அதுவரைக்கும் -

    பழைய நினைவுகளை அசை போடும் -
    பனை மரத்து நிழலில் பசுமாடு போல!..

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா தங்கள் கருத்திற்கு நன்றி

      Delete
  2. தாய் வீடு அழைக்கிறது - சரி, ஊருக்கு போகப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள்.

    தங்களின் அம்மா வீடு தானே அது?

    கவிதை அருமை.

    "//அவ்வப்போது வந்து போகும்
    வந்தமண்டமாய் இப்போது//"

    வசந்த மண்டமாய் இருக்க வேண்டுமா - எனக்கு சரியாகத் தெரியவில்லை. எழுத்துப்பிழையாக இருந்தால் திருத்திக்கொள்ளுங்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ
      அம்மா வீடு தான்
      வசந்த மண்டபம்...தான் சரி செய்து விட்டேன். நன்றி

      Delete
  3. இனிமையான நினைவலைகள்.

    ReplyDelete
    Replies
    1. நினைவு....இனிமை...தான் நன்றி சகோ

      Delete
  4. சில சமயங்களில் சிலர் விலகி இருத்தலும் ஆரோக்கியம். வருந்தி ஆவது ஒன்றுமில்லை.
    மனதில் சுமை தாங்கிய பதிவு உங்கள் புகைப்படத்திலும் மின்னுகிறது சகோதரி. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சில சமயங்களில் சிலர் விலகி இருத்தலும் ஆரோக்கியம்.//

      ஆம்

      வருந்தி ஆவது ஒன்றுமில்லை.
      மனதில் சுமை தாங்கிய பதிவு//

      ஆம் சகோ நன்றி

      Delete
  5. ‘’ பொருளீட்டல் மட்டும் !! அது முன்னேற்றமா.. பின்னேற்றமா!!
    தெரியவில்லை .. ஓடுகிறோம் ஓடுகிறோம்...’’

    திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்றார்கள் நம் முன்னோர்கள். ஆனால் திரைகடல் ஓடி தங்கிவிடு என சொல்லவில்லை. அப்படி செய்திருந்தால் அண்ணாமலை அரசர் போன்ற கொடை வள்ளல்கள் இங்கே ஒரு பல்கலைக் கழகத்தைக் கண்டிருக்கமுடியுமா? எனவே பொருளீட்டல் முக்கியம்தான் அதே நேரத்தில் சொந்த பந்தங்களோடு வாழ்வதும் முக்கியமில்லையா சகோதரி அவர்களே!

    ReplyDelete
    Replies
    1. பொருளீட்டல் முக்கியம்தான் அதே நேரத்தில் சொந்த பந்தங்களோடு வாழ்வதும் முக்கியமில்லையா சகோதரி அவர்களே! //

      முக்கியம் தான் ஐயா.. நன்றி.

      Delete
  6. ஏக்கமொடு ஒலித்த இனிய நினைவுப் பாடல்!..

    எல்லோர் மனத்திலும் இருப்பதை அழகான கவிவரிகளால்
    அள்ளித் தெளித்திட்டீர்கள்! அருமை!
    வாழ்த்துக்கள் சகோதரி!

    த ம.2

    ReplyDelete
    Replies

    1. எல்லோர் மனத்திலும் இருப்பதை // ஆம் உள்ளே உறைந்தது...

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ

      Delete
  7. வணக்கம்

    ஏக்கஉணர்வை வெளிப்படும் கவிதை நல்ல கற்பனைத்திறன் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசனைக்கும் நன்றி சகோ

      Delete
  8. நித்தம் நித்தம்
    நினைவலைகள்
    நெஞ்சின் கரையை
    தொட்டுவிட்டு போகுதம்மா!

    சுற்றம் என்னும் மணலை
    கையில்
    அள்ளிக் கொள்ளத் தோணுதம்மா!

    "தாயின் வீட்டை" நோக்கி
    பறந்து செல்ல ...
    கடவுச் சீட்டாய்(Vஈஸா)
    அமைந்ததம்மா!-உனது
    அருங்கவிதை!

    அருமையென்பேன்
    அடியேன் நான்!

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. நல்ல கவிதையாய் கருத்து நவின்றதற்கு நன்றி சகோ

      Delete

  9. வணக்கம்!

    "உப்பிட்டவரை உயிர் உள்ள வரை நினை" - இது பழமொழி
    "உணவிட்ட விவசாயிகளுக்கு, வாழ்த்தும், நன்றியும் சொல்வதற்கு
    "குழலின்னிசை"- வலைப் பூ பக்காமாய் வாருங்களேன்!

    "இன்று விவசாயிகள் தினம்" (23/12/2014)

    நன்றி!

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. இதோ வருகிறேன் சகோ

      Delete
  10. ஏக்கத்தின் கவிதையை படித்ததைவிட புகைப்படங்கள் எனக்கும் அந்த நினைவுகளை தேவகோட்டை கொண்டு சென்றது இது தங்களின் வீட்டு உட்புறங்களா தேவகோட்டையில் ? எல்லா வீடுகளுமே இப்படித்தானே...
    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...ஊருக்கு கூட்டிச் சென்றதா...

      ஆம் அம்மா...வீட்டின்..உட்புறம் தான்.

      எல்லா வீடுகளுமே இப்படித்தானே...// ஆம் சின்ன சின்ன மாறுபாடுகள் கலை நயங்கள் வேறு பட்டு இருக்கும். நன்றி சகோ

      Delete
  11. பழைய நினைவுகளைத்தூண்டிவிட்டீர்கள். கண்கள் கலங்குகிறது. கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதையே இப்போது மறந்துவிட்டார்கள். அதுவும் பிறந்தவீடு என்பது கூடுதல் சுகம்தான். வீடும் அழகான தோற்றம். எங்களையும் ஒருநாள் கூட்டிச்செல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருடைய அடிமனதிலும் புதைந்த ஆசைகள்...

      எங்களையும் ஒருநாள் கூட்டிச்செல்லுங்கள்.//

      கூட்டிச் செல்கிறேன் சகோ நன்றி

      Delete
  12. மகிழ்வை ஒளித்து மனதை தொலைத்து
    அகிலம் முழுவது மேபொருள் தேடியலைந்
    தாலும்நோக் கம்நிறைவு றாசேர்க்கு மேஇனிமை
    போலுமென எண்ணுவது பொய் !

    நிறைவேறா ஆசைகளும் ஏக்கங்களும் இல்லையா .......நிறைவேறட்டும் தோழி தங்கள் ஆசைகள் .....

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...வாருங்கள் சகோ நீ................ண்ட நாட்கள்டஆகிவிடதே...பணிச்சுமை.காரணமா..?.
      அழகான பாவாக எழுதி விட்டீர்கள்..நன்றி

      Delete
  13. அருமை... அருமை...

    ஆசை அளவு காண வேண்டும்...

    ReplyDelete
  14. இன்று :

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Intellect-Part-1.html

    ReplyDelete
    Replies
    1. இதோ வருகிறேன் சகோ

      Delete
  15. உமையாள்,

    பொருளீட்டியதுடன் வேரைத் தேடி வந்துவிட வேண்டும் என்றுதான் வருகிறோம். ஆனால் ........ ?

    என்னுடைய மனச்சுமையை சொன்னமாதிரியே உள்ளது உங்களின் எழுத்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய மனச்சுமையை சொன்னமாதிரியே உள்ளது உங்களின் எழுத்துக்கள் !//

      புதைத்தோம் மனதில்...
      புதையலாய் நினைவுகளை
      தோண்டல் சில நேரம்
      வலிகள் மிகுந்திடும்...
      நினைவு பொக்கிஷம்
      நிறந்திடும் மனதில்...
      கண்கள் சொல்லும் அதற்கு...
      பன்னீர் துளிகளில்
      கோடி நன்றிகள்...!!!

      நன்றி சகோ

      Delete
  16. தேவகோட்டை செல்கிறீர்கள்...
    இனிமையான நினைவலைகள்... இப்போதைய நிலைக்கு மனச்சுமையை இறக்கி வைத்திருக்கிறீர்கள்...

    ReplyDelete
  17. அழகிய கவி வடிவத்தில் ஏக்கத்தின் நினைவலைகள்! அருமை சகோதரி!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும், நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  18. வணக்கம் சகோதரி!

    தாய் வீட்டு நினைவலைகளை, கவிதையாய் இனிமையுடன் நீங்கள் பகிர்ந்துள்ளது என் மனதிலும் அலைகளின் தாக்கத்தை உணர முடிகிறது.

    \\ தாயின் மடியில்லை
    தாய்வீடு அழைக்கிறது...
    அமைதியான இல்லமாகி விட்டது...
    ஆர்பாட்டம், ஆரவாரமில்லை//

    இந்த வரிகளின் உண்மை இதயத்தை அழுத்துகிறது. தற்சமயம் எத்தனையோ ஆர்பாட்டங்களும், ஆரவாரங்களும் அங்கிருந்தாலும், அந்த நினைவலைகளை மட்டும் சுமந்து கொண்டிருக்கும் நமக்கு தாயுடன் களித்திருந்த அந்த காலங்கள் மீண்டும் வருமா? உணர்ந்த வரிகள்! அருமையான கவிதை சகோதரி!

    தங்களுக்கும் தங்கள் உறவின் சுற்றத்திற்கும், என் இதயம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி!

    புத்தாண்டில் அனைவரும் அனைத்து வளங்களும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  19. வாழ்க வளமுடன்
    இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  20. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  21. மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  22. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    அன்புடனும், நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  23. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
    அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  24. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  25. அழகான தாய் வீடு:) படித்த நேரமோ என்னவோ நானும் என் தாய் வீடு சென்று திரும்பினேன்:) புத்தாண்டு வாழ்த்துகள் தோழி!

    ReplyDelete