Friday 19 December 2014

மோர் கூட்டு...!!!






தேவையான பொருட்கள் 

வாழைத்தண்டு - 1/2 தண்டு
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - ருசிக்கு
கெட்டி மோர் - 1 டம்ளர் (அ) தயிர்


அரைக்க வேண்டியது

தேங்காய் துருவல் - 4 மே.க
வரமிளகாய் - 2
மிளகு - 10
சீரகம் -  1/2 தே.க

இவற்றை அரைத்துக் கொள்ளவும்



தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 1 மே.க
கடுகு - 1/4 தே.க 
தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும் 






வாழைத்தண்டு சேர்க்கவும்.














மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு வேக விடவும்.











அரைத்ததை  ஊற்றவும்.











 சார விடவும் அடுப்பை அணைத்து விடவும்








சூடு சிறிது ஆறிய பின்


 கொத்தமல்லி & கெட்டி மோர் (அ) தயிர் விட்டு கலக்கவும்.



ஆஹா...மோர் கூட்டு பார்க்கையிலேயே...அடடா...
அருமை...








ஆஹா...மணம், குணம் (மருத்துவ)....நிறைந்த அருமையான வாழைத்தண்டு கூட்டு.

வாழைத்தண்டு உடம்புக்கு மிகவும் நல்லது....எப்போதும் செய்யும் கூட்டைவிட....இது சுவையோ சுவை...ஒரு தரம் செய்தால் மறுதரம் கண்டிப்பாக செய்வீர்கள்....அதற்கு நான் கேரண்டி...

ஓ...இப்போ...இப்படி...வேற சொல்ல ஆரம்பித்து விட்டாயா...?

என்னங்க செய்வது...நல்லதை நல்லான்னு தானே சொல்ல முடியும் ஹிஹிஹி....!!!  



19 comments:

  1. வணக்கம்
    சகோதரி

    பார்த்தவுடன் வாய் ஊறியது.. மிக அருமையாக செய்முறை விளக்கம் கொடுத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    த.ம தங்களின் பதிவை இணைத்து விட்டேன்
    த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் முதன்மையாய் வந்து கருத்தும், அத்துடன் த.மவில் இணைத்தமைக்கும் நன்றி சகோ.

      Delete
  2. மோர்க்கூட்டு செய்வதுண்டு..ஆனால் வெங்காயம் சேர்க்காமல், அண்ட் வர மிளகாய்க்குப் பதில் பச்சை மிளகாய், அண்ட் மிளகு சேர்க்காமல்.

    இது வித்தியாசமாக உள்ளதே செய்து பார்த்துட்டா போச்சு....நன்றி பகிர்வுக்கு சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...சகோதரி.. தங்களின் குறிப்பையும் செய்து பார்க்கிறேன்.

      செய்து பார்த்து விட்டு வந்து இந்த சகோதரிக்கு கூறுங்கள்...நன்றி

      Delete
  3. நானைய சனிக்கிழமை சங்கீதாவுக்கு விரதம் போட்டு வந்தேன் நல்ல கூட்டு வெறும் கூட்டு மட்டும் சாப்பிட்டேன்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...விரதம் மற்றவர்களுக்குத்தானே...(வலைச்சரம் - பெயர்) ஆனா..நமக்கில்லையே...அஹாஹாஹா...கூட்டு மட்டுமே ரொம்ப நல்லது சகோ...நன்றி

      Delete
  4. மருத்துவக் குணம் நிறைந்த வாழைத்தண்டும் மோர்க் கூட்டில் உண்டென்றால் நம்மாளுகளுக்கு நலம் தரும் உணவாச்சே!
    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
  5. வாழைத்தண்டு கூட்டா.. மோர் கூட்டா..!! நீங்க அரைச்சு வச்சிருக்குற அழகே தனி. வாழைத்தண்டு மருத்துவகுணமும் கொண்டது.

    ReplyDelete
  6. மோர் கூட்டு... ஆஹா... ஓஹோ...!

    ReplyDelete
  7. சொக்கா.. .. இன்னிக்கு ஒருகை பார்த்துவிட வேண்டியது தான்!..
    ஆனால் - குவைத்தில் வாழைத் தண்டுக்கு எங்கே போவேன்!?...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா....அங்கு வாழைத்தண்டு கிடைக்காதா....

      தாயகம் வரும் போது சாப்பிட்டுப் பாருங்கள் ஐயா.

      நன்றி

      Delete
  8. வாழைத்தண்டு மோர்க்கூட்டு - பார்க்கவும் நல்லாத்தான் இருக்கு! உடம்புக்கும் நல்லது. செய்து விடலாம்!

    ReplyDelete
  9. விதவிதமான சமையல்! படிக்கவே சுவையாக உள்ளது! என்னால் ருசிக்க முடியாது! முதுமை! உணவுகட்டுப்பாடு!

    ReplyDelete
  10. வாழைத்தண்டு கூட்டு பிரமாதம். இங்கு எப்பவாவது தான் இந்தியக் கடைகளில் கிடைக்கும்.

    ReplyDelete
  11. நிறம் கவர்கிறது.

    இதில் கூட வெங்காயம் சேர்க்காமல் செய்வதுண்டு!

    :)))

    ReplyDelete