Sunday 18 January 2015

வயலட் முட்டைக்கோஸ் பொரியல்

இந்த வயலட் கலர்.....முட்டைக்கோஸ் பார்க்க அழகாக இருக்கும். பார்க்கமட்டுமிலைங்க...பயன்களும் நிறைய நமக்கு கொடுக்கிறது.
பொட்டாஸியம், விட்டமின் எ ,விட்டமின் சி நிறைய இருக்கிறது. கோஸ்ல நார்சத்து அதிகம். 





தேவையான பொருட்கள்\


முட்டைக்கோஸ் - பாதி அளவு
(நடு அளவு)
பூண்டு - 15 பல்
கருவேப்பிலை - சிறிது
சாம்பார் பொடி - 1 1/2 தே.க
கரம்மசாலா - 1/2 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தே.அ




தாளிக்க வேண்டியது


எண்ணெய் -21/2 தே.க
சோம்பு - 1/2 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க



                                       தாளிக்கவும்.








பூண்டு ,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.










கோஸை சேர்த்து வதக்கவும்.










சாம்பார் பொடி + கரம் மசால் தூள்  + மஞ்சள் தூள் + உப்பு சேர்க்கவும்.

நன்கு வதங்கிய பின் இறக்கவும்.








                           புதிய சுவையோடு வயலட் கலர் கோஸ் பொரியல் தயார்....!!! 



24 comments:

  1. ஃபோட்டோவே ஸூப்பர்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. "நார்சத்து மிகுந்த வயலட் முட்டக்கோஸ் பொரியல்"
    ஆஹா! படித்ததுமே, உமிழ் நீர் ஊற்றாக பெருக்கெடுத்து வாயுடன்
    உறவாடுகிறது!
    நன்றி!
    புதுவை வேலு

    ReplyDelete
  3. ஓ.. அருமை! செய்து பார்க்கத்தூண்டும் படமும் குறிப்பும்!

    நன்றியும் வாழ்த்தும் சகோதரி!

    ReplyDelete
  4. நான் இதில் கொஞ்சம் கடலைபருப்பும் சேர்த்து தாளிப்பேன்:) பார்க்கவே ஆசையா இருக்கு தோழி!

    ReplyDelete
  5. ஆகா...! அழகுடன்...!

    செய்முறைக்கு நன்றி...

    ReplyDelete
  6. தங்கள் கை பட்டாலே அது அழகுதான்போல.. வயலட் முட்டைக்கோஸ் இதுவரை சாப்பிட்டது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. இனி சாப்பிட்டுப்பாருங்கள்.
      நன்றி சகோ

      Delete
  7. வயலட் முட்டைகோஸ் பார்த்ததில்லை. இதையே பச்சை கோசிலும் செய்யலாம்தானே.. செய்துடுவோம்!

    ReplyDelete
    Replies
    1. பச்சை கோசிலும் செய்யலாம்தானே.. செய்துடுவோம்! //

      செய்யலாம் சகோ நன்றி

      Delete
  8. நான் இதுவரையிலும் வயலட் முட்டைக் கோஸ் பயன்படுத்தியதே இல்லை..
    இதோ.. கிளம்பி விட்டேன்!..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...அப்படியா...

      செய்து விட்டு சொல்லுங்கள் ஐயா நன்றி

      Delete
  9. எங்கள் வீட்டில் எப்பொழுதும் இந்த வயலெட் மூட்டக்கோஸ் தான் .

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...சூப்பர்

      நன்றி சகோ

      Delete
  10. முட்டைக் கோஸ் சாப்பிட்டு மூன்று வருடங்களுக்கு மேலாகி விட்டது.
    ம்... படம் பார்க்கும் போதே அழகாயிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஏன் சகோ அங்கு உங்களுக்கு கிடைக்குமே..?
      செய்துண்டு மகிழுங்கள்.

      நன்றி

      Delete
  11. என் நூல் அகம் 3
    புதிய பதிவு

    ReplyDelete
    Replies
    1. டாஸ்போர்டில் வரவில்லை சகோ...வந்தேன்.

      Delete
  12. வயலட் முட்டைக்கோஸ் குறிப்புக்கு நன்றி உமையாள்.கிடைக்கிறது. உங்க முறைப்படி செய்துபார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. செய்யுங்கள் பிரியசகி நன்றி

      Delete
  13. நானும் சகோதரி மைதிலி சொல்லி இருப்பது போல் கடலைப் பருப்புத் தாளித்து செய்வதுண்டு....இங்கும் கிடைப்பதால் அடிக்கடிச் செய்வதுண்டு....

    ReplyDelete