Friday 23 January 2015

வாழைத்தண்டு பொரியல்



தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு - 1 ( மோரில் துண்டு துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் )
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 3 மே.க
கருவேப்பிலை

தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 11/2 தே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
சீரகம் - 1/4 தே.க
வர மிளகாய் - 1

                                       தாளிக்கவும்




 பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும்.





 வெங்காயம் சேர்த்து வதக்கவும்


மோரில் நறுக்கி வைத்த வாழைத்தண்டை கொண்டதை சேர்க்கவும்

உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். 

வெந்த பின் தேங்காய்துருவல் சேர்த்து இறக்கவும்.




                                                 வாழைத்தண்டு பொரியல் தயார்...!!!



25 comments:

  1. பொரியல் ஸூப்பர் அயிட்டம்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. மிகவும் பிடித்த ஒன்று.. ஆனால் இங்கு அதிகம் கிடைப்பதில்லை..நன்றி சகோ..

      Delete
  2. நான் விரும்பி உண்ணும் ரெஸிபி
    செய்முறை விளக்கம் இனி நானாகவே
    செய்து கொள்ளத் தெம்பளித்தது

    படத்துடன் பகிர்ந்தவிதம் வெகு வெகு அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சத்தானதும், எளிதாக செய்யக்கூடியதும்..கூட.. செய்து பாருங்கள் சகோ..நன்றி..

      Delete
  3. செய்து பார்க்கிறோம்... நன்றி...

    ReplyDelete
  4. Replies
    1. சுட்டிக்காற்றியமைக்கு நன்றி.. சரி செய்து விட்டேன்..

      Delete
  5. வெங்காயம் போட்டு செய்தது இல்லை, செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் சகோதரி..வெங்காயம் ஒரு தனிச்சுவையை கொடுக்கும்..நன்றி..

      Delete
  6. சூப்பர் பொறியல்...
    அருமை சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ.. எனக்கு மிகவும் பிடித்த ஒன்று

      Delete
  7. படங்களுடன் பகிர்ந்தது. அனைவரையும் கவர்ந்தது.

    ReplyDelete
  8. வாழைத் தண்டு - உடலுக்கு நன்மை தருவது. மிகவும் அரிதாகி வருகின்றது.
    குறிப்புகள் அருமை..

    ReplyDelete
    Replies
    1. "வாழைத் தண்டு - உடலுக்கு நன்மை. மிகவும் அரிதாகி வருகின்றது" மிகவும் சரியாகச்சொன்னீர்கள்.. நிறையப்பேர் செய்வதற்கு அலுத்துக்கொள்கிறார்கள்..

      Delete
  9. அருமை. வாழைத்தண்டு கூட்டும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ.. முன்பே கூட்டு பதிவிட்டிருக்கிறேன்..

      Delete
  10. நாங்களும் வெங்காயம் சேர்க்காமல் செய்வதுண்டு.

    ReplyDelete
  11. எல்லாப் பொறியலுக்கும் தாயார்!நாரில்லாமல் இருந்தால் சுகம்!

    ReplyDelete
  12. நல்லதொரு பகிர்வு. பார்க்க செய்யும் ஆவல். ஆனால் இங்கு வாழைத்தண்டு இல்லை.பரவாயில்லை கிடைத்தால் செய்துபார்ப்பேன்.

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு. வெங்காயம் இல்லாமல் இப்படிச் சாப்பிட்டதுண்டு! :)

    ReplyDelete
  14. வெங்கட் ஜொ சொன்னது போல் வெங்காயல் இல்லாமல் செய்வதுண்டு.....

    ReplyDelete