Sunday 1 March 2015

அவல் உப்புமா





தேவையான பொருட்கள்

அவல் - 1 கோப்பை
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - சிறிது
புளி - சிறிது
கருவேப்பிலை

தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 2 மே.க
வரமிளகாய் - 2
கடுகு - 1/4 தே.க
க.பருப்பு - 1/2 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
சீரகம். - 1/4 தே.க

                                                 தாளிக்கவும்




வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கி விட்டு

தக்காளி  சேர்த்து வதக்கவும்







மஞ்சள் தூள், புளிக்கரைசலை சேர்த்து உப்பு போட்டு சற்று வதக்கவும். நீர் வற்றிய பின்











அவலை சேர்த்து கிளறி இறக்கவும்.




            சுவையான ஆந்திரா ஸ்டைல் அவல் உப்புமா....இதோ உங்களுக்காக....!!!




15 comments:

  1. வழக்கம்போல வெங்காயம் சேர்க்காமல் நாங்கள் செய்வோம். புளியில் சற்று நேரம் ஊற வைத்து உப்புமா செய்தால் புளி அவல். மோரில் ஊற வைத்தும் செய்வோம்.. மோர் அவல். இரண்டிலுமே 'தஞ்சாவூர்க் குடைமிளகாய்'த் தாளித்து!

    ReplyDelete
  2. உங்களை செய்முறைப்படி செய்து பார்க்கிறோம்... நன்றி...

    ReplyDelete
  3. அவல் உப்புமா
    நம்ம வீட்டில் அறியாத ஒன்று
    என் மனைவிக்கு
    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
  4. பதிவுகள் தொடரட்டும்.. நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. வாவ்….!சூப்பர்.

    ReplyDelete
  6. செய்முறையும், விளக்கப்படங்களும் மிக அருமை. நீங்கள் அழகான பௌலில் வைத்திருப்பதை எடுத்து சாப்பிட முடியவில்லை. அடுத்த தடவை பார்சல் அனுப்புங்க சகோ.

    ReplyDelete
  7. அவள் உப்புமா அருமை
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  8. உங்கள் செய்முறைப்படி செய்த உப்புமா அருமை . நன்றி...

    ReplyDelete
  9. நேற்றைய அவல்உப்புமா இன்று ஆறிப் போயிருக்குமே என்று வந்தேன் ,சூடாய்தான் இருக்கிறது ,சுவைத்து மகிழ்ந்தேன் :)
    த ம 5

    ReplyDelete
  10. வணக்கம்
    செய்முறை விளக்கத்துக்கு அமைவாக செய்து பார்க்கிறேன்... த.ம 6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. சூப்பர் உப்புமா! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி.!

    படங்களுடன், அவல் உப்புமா, கண்ணுக்கு விருந்தளித்தன. நானும் இதே மாதிரிதான் (அவலை சிறிது நேரம் ஊற வைத்தப் பின் கலந்து செய்வேன்.) செய்வேன். தங்கள் செய்முறையும் மிகவும் நன்றாக இருந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி.!

    பிறகு நீங்கள் குறிப்பிட்ட பாணியில் ஒரு வாரத்திற்கு முன் ராஜ்மா தோசை செய்தேன். நன்றாக வந்தது. வீட்டிலும் பாராட்டுக்கள் கிடைத்தது. நீங்கள் குறிப்பிட்டபடி அன்றைய தினம் வீட்டில் கொத்தமல்லி இல்லையாததால், அதற்கு பதில் வீட்டில் அனைவரின் விருப்பமாக வெங்காயம் சேர்த்து செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நான் இதுவரை ராஜ்மா மட்டும் வைத்து தோசை செய்யாததால், புதுமையாகவும் இருந்தது. அந்த செய்முறையை பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள். கிடைத்த பாராட்டுகள் உங்களுக்கே சொந்தம்.! வாழ்த்துக்கள்.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. அ வ ள்
    செய்த
    அ வ ல்
    உப்புமா
    பார்க்கவே
    அழகாக
    உள்ளது. :)

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. நண்பர் ஸ்ரீ ராம் சொன்னது போலத்தான் ...இங்கும்.....

    ஆனால் வெங்காயம் சேர்த்தும் எப்பொதாவது செய்வதுண்டு....ம்ம்ம்ம் சூப்பர்! சகோதரி!

    ReplyDelete
  15. அருமையான அவல் உப்புமா.

    ReplyDelete