Thursday 5 March 2015

சீரக ரசம்



மருத்துவ குணம் நிறைந்த சீரகம்

சீரகம் மலத்தை கட்டும், புத்திக்கு பலன் தந்து ஞாபக சக்தியை பெருக்கும். கருப்பையை தூய்மைப்படுத்தும். விந்துவை வளர்க்கும், உடல்வலியும் வனப்பு பெறச்செய்யும். உணவுக்கு சுவையுண்டாக்கும். கண்களுக்கு குளிர்ச்சிதரும், வெறிநோய் (இன்சேன்டி) குணமாகும். குருதிக்கழிச்சல் என்னும் ரத்த பேதி குணமாகும். வாய்நோய்கள் அனைத்தையும் போக்கும்.
ஈரலை பலப்படுத்தும் கல்லடைப்பு எங்கிருந்தாலும் அதை வெளி த்தள்ள உதவும். வாயுவால் ஏற்படுகின்ற நோய்கள். மூக்கு சம்பந்தப்பட்ட நோய்கள். பித்த சம்பந்தப்பட்ட நோய்கள், கண் சூடு, எரிச்சல் ஆகியவை குணமாவதுடன் உடல் பலம் பெறும். பித்த வாந்தி, சுவையின்மை, வயிற்றுவலி, வாய்நோய், கெட்டிபட்டசளி, ரத்தபேதி, இரைப்பு, இருமல், கல்லடைப்பு, கண் எரிச்சல் ஆகியவற்றை போக்கும்.

சீரகத்தில் நறுமணமும் காற்றில் ஆவியாக கூடியதும் மஞ்சள்நிறம் கொண்டதுமான எண்ணெய்த் தன்மை 2.5-4% வரை உள்ளது. இந்த எண்ணெயில் “குமிக் அல் ஸ்ரீஹைட்” என்னும் வேதிப்பொருள் 52% அளவுக்கு செரிந்துள்ளது. இந்த எண்ணெயில் இருந்து செயற்கையாக “தைமால்” என்னும் ஓமஉப்பு செய்யப்படுகின்றது.

சீரகத்தின் எண்ணெய் சீழையும் கிருமிகளையும் அழிக்கவல்லது. மேலும் சீரகத்தில் அடர் எண்ணெய் 10%வரையிலும் பென்டோசான் 6.71 வரையிலும் அடங்கியுள்ளது.

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்....

சீரகத்தையும் மிளகையும் சமபங்கு எடுத்து பாலோடு சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து குளிக்க தலை அரிப்பு பொடுகு, பேன் முதலியன ஒழியும்.

ஒரு லீட்டர் நல்லெண்ணெயில் சுமார் 30 கிராம் சீரகத்தை பொடித்து போட்டு நன்றாக காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து வைத்திருந்து சிறிது நேரங்கழித்து குளித்துவர தலை உஷ்ணம் (காலச்சூடு), உடற்சூடு (உள்அனல்), மேகத்தழும்பு (தோல்நோய்கள்) ஆகியன குணமாகும்.

மிளகு, சீரகம் இரண்டையும் சமஅளவு சேர்த்து பொடித்து வைத்துக் கொண்டு வெருகடி அளவு தேனில் குழைத்தோ அல்லது வெந்நீருடனோ சேர்த்து சாப்பிட அஜீரணத்தால் ஏற்பட்ட கடுமையான வயிற்றுவலி, பித்த மயக்கம், அரோசகம் (உணவின் மீது வெறுப்பு) ஆகியவை போகும்.

சீரகத்தை அரைத்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் வைத்துக் கட்ட கட்டியினால் ஏற்படும் உஷ்ணத்தையும், வலியையும் போக்குவதோடு வீக்கமும் வற்றும்.

சீரகத்தை அரைத்து ஒரு கரண்டி அளவு எடுத்து எலுமிச்ச சாற்றில் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க கர்ப்பிணிகளுக்குத் துன்பம் தரும் வாந்தி குணமாகும். ஒரு கரண்டி அளவு சீரகத்தைப் பொடித்து ஒரு வாழைப்பழத்தோடு சேர்த்து உறங்கப் போகும் முன் சாப்பிட நல்ல தூக்கம் வரும்.

வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிடி) அதிகமானதால் ஏற்பட்ட வயிற்று வலிக்கு ஒரு ஸ்பூன் சீரகத்தை வாயிலிட்டு மென்று அதன் சாற்றை விழுங்க உடனே பலன் கிடைக்கும்.

சீரகம், இந்துப்பு (-நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டையும் சேர்த்து மைய அரைத்து அத்துடன் சிறிது நெய்விட்டுச் சூடாக்கித் தேனீ கொட்டிய இடத்தில் பூசி வைக்க நஞ்சு இறங்கி வலி மறையும்.

சீரகப் பொடியோடு கற்கண்டு தூள் சேர்த்து தினம் இரு வேளை சாப்பிட்டு வர குத்திருமல், வறட்டு இருமல் என வரும் எந்த இருமலும் தணியும்.
சீரகத்தை பொடித்து வெண்ணெயில் குழைத்துக் கொடுக்க எரிகுண்மம் என்னும் (அல்சர்) வயிற்று உபாதை குணமாகும்.

2 கிராமும் சேர்த்துக் கலந்து தினமும் இரு வேளை உட்கொண்டு வர காமாலை வாயுத் தொல்லைகள், உட்காய்ச்சல் தீரும்.

சீரகம். ஏலம், பச்சைக்கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடித்து அதன் எடைக்குச் சரி எடை சர்க்கரை சேர்த்து வைத்துக் கொண்டு அந்தி சந்தி என இரு வேளை ஒரு கரண்டி அளவு சாப்பிட்டு வர மந்தம். வாயு, ரத்த அழுத்தம் சமனாகும்.

5 கிராம் சீரகத்தோடு 20 கிராம் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர் குடித்துவிட வயிற்றுப் போக்கு குணமாகும். சீரகத்தை ஒரு கரண்டி அளவு திராட்சை பழச் சாற்றுடன் சேர்த்துக் குடிக்க உயர் ரத்த அழுத்தம் குறையும்.

நன்றி தினகரன்.


தேவையான பொருட்கள்

து.பருப்பு - 1 1/2 மே.க      (து. பருப்பு சற்று சிவக்க வறுத்துக் கொள்ளவும்)
சீரகம் - 3/4 தே.க
இவை இரண்டையும் தண்ணீரில்
1/2 மணி நேரம் ஊறவிடவும்.

ஊறிய பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து விட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக்  கொள்ளவும்


மிளகாய் - 2
எண்ணெய் - 1/2 தே.க
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தக்காளி - 1 பெரிது
சாம்பார் பொடி -1 தே.க
உப்பு -ருசிக்கு
கொத்தமல்லி - சிறிது
கருவேப்பிலை - சிறிது


எண்ணெய் விட்டு மிளகாயை கிள்ளிப் போட்டு சற்று வறுபட்ட பின்








தக்காளி சேர்த்து வதக்கவும்.











புளித்தண்ணீரை சேர்க்கவும்.










சாம்பார்ப் பொடியை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.





பின் அரைத்ததை ஊற்றவும்.உப்பு சேர்க்கவும்.


கொத்தமல்லி & கருவேப்பிலையைச் சேர்க்கவும். (கொத்தமல்லி கைவசம் இல்லாததால் நான் கருவேப்பிலை மட்டும் சேர்த்து இருக்கிறேன்)
தாளிக்க வேண்டியவை

நெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
பெருங்காயம் - சிறிது.

                                தாளித்து சேர்க்கவும்





























                                சும்மா கமகமன்னு............சீரக ரசம் சுடசுட...இருக்கு...!!! 

வாரம் ஒரு முறை....செய்து கொள்ளலாம். வித்தியாசமான ரசமாக  இருக்கும்.
வேண்டும், வேண்டும் என கேட்க வைக்கும் ரசம். தெரியாதவர்கள் முயற்சியுங்களேன்...







32 comments:

  1. // சும்மா கமகமன்னு............சீரக ரசம் சுடசுட...இருக்கு...!!! வாரம் ஒரு முறை....செய்து கொள்ளலாம். வித்தியாசமான ரசமாக இருக்கும். வேண்டும், வேண்டும் என கேட்க வைக்கும் ரசம். தெரியாதவர்கள் முயற்சியுங்களேன்...//

    படித்ததுமே [சீரக ரஸத்தைக்] குடித்துபோல பேரெழுச்சியை ஏற்படுத்திவிட்டது இந்தப்பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. படித்ததுமே [சீரக ரஸத்தைக்] குடித்துபோல பேரெழுச்சியை ஏற்படுத்திவிட்டது இந்தப்பதிவு. பாராட்டுக்கள்//

      ஆஹா.... மிக்க நன்றி ஐயா.

      Delete
  2. படமே அழகு ரசம்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. ரசித்து சொன்னதற்கும் தமவுக்கும் நன்றி சகோ

      Delete
  3. looks yummy and delicious :P .

    thanks for the information about benefits of cumin seeds

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஏஞ்சலின். நீண்ட நாட்களாக காணவில்லையே சகோ. குழந்தைகளுக்கு பரீட்சை சமயமா..?

      Delete
  4. அருமையான தகவல்களோடு, அட்டகாசமான படங்களோடு சூப்பராச் சொல்லியிருக்கீங்க...

    ReplyDelete
    Replies
    1. ரசித்து சொன்னதற்கு மிக்க நன்றி ஶ்ரீராம்

      Delete
  5. இத்தனை பயன்களா....? தொகுத்து பதிவு செய்தமைக்கு நன்றி சகோதரி...

    ரசம் சூப்பர்...!

    ReplyDelete
    Replies
    1. ஊக்கத்திற்கு நன்றி சகோ

      Delete
  6. சீரக ரசத்தின் வாசனை இங்க வரைக்கும் வருதே!!!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...வாசம் சொல்லாம கொள்ளாம வந்துவிட்டதா....ஹஹஹா...

      Delete
  7. மணக்கிறது ரசம். புகைப்படங்கள் கண்ணுக்கு அழகு. இவ்வாறான பான வகைகளை விட்டுவிட்டு விலகிச்சென்று நம் உடல் நலனை நன்கு கவனிக்கத் தவறிவிடுகிறோம். பயனுள்ள பதிவு.

    ReplyDelete
    Replies
    1. இவ்வாறான பான வகைகளை விட்டுவிட்டு விலகிச்சென்று நம் உடல் நலனை நன்கு கவனிக்கத் தவறிவிடுகிறோம்//

      ஆம் ஐயா உண்மை தான்

      Delete
  8. சீரகத்தின் பலன்களைப் பற்றிய குறிப்பும், உங்கள் செய்முறை குறிப்பும் மிக அருமை சகோ.

    எனது வலைப்பூவுக்கும் வந்து வாழ்த்து சொன்னதற்கும் நன்றி சகோ..

    ReplyDelete
  9. சீரக ரசம் புது ரெசிப்பி. சீரகம் மருத்துவகுணம் உள்ளது என்பதும்,அதனைபற்றிய தகவல்களையும் சேர்த்து பதிவிட்டது அருமை. நன்றி உமையாள்.

    ReplyDelete
  10. அப்பா!... எத்தனை விஷயங்கள்.. சீரகத்தைப் பற்றி!..

    சீர் + அகம் = சீரகம் என்றார்கள்.. மெய்தான்!.. சீரக ரசம் அருமை!..

    ஆனாலும் இந்த ஊடகங்களை முழுதுமாக நம்பி விடாதீர்கள்.. ஆளாளுக்கு ஒரு மாதிரி சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் இந்த ஊடகங்களை முழுதுமாக நம்பி விடாதீர்கள்.. ஆளாளுக்கு ஒரு மாதிரி சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்..//

      ஆம் அது என்னவோ வாஸ்தவம் தான்...ஐயா.

      Delete
  11. அருமையான ரசம்.....

    சீரகம் பற்றிய தகவல்கள் நன்று.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  12. தங்கப் பதிவுகளைப் பார்க்கும் போது ஆர்வமாக சமைக்கத் தோனுது, சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லையே...என்னைச் சொல்லிக் கொள்கிறேன் சகோ...நன்றி

      Delete
  13. படத்தைப் பார்த்ததுமே ரசம் செய்து குடிக்கும் ஆவல் வந்து விட்டது
    தோழி ஆதலால் இந்த ரசத்தைக் கொஞ்சம் எனது முகவரிக்கு அனுப்பி
    வையுங்களேன் பிளீஸ் :)

    ReplyDelete
    Replies
    1. அனுப்பி விட்டால் போச்சு. சகோ. நீண்ட நாட்கள் கழித்து கண்டதில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  14. த.ம 6 வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  15. சாம்பார் போடி போட்டு ரசமா !!! கமகமன்னு தான் இருக்கும்:)

    ReplyDelete
  16. அருமையான சீரக ரசம்.
    உங்கள் பதிவுகள் என் டேஸ்போர்டில் தெரிய மாட்டேன் என்கிறது என்ன காரணம் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  17. சீரகம் பற்றிய அருமையான தகவல்கள்! இந்த ரசத்தில் சாம்பார் பொடிக்குப் பதிலாக ரசப் பொடி போட்டு இதே முறையில் செய்வதுண்டு. ம்ம்ம் சாம்பார் பொடி போட்டுச் செய்து பார்க்க வேண்டும்.....

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் சகோ...நன்றி

      Delete