Saturday 14 March 2015

நீர் கொழுக்கட்டை







தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கோப்பை
உப்பு - தே.அ
நெய் - 1 தே.க

தாளிக்க வேண்டியவை
எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 3/4 தே.க
கருவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 2 அ 3





1 1/2 டம்ளர் தண்ணீரில் 1/2 தே.க நெய்விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.










த. கொதிக்கும் போது மாவை சிறிது சிறிதாக போட்டுக் கொண்டே கிளறவும்.



கிளறிய மாவை மூடி போட்டு 15 நிமிடங்கள்  விடவும். 


 பின் நெய் தொட்டுக் கொண்டு மாவை நன்றாக பிசையவும்.

நெய் தொட்டுக் கொண்டு கொழுக்கட்டைகளாக உருட்டவும்

இட்லி பாத்திரத்தில் அவிக்கவும்.




                                              தாளிக்கவும்




கொழுக்கட்டைகளை சேர்த்து கிளறவும்.




                                      நீர் கொழுக்கட்டையை இப்போது சாப்பிடலாம். 

ஆரோக்கியமான வயிற்றுக்கு ஒன்றும் செய்யாத டிபன் இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  சாப்பிடக்கூடியது இது.

இட்லி பொடியை தொட்டுக் கொண்டும் அல்லது இதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.

சற்று கூடுதலாக உ. பருப்பை தாளித்தால் கொழுக்கட்டையுடன் இப்பருப்பையும் கடக் கடக்கென சாப்பிட ஜோராக இருக்கும். பல் எவ்வளவு ஸ்ட்ராங் என்பதை பொறுத்து முயல்வதும், முயலாததும் அவரவர் விருப்பம்.

வயதானவர்கள் கொழுக்கட்டையை மட்டும் சாப்பிட்டு மகிழலாம்.

இது எல்லாம் ஒரு க்ளு தான் நண்பர்களே.....வேறு ஒன்றுமில்லை.





குறிப்பு

மாவு கிளறும் போது விரும்புபவர்கள் தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளலாம். அதன் ருசி அருமையாக இருக்கும்.

கைவசம் தேங்காய் துருவல் இல்லாத காரணத்தால் நான் இன்று சேர்க்கவில்லை. இல்லை என்றாலும் அருமையாக இருக்கும். சிலர் தேங்காய் சேர்ப்பதை இப்போது குறைத்து வருகிறார்கள்.



27 comments:

  1. ஆகா!..

    எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே..
    என்னை அறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே!..

    பால் கொழுக்கட்டையை அடுத்து நீர் கொழுக்கட்டை!..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...

      முதலில் வந்து....சூப்பரான பாட்டை போட்டு அசத்தி விட்டீர்கள் ஐயா. நன்றி

      Delete
  2. இப் பகிர்வைப் பார்த்ததுமே வாயூறுதே இதக் கொஞ்சம் சமைச்சுச்
    சாப்பிட்டால் தான் மனசும் அடங்கும் போல ம்ம்ம்ம்ம்ம் :))அருமையான
    படைப்பு ! வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. சமைத்து சாப்பிடுங்கள் சகே நன்றி

      Delete
  3. நெல்லிக்காயோ என்று நினைத்தேன்... அவ்வளவு அழகாக செய்துள்ளீர்கள்...

    ReplyDelete
  4. சகோதரி! சூப்பரான கொழுக்கட்டை....கம கம வாசம் வருதே......யும்மி மிகவும் பிடித்த உணவு....

    இதை அம்மணிக் கொழுக்கட்டை (ஒரு வேளை மணி போன்று இருப்பதால் மணிக் கொழுக்கட்டை நாளடைவில் இப்பெயர் பெற்றதோ தெரியவில்லை) என்று திருநெல்வேலி பக்கத்தில் சொல்லுவதுண்டு.

    இதெ ரிசிப்பிதான். தேங்காய் சேர்ப்பதும் உண்டு. நீங்கள் சொல்லி இருப்பது போல்....இல்லை என்றால் தேங்காய் மேலாகத் தூவி புரட்டி எடுப்பதுண்டு...

    மற்றொரு ரிசிப்பி கொழுக்கட்டை செய்து, பருப்பு உசிலி செய்வோம் இல்லையா அது போன்று உசிலி செய்து அதில் இந்தக் கொழுக்கடைகளைச் சேர்த்தும் செய்வதுண்டு.

    நீங்கள் இட்லித்தட்டில் வேக வைத்து செய்துள்ளீர்கள் இல்லையா இதை அப்படியே நீர் கொதிக்கும் போது போட்டு வேக வைத்து அப்படியே நீருடன் சேர்த்து "நீர் கொழுக்கட்டை" என்று செய்வதுண்டு

    கேரளத்தில் ஒரு சமூகத்தினர், கேரளா சிவப்பு புழுங்கல் அரிசி இல்லை என்றால் சிவப்பு பச்சை அரிசியை (சம்பா அரிசி) ஊற வைத்து தேங்காயுடன் உப்பு இட்டு சிறிது சின்ன ரவைப்பக்குவத்தில் அரைத்துக், கெட்டியாக அரைக்க முடிந்தால் கிளறத் தேவை இல்லை , இல்லை என்றால் சிறிது கிளறி உருண்டை பிடித்து, வாணலியில் தாளித்து, நீர் கொதிக்க வைத்து அதிலும் தேவையான உப்பு போட்டுக் கொதிக்கும் போது இந்தக் கொழுக்கட்டைகளைச் சிறிது பெரிதாக பிடி கொழுக்கட்டைகளாகப் போட்டு வெந்ததும் மிதக்கும். அதை அந்த நீருடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கும் தெரிந்திருக்கும். உங்களுக்குத் தெரியாததா என்ன.....தொட்டுக் கொள்ள சட்னி எதுவானாலும் .....பகிரத் தோன்றியதால் பகிர்ந்து கொண்டேன் சகொதரி/தோழி.....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்க்க ஆவலைத் தூண்டும் ரெசிப்பியை சொல்லி இருக்கிறீர்கள். செய்து பார்த்து விட்டு சொல்கிறேன். நன்றி சகோ.

      செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை செய்வோம். ஆடி, தை, மாசி ஆகிய மூன்றுமாதங்களில் செவ்வாய்கிழமையில் செய்வோம் பெண்கள் மட்டுமே செய்து சாப்பிடும் கொழுக்கட்டை இது. சிகப்பரிசி மாவில் செய்து (பல வடிவில்) அதை சொல்லக்கூடாது ஆகையால் சொல்லவில்லை. அக் கொழுக்கட்டையை நீரில் வேகவிட்டு வடிகட்டி விடுவோம். தனியாக கொழுக்கட்டையும் அதற்கு தேங்காய் கீறலும் சேர்த்து சாப்பிடுவோம். அந்த டேஸ்ட் இப்போ நினைத்தாலும் ஆஹா சொல்ல முடியாத சுவை அது. அந்த தண்ணீரும் அருமையாக இருக்கும் குடிக்க. இதில் முக்கியமான ஒன்று உப்பு இல்லாமல் செய்வோம்.உப்பு இல்லாதது தெரியவே தெரியாது. சிகப்பரிசி இல்லாத பட்சத்தில் சாதாரண அரிசி மாவில் செய்வோம். உங்களுக்கு தெரிந்து இருக்கும் சகோ.

      Delete
  5. அடுத்து More கொழுக்கட்டைகள் வரட்டும்.

    ReplyDelete
  6. வணக்கம்

    செய்முறை விளக்கத்துடன் அசத்தல்... செய்து பார்க்கிறோம்... பகிர்வுக்கு நன்றி த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி.!

    தெளிவான படங்களுடன், செய்முறை விளக்கங்களும், அற்புதம்.... பார்க்கும் போதே செய்து சாப்பிடும் ஆவலை தூண்டுகிறது, பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி...

    வீட்டில் வரலெஷ்மி நோன்பிற்கு கொழுக்கட்டைகள் செய்தது போக மீதியுள்ள கிளறி வைத்திருக்கும் இந்த அரிசி மாவில் நீங்கள் குறிப்பிட்டபடி, தேங்காய் பூவையும் சேர்த்து இந்த மாதிரி சின்ன சின்ன கொழுக்கட்டைகள் செய்வோம். அந்த நினைவு வந்தது.இட்லி அரிசியை தேங்காயுடன் கெட்டியாக அரைத்து, நீர் கொதிக்க வைத்து அதிலும் இதே மாதிரி கொழுக்கட்டைகள் செய்யலாம், நீருடன் சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    தங்களது பாணியில் அழகான வடிவத்தில் வந்திருக்கும் கொழுக்கட்டைகள் என்னை இப்படியெல்லாம் எழுத தூண்டி விட்டது.வேறு ஒன்றுமில்லை! எப்படியோ.! நீங்கள் பகிர்ந்ததை பார்த்தவுடன் சாப்பிடும் ஆவல் அதிகமாகி விட்டது. நன்றி சகோதரி..

    என்தளம் தொடர்ந்து வந்து பதிவுகளுக்கு கருத்திட்டு, என் உடல் நலம் விசாரித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி..

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...அருமை சகோ புதிய ரெசிப்பி தந்து இருக்கிறீர்கள். செய்ய ஆவலாய் இருக்கிறேன். செய்து பார்த்து விட்டு சொல்கிறேன். இன்னும் புதிய புதிய நீர் கொழுக்கட்டைகள் இருக்கின்றதை சொன்ன சகோக்களுக்கு மிக்க நன்றி. உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். சகோ.

      Delete
  8. கொழுக்கட்டை வகைகளாக போட்டு அசத்துதீங்க சகோ. உங்கள் மோர் குழம்பு பதிவைப் பார்த்து இன்று செய்தேன்.மிக அருமையாக இருந்தது சகோ. தொடர்ந்து அசத்துங்க !

    ReplyDelete
    Replies
    1. ஆஹா மோர் குழம்பு செய்து பார்த்து, பின் ருசித்து வந்து அன்புடன் கருத்து சொன்ன சகோவிற்கு மிக்க நன்றி. தொடர்ந்து அசத்துங்க என வாழ்த்தியமைக்கு நன்றி.

      Delete
  9. நெல்லிக்காய் போலத் தெரிகிறது படங்களில். இதுவரை இப்படிச் செய்ததில்லை. ஒருமுறை முயற்சித்துப் பார்க்கிறோம். தமிழ் மணத்தில் என்ன ஒரு நெகட்டிவ் வோட்?

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் சகோ.

      யாரோ தவறுதலாக போட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

      Delete
  10. துளசிஜி சொல்லும் அம்மிணிக் கொழுக்கட்டைகள் நாங்களும் செய்வோம். தித்திப்பு மற்றும் காரக் கொழுக்கட்டைகள் செய்தபிறகு, மீந்து போகும் மாவில் காரப்பொடி, பெருங்காயம், போன்றவற்றைச் சேர்த்து விருப்பப்பட்ட ஷேப்களில் செய்து அவித்து விடுவோம். அதற்கு டிமாண்ட் ஜாஸ்தியாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...சூப்பர் நன்றி சகோ

      Delete
  11. மேலே ஸ்ரீராம் சொல்லியுள்ளதுபோல நாங்கள் அடிக்கடி செய்யும் காரசாரமான அம்மிணிக் கொழுக்கட்டை போலவே இதுவும் பார்வைக்கு உள்ளது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      Delete
  12. கொழுக்கட்டை பிடிக்காத ஆளும் இருக்கார் போலிருக்கே ,அவர்தான் நெகடிவ் வோட் போட்டிருப்பாரோ :)
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் நினைக்கிறேன்... ஒரு வேளை தவறுதலாகவும் போட்டிருக்கலாம்.

      Delete
  13. என் அம்மா இருக்கும்போது,அவர்கள் செவ்வாய்க்கிழமை சாமி கும்பிடும்போது, எங்களுக்கு இந்த கொழுக்கட்டையை செய்து கொடுப்பார்கள்.

    ReplyDelete
  14. இதில் தேங்காய், வரமிளகாய் அரைத்து போட்டு தாளித்து சாப்பிடலாம், மிக ருசியாக இருக்கும்.
    நீர் கொழுக்கட்டை என்றால் தண்ணீரில் வேக வைத்து கொழுக்கட்டை எடுத்தபின் அந்த தண்ணீரில் தேங்காய், வெல்லம் போட்டு கொதிக்க வைத்து குடிப்பார்கள் மிக ருசியாக இருக்கும்.
    படங்கள் மிக அழகு.

    ReplyDelete