Wednesday 4 March 2015

குதிரைக் கண்

கவிதை  தலைப்பில்  பதிவு 50....
அட பரவாயில்லையே...!!!





முடியுமென்கிற...
நினைப்பும் கனவும்
நாலடி முன்னே 
நடத்திச் செல்லும்...


ஆசையும் ஊக்கமும்
ஆவன  செய்ய
அழைத்துச் செல்லும்...

திடமும் திண்மையும்
தீவிரம் ஆகிட
தீட்டுவோம் திட்டம்
தீர்வை எண்ணியே..

குறிக்கோளை
குறி பார்க்க...
குதிரைக் கண் போல்
மனம் அகலாது

விரும்பி விரும்பிச்
செய்திடுவாய்
விரைந்து....
வரும் அது 
உனை  நோக்கி...

அவையும் நீயும் ஆரத்தழுவ
அண்டம் நோக்கும் உனை
அண்ணார்ந்து....!!!






படம் கூகுள் நன்றி



31 comments:

  1. "முடியுமென்கிற...
    நினைப்பும் கனவும்
    நாலடி முன்னே
    நடத்திச் செல்லும்..." என்ற அடிகளில்
    நம்பிக்கை வெளிப்படுகிறது...
    தன்நம்பிக்கையை வெளிப்படுத்தும்
    சிறந்த பதிவு

    ReplyDelete
  2. "முடியுமென்கிற...
    நினைப்பும் கனவும்
    நாலடி முன்னே
    நடத்திச் செல்லும்..." என்ற அடிகளில்
    நம்பிக்கை வெளிப்படுகிறது...
    தன்நம்பிக்கையை வெளிப்படுத்தும்
    சிறந்த பதிவு

    ReplyDelete
  3. கவிதை எழுத முடியும் என்ற நினைப்பில் எழுத ஆரம்பித்து 50 கவிதைகளை எழுதி முடித்த தங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வலைப்பதிவினில் 50 ஆவது கவிதை. சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
    த.ம.2

    ReplyDelete
  5. அருமை... தீர்வை எண்ணி திட்டம்...

    50 இன்னும் பல நூறுகள் ஆக வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்த ஊக்கத்தினால்...தொடர்கிறேன்... சகோ நன்றி

      Delete
  6. //முடியுமென்கிற...
    நினைப்பும் கனவும்
    நாலடி முன்னே
    நடத்திச் செல்லும்..//

    தன்னம்பிக்கையூட்டும் வரிகள்..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  7. வணக்கம்
    மனதை நெருடும் கவிதை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி.த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. குதிரை சிந்தனை வரிசையில் இது இரண்டாவதா,சபாஷ் :)
    த ம 5

    ReplyDelete
  9. முடியும் என்ற நினைப்பே நம்மை முன்னே நடத்திச் செல்லும். அருமையான வரிகள், வாழ்த்துகள் அரை சத கவிதைக்கு.

    ReplyDelete
  10. கவிதை மிக அருமை சகோ. நான் மிகவும் ரசித்து வாசித்தேன்.

    வருகின்ற 6th என்னுடைய blog 3rd anniversary ! அன்றைய பதிவு அசோகா அல்வா ! நீங்கள் கண்டப்பாக எனது வலைப்பூவுக்கு வருகை தாருங்கள். Advance Thanks சகோ.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வருகிறேன் சகோ. அட்வான்ஸ் வாழ்த்துக்கள். அசோகா அல்வான்னு வேற சொல்லிட்டீங்க ஒரு பிடி பிடிக்க வேண்டாமா...? ஹஹஹா....!!!

      Delete
  11. //கவிதை தலைப்பில் பதிவு 50....//

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    அட பரவாயில்லையே...!!!

    குதிரைக் கண் போல் மனம் அகலாது விரும்பி விரும்பிச் செய்திருந்தால் இந்நேரம் கவிதைத் தலைப்பில் 5000 த்தையே எட்டியிருப்பீர்கள். :)

    எனினும் குதிரை வேகத்திலும் குதிரை பார்வையிலும் செயல்பட்டு மேலும் மேலும் வெற்றிகள் அடைய என் இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. குதிரைக் கண் போல் மனம் அகலாது விரும்பி விரும்பிச் செய்திருந்தால் இந்நேரம் கவிதைத் தலைப்பில் 5000 த்தையே எட்டியிருப்பீர்கள். :)//

      ஐயாவின் வாக்கு பலிக்கட்டும்....மிக்க மகிழ்ச்சி

      எனினும் குதிரை வேகத்திலும் குதிரை பார்வையிலும் செயல்பட்டு மேலும் மேலும் வெற்றிகள் அடைய என் இனிய நல்வாழ்த்துகள்.//

      நன்றி ஐயா..

      Delete
  12. வாழ்த்துக்கள் சகோ
    .இன்னும் பல நல்ல கவிதைகள் எழுத வேண்டும்.
    குதிரைக் கண் – வித்தியாசமான தலைப்பு சகோ.அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்று தொடர்ந்து என்னை ஊக்கபடுத்தும் நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி.

      Delete
  13. அருமையான வரிகள் சகோதரி!

    ReplyDelete
  14. குறிக்கோளை
    குறி பார்க்க...
    குதிரைக் கண் போல்
    மனம் அகலாது

    உவமை நன்று! கருத்துமிகு கவிதை!

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் நல்ல நேர்மறை சிந்தனை கருத்துக் கொண்ட பாடல்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete