Wednesday 11 March 2015

நோக்கு பொருள்





வெட்டியாய்
விட்டத்தை நோக்குகையில்...
விரிந்தது ஒரு கவிதை
எதை நோக்குகிறாய்...என


எதை நோக்குகிறேன்...?
விட்டத்தையா...?
இல்லை
விட்டத்தின் வழியாய்...
எதையோ...வா...?

இல்லை இல்லை...
விழிகள் விட்டத்தை
நோக்கியிருக்க...
மனமே நோக்கிற்று...

நோக்கு பொருள்
நினைவில்லை...
ஆனாலும்
நோக்குகிறேன்...
அசையாமல்

சில நேரங்களில்
சிலசில நோக்குகள்
புலனாவதில்லை...
மனம் உடன் இருக்கவில்லை யாதலால்

நேத்திரத்தின்
நேர் பார்வை
மனம் மட்டும் ராட்டினமாய்...

கவிதை முடிந்து விட்டது
கலைந்தேன் சுய நினைவிற்கு...



29 comments:

  1. //சில நேரங்களில் சிலசில நோக்குகள் புலனாவதில்லை... மனம் உடன் இருக்கவில்லை யாதலால்//

    உண்மை தான். இதனை நானும் நிறைய தடவைகள் அனுபவித்து உணர்ந்துள்ளேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உடனே வந்து கருத்திட்டமைக்கு நன்றி ஐயா.

      Delete
  2. //நேத்திரத்தின் நேர் பார்வை ..... மனம் மட்டும் ராட்டினமாய்...//

    அழகான இயல்பான இந்த வரிகளில் நானும் சுற்றினேன் ராட்டினத்தில்.

    //கவிதை முடிந்து விட்டது .... கலைந்தேன் சுய நினைவிற்கு...//

    அருமையான முடிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அழகான இயல்பான இந்த வரிகளில் நானும் சுற்றினேன் ராட்டினத்தில்.//

      நீங்களும் அழகாய் சுற்றி வந்து விட்டீர்கள்....பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  3. "சிலசில நோக்குகள்
    புலனாவதில்லை...
    மனம் உடன் இருக்கவில்லை யாதலால்" என்பதில்
    உண்மையிருக்கு...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு நன்றி ஐயா.

      Delete
  4. வணக்கம்

    வரிகளை இரசித்து படித்தேன் அம்மா... பகிர்வுக்கு நன்றி த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததற்கும், தமிழ் மணம் வீசச் செய்தமைக்கும் நன்றி ரூபன்.

      Delete
  5. தத்துவம். அருமை.

    ReplyDelete
  6. மிகச் சிறிய வரிகள். ஆனால் மனதை உலுக்கிவிடும் சொற்றொடர்கள். மனது படும் பாடும், படுத்தும் பாடும் மிக அழகாக.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கும், தொடர்வருகைக்கும் நன்றி ஐயா

      Delete
  7. கவிதையும் தலைப்பும் அருமை சகோ.

    ReplyDelete
  8. சில வேளைகளில் அப்படித்தான்... புரியாத புதிர்...?

    ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ

      Delete
  9. //..கவிதை முடிந்து விட்டது!..//

    கவிதை எப்போது முடிந்தது!?..
    இப்போது தானே ஆரம்பமாகியிருக்கின்றது!..

    ReplyDelete
    Replies
    1. கவிதை எப்போது முடிந்தது!?..
      இப்போது தானே ஆரம்பமாகியிருக்கின்றது!..

      ;)))).........

      Delete
  10. Replies
    1. ஆஹா...சகோ...இதுவரை இல்லாத அளவில் தமிழ் மணத்தை வீசச் செய்தமைக்கு நன்றி...66..வாக்குகள் அளித்த அபுதாபி தம்பிக்கு...நன்றி

      தவறாய் 6 அப்படி ஆகிவிட்டது.....

      Delete
  11. எனக்கும் பள்ளிக்கூடத்தில் விட்டத்தை வெரித்ததுண்டு, விட்டம் ஆரம் ,,,,,,,,, ஆனால் உண்மை நாம் நோக்குவது நினைவில் இல்லாமல், வெற்றுப் பார்வை, அருமையான வரிகள் அழகான பொருள், அருமை,அருமை வாழ்த்துகள்,

    ReplyDelete
    Replies
    1. அனுபவமாய் ரசித்து...கருத்திட்டமைக்கு நன்றி

      Delete
  12. உங்கள் கவிதையை படித்து நானும் சுயநினைவிற்கு திரும்பிவிட்டேன் சகோ. அருமை. அருமை.

    ReplyDelete
    Replies
    1. அப்பப்பா...சுயநினைவிற்கு...திருப்பி விட்டீர்கள். நன்றி சகோ

      Delete
    2. சுய நினைவுக்கு திரும்பினீங்களா ? அப்படினா ? நீங்க அப்படியா ?

      Delete
  13. பொருள் பதிந்த வரிகளுக்கு பொருத்தமான படம் அருமை சகோ...
    தொடரட்டும் கவிதைகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்களுக்கும், ஊக்கப்படுத்துவதற்கும் நன்றி சகோ

      Delete
  14. நேத்திரத்தின்
    நேர் பார்வை
    மனம் மட்டும் ராட்டினமாய்...//

    ஆஹா!! ஆமாம் ஆமாம்!! பல சமயங்களில் அப்படித்தான். மனம் ஒரு குரங்கு அல்லவா!

    ReplyDelete
  15. பல சமயங்களில் அப்படித்தான். மனம் ஒரு குரங்கு அல்லவா!//

    ஆமாம் உண்மை தான் சகோ. மிக்கநன்றி

    ReplyDelete
  16. மனம் சில நேரங்களில் பிடிபடுவது இல்லைதான்.

    ReplyDelete