Friday 22 May 2015

அவியல்






தேவையான பொருட்கள்

வெங்காயம் -1 அல்லது சின்ன வெங்காயம் 8
எண்ணெய் - 1 தே.க
தயிர் - 2 அ 3 மே.க
உப்பு - ருசிக்கு
கேரட்
பீன்ஸ்
உருளைக்கிழங்கு
வாழைக்காய்
அவரைக்காய்
புடலங்காய்
எல்லா காய்களையும் சிறிது எடுத்துக் கொள்ளுங்கள்.

( சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கொத்தவரங்காய், முருங்கக்காய், வெள்ளை பூசணி, கத்தரிக்காய், சேனைக்கிழங்கு, விருப்பப்பட்டால் மாங்காய் துண்டுகள் என இருக்கும் காய்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டு இதை செய்யலாம்.)

அரைக்க தேவையானவை

தேங்காய் மூடி -  1/2 மூடி ( சிறிய தேங்காயின் 1/2 மூடியை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்)
சீரகம் - 1 தே.க
இஞ்சி - சிறிது
பச்சை மிளகாய் - 4

மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்


தாளிக்க வேண்டியவை

தேங்காய் எண்ணெய் - 1 மே.க
கடுகு - 1/2 தே.க
கருவேப்பிலை - சிறிது






எண்ணெய் விட்டு வெங்காயத்தை லேசாக வதக்கவும்







காய்கறிகளைப் போட்டு லேசா வதக்கி உப்பு + தண்ணீர் விட்டு வேக விடவும்.


காய்கறிகள் அதிகம் குழையாமல் வேக வேண்டும். மாங்காய் சேர்ப்பது என்றால் கடையாக போட்டு வேக வைக்கவும் அது உடனே வெந்து விடும்.



 அரைத்ததை ஊற்றி கொதிக்க விடவும். சேர்மானமாக வரவும் இறக்கவும்.


தாளிக்கவும். சற்று ஆறிய பின் தயிர் சேர்த்து கலக்கவும். சூடாக தயிர் கலக்க தயிர் திரிந்து விடும்.



                                                                      அவியல் அருமை....!!!

சாப்பாட்டிற்கு...அடைக்கு...சப்பாத்திக்கு....தொட்டுக்கொள்ளலாம்....!



குறிப்பு

தயிர் அதிகம் புளிக்காமல் இருந்தால் நல்லது.

காலையில் செய்து ஆபீஸ்க்கு கொடுக்க தயிர் புளிக்காமல் இருந்தால் தான் பரவாயில்லை. மதியம் அதன்  புளிப்பு தன்மை கூடும் அல்லவா..? அதற்குத்தான்.

வீட்டில் என்றால் சாப்பிடும் சமயம் கலந்து கொள்ளலாம்.

தயிரின் புளிப்புக்கு தக்க அளவை கூட்டிக் குறைத்துக்  கொள்ளுங்கள்.

மாங்காய் சேர்த்து செய்யும் போது தயிரின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். மாங்காயின் புளிப்பை பார்த்து சில  துண்டுகளை போடுங்கள்.

அரைத்த சேர்மானத்தில் காரம் குறைவாக இருந்தால் தாளிக்கும் போது வரமிளகாய்களைக் கிள்ளிப் போட்டு தாளித்து விடுங்கள்.




27 comments:

  1. படங்களே அருமையாக இருக்கு சகோ,
    காலையில் உடன் செய்கிறேன். நல்ல விளக்கம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...மகிழ்வாய் உடனடி முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி. நாளை செய்து அசத்துங்கள்.

      Delete
  2. அவியல் ஸூப்பர் இப்பத்தான் சாப்பிடப்போனேன் அதுக்குள்ளே மேலே ஒரு ஆள் முந்திருச்சே......
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. :))))))).......

      உங்களை விட இன்னைக்கு அவர்கள் வேகமாகிவிட்டார்கள்....போல சகோ....

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் தமிழ் மண வாக்கிற்கும் மகிழ்ச்சி . நன்றிகள்.

      Delete
  3. அட்டகாசம் ..வழக்கம் போல ....ஒரு நல்ல சமையல் (அவியல்) செய்து காட்டி விட்டீர்கள் ......சாப்பிடதான் முடியவில்லை இங்கிருந்து என்ன செய்வது ? வளர்க உங்கள் சமையல் கலை ...நாளை செய்து பார்க்கிறேன் ...என் வீட்டு எஜமானி இடம் கொடுத்தால் ...

    ReplyDelete
    Replies
    1. என் வீட்டு எஜமானி இடம் கொடுத்தால் ...//

      அருமையாக சகோதரியார் செய்து அசத்தி விடுவார்கள்.

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  4. அருமை. நாங்கள் இதில் வெங்காயம் சேர்க்காமல் செய்வோம்! என் பாஸ் இதில் ஸ்பெஷலிஸ்ட்டாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. என் பாஸ் இதில் ஸ்பெஷலிஸ்ட்டாக்கும்!//

      இருவரும் சமையலில் அசத்துவீர்கள் என எனக்கு தெரியும் சகோ:)))))....

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  5. குறிப்புகள் குறித்துக் கொண்டாயிற்று... நன்றி...

    ReplyDelete
  6. வழக்கம்போல அருமையாகவும் ருசியாகவும் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  7. நானும் அவியல் பதிவு போட்டிருக்கிறேன். இஞ்சி மட்டும் சேர்க்கவில்லை. உங்கள் முறையும் அருமை சகோ.

    ReplyDelete
  8. சுவை கூட்டும் கை வண்ணம்..
    மலையாள மணம் வீசுகின்றது..

    இஷ்டம்.. வளர இஷ்டம்!..

    ReplyDelete
  9. வணக்கம்
    குறிப்பு குறித்துகொண்டேன் செய்து பார்க்கிறோம்.
    செய்முறை விளக்கத்துடன் பதிவு அசத்தல் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  10. Replies
    1. வாக்கிற்கு நன்றி

      Delete

  11. அவியல் செயல்முறை விளக்கம் வெகு ஜோர்!
    படித்தேன்! லைக் தந்து பதிவை மனைவியிடம் ஷேர் செய்து விட்டேன்.
    மெனு ரெடியாகி வரட்டும் என்று காத்திருக்கின்றேன் சகோதரி!
    த ம + 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. ஆ...ஹா... சூப்பர்


      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  12. தங்களின் இந்த அவியல் அசத்தல். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  13. நல்லதொரு சமையல் - அதில்
    அவியல் என்றொரு படைப்பு
    எண்ணிப் பார்க்கையிலே
    நாவூறுதே!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  14. செய்து கொடு என்று இல்லாளிடம் சொல்ல ஆசைதான் ,நானே அவியலாகி விடுவேனோ :)

    ReplyDelete
    Replies
    1. நானே அவியலாகி விடுவேனோ :)//

      அப்புறம் யாரும் சாப்பிட முடியாதே.... உத்தமம் சகோவை செய்யச் சொல்லி அவர்கள் எப்போது செய்து தருகிறார்களோ அப்போது நலம்.))))).....

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்

      Delete
  15. அவியல் பதிவு மிஸ் ஆகிட்டுது. இம்முறையைதான் எங்க அம்மாவும் செய்வாங்க.நானும் இப்படியே செய்கிறேன். நீண்ட நாள் ஆயிற்ரு செய்து.ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி உமையாள்.

    ReplyDelete
  16. அடை அவியல் பொருத்தமான சுவை!

    ReplyDelete