Monday 4 May 2015

குடமிளகாய் பச்சடி





தேவையான பொருட்கள்

குடமிளகாய்
சிகப்பு - 1
மஞ்சள் -1

து.பருப்பு - 3 அ 4 மே.க
( மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேகவைத்துக் கொள்ளவும்)
வெங்காயம் - 1
தக்காளி - 1
ப.மிளகாய் - 2
சாம்பார் தூள் - 1 தே.க
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - ருசிக்கு
கொத்தமல்லி - சிறிது

தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 1 மே.க
கடுகு - 1/4 தே.க
க.பருப்பு - 1/2 தே.க
சீரகம் - 1/4 தே.க
வரமிளகாய் - 1 அ 2
கருவேப்பிலை - சிறிது



                                                 தாளிக்கவும்






ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.




வெங்காய,ம் சேர்த்து வதக்கவும்





தக்காளி சேர்த்து வதக்கவும்





குடமிளகாயை சேர்த்து வதக்கவும்




சாம்பார் தூள் + புளி + உப்பு சேர்த்து,



பருப்பு சேர்த்து வேக விட்டு இறக்கவும். மல்லி சேர்க்கவும்.


                                                                  குடமிளகாய் பச்சடி...!!! 

எந்த நிற குடமிளகாயையும் பயன் படுத்தலாம்.




19 comments:

  1. ஆஹா ! குடமிளகாயில் பச்சடி!!!!!

    குடை பிடித்து வரவேற்கிறோம் :)

    புதுமை, அருமை, இனிமை !!!

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. முதலில் வருகை தந்து கருத்துரைத்தற்கு நன்றி ஐயா.

      Delete
  2. ஆஹா படங்களே அழகாக மனக்கிறது தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. முதல் தமிழ் மணவாக்கிற்கும், கருத்திற்கும் நன்றி சகோ

      Delete
  3. படம் கவர்கிறது. சுவையான குறிப்புகள்.

    ReplyDelete
  4. நீங்கள் தரும் சமையல் குறிப்புகள் இப்போது எங்கள் சமையலிலும் புகுந்து கொண்டது. இப்போதுதான் ஒவ்வொன்றாக முயற்சித்து வருகிறோம்.

    த ம 3

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தரும் சமையல் குறிப்புகள் இப்போது எங்கள் சமையலிலும் புகுந்து கொண்டது//

      ஆஹா..சந்தோஷமாக இருக்கிறது

      இப்போதுதான் ஒவ்வொன்றாக முயற்சித்து வருகிறோம். //

      பின் வந்து சொல்லுங்கள் சகோ எப்படி இருந்தது என்று நன்றி

      Delete
  5. ஆஹா ஒரே கலர்புல்லா பார்க்க கண்ணை கவர்கிறது. வித்தியாசமான குறிப்பிற்கு நன்றி உமையாள்.

    ReplyDelete
    Replies
    1. கூடியவிரைவில் இதை செய்து விடுவீர்கள் என நினைக்கிறேன்...நன்றி பிரியசகி

      Delete
  6. வணக்கம்
    செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமையாக உள்ளது த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  7. சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
  8. வித்தியாசமான குடமிளகாய் பச்சடியை ருசித்தோம்.

    ReplyDelete
  9. கலர் கலராக... அருமை சகோதரி...

    ReplyDelete
  10. இந்த வகை குடமிளகாய்கள் இங்கே (குவைத்தில்) தாராளமாகக் கிடைக்கின்றன..
    வாரத்தில் இருமுறையேனும் - குடமிளகாயை தயிரில் சேர்த்துக் கொள்வது வழக்கம்..

    தங்களுடைய குறிப்பு அருமை.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. இந்த வகை குடமிளகாய்கள் இங்கே (குவைத்தில்) தாராளமாகக் கிடைக்கின்றன.//

      இந்தப்பக்கமும் நன்றாக கிடைக்கிறது ஐயா

      இதை முயற்சித்து பாருங்கள் ஐயா நன்றி

      Delete
  11. ஹை குடமிளகாய் பச்சடி.....கிட்டத்தட்ட சாம்பார் போல்தானோ?!!! இங்கும் இந்தியாவிலும் கிடைக்கின்றதுதான்....செய்து பார்த்துடுவோம்....ம்ம் பார்க்க சுவையைத் தூண்டுகின்றது....

    ReplyDelete