Wednesday 6 May 2015

மாங்காய் தொக்கு





தேவையான பொருட்கள்

மாங்காய் நடு அளவு - 1
தனி மிளகாய் தூள் - 3 அ 3 1/2  மே.க
வெந்தயத்தூள் - 1/2 தே,க
பெருங்காயம் - 1/4 தே.க
உப்பு - 1 1/2 தே.க
வெல்லம் - 1 தே.க


மாங்காயை தோல் சீவி விட்டு துறுவிக் கொள்ளவும்







தாளிக்க வேண்டியவை

எண்ணெய் - 8  மே.க
கடுகு - 1/2 தே.க


                                                   தாளிக்கவும்






துறுவிய மாங்காயை சேர்த்து வதக்கவும்




மாங்காய் வெந்தவுடன் மிளகாய்ப் பொடி + உப்பு + வெந்தயத்தூளை சேர்த்து கிளறவும்.




பெருங்காயத்தூளை சேர்த்து கிளறவும்.


பொடிகளின் பச்சைவாசம் போய் எண்ணெய் கக்கி வரவும் வெல்லம் சேர்த்து மேலும் வதக்க  எண்ணெய் முழுமையாய் கக்கி வந்து விடும்.


ஆறவும் சுத்தமான கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு பயன் படுத்தலாம்.


                                          மாங்காய் தொக்கு......பண்ணியாச்சு...!!!




14 comments:

  1. மிகவும் எளிதான செய்முறை..
    தஞ்சாவூர் பக்கம் எல்லாம் மா மரங்கள் அதிகம் அல்லவா..
    மா வடு, மாம்பிஞ்சு, மாங்காய் என - கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் செய்யப்படுவது மா வடு வற்றல் - உப்பு மாங்காய் - மாங்காய் தொக்கு - ஊறுகாய் - பச்சடி - வகையறாக்கள்..

    உப்பு மாங்காய் கடித்து பகிர்ந்து (!?) கொண்ட காலங்கள் எல்லாம் இனிமேல் வருமா?..
    பழைய நினைவுகளைத் தூண்டி விட்டது - பதிவு!..

    ReplyDelete
    Replies
    1. மிகவும் எளிதான செய்முறை.. //
      எல்லோரும் செய்துண்டு மகிழவேண்டும் ஐயா.

      ஆம் மாங்காய் சீசனில் மாவில் வைவகையாக செய்யவார்கள்.

      உப்பு மாங்காய் கடித்து பகிர்ந்து (!?) கொண்ட காலங்கள் எல்லாம் இனிமேல் வருமா?//

      உண்மைதான்...ஆனால் இப்போது சிறார்கள் அதை எல்லாம் மிஸ் பண்ணுகிறார்கள். காலம் சந்தோஷமான சிறுவயது பிராயத்தை மாற்றி விட்டது.

      பழைய நினைவுகளைத் தூண்டி விட்டது //

      தங்களின் பழைய நினைவுகள் என் பழைய நினைவுகளையும் நினைவு படுத்தியது ஐயா நன்றி.

      Delete
  2. வெற்றிலை பாக்கு= சுபம்
    மாங்காய் தொக்கு = சுவை/சுகம்
    தம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வெற்றிலை பாக்கு= சுபம்
      மாங்காய் தொக்கு = சுவை/சுகம்//

      ஆஹா சூப்பர் ....சூப்பர்... சகோ...

      நன்றி

      Delete
  3. எங்கள் ஃபேவரைட் ! என்ன, வெல்லம் சேர்க்க மாட்டோம். அவ்வளவுதான்.

    படம் கவர்கிறது.

    ReplyDelete
  4. எளிமையான செயல்முறை விளக்கம். அவசியம் செய்ய வேண்டும். நன்றி. நாவில் எச்சில் ஊறுகிறது.

    ReplyDelete
  5. படத்தில் காட்டியுள்ள மாங்காய்த்தொக்கு வெகு ஜோராக உள்ளது.

    என் நாக்கினில் இப்போதே நீர்!

    ஆஹா ! இன்று ஓர் புதுப்பதிவிட இதுவே உங்களுக்குத் ‘தொக்கு’ ஆகிவிட்டதோ ! :)

    சபாஷ். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. எங்கள் வீட்டில் தற்போது அடிக்கடி மாங்காய் தொக்கு. உங்கள் பதிவு மூலமாக மறுபடி ருசிக்க வாய்ப்பு கிடைத்தது.

    ReplyDelete
  7. வணக்கம்

    நிச்சயம் செய்து பார்க்கிறோம்... பகிர்வுக்கு நன்றி. த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. அட எனக்கு பிடித்த தொக்கு மாங்காய் ரெடி ஆகையால் செய்து பார்த்திட வேண்டியது தான் நன்றிம்மா வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  9. படமே சுண்டி இழுக்கிறது...!

    வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... நன்றி...

    ReplyDelete
  10. மாங்காய் ரெம்பபிடித்தமானது. தொக்கு வித்தியாசமாக இருக்கு. மாங்காய் கிடைத்தால் செய்கிறேன் உமையாள்..! நன்றி.

    ReplyDelete
  11. வணக்கம் சகோதரி.

    தாங்கள் பதிந்துள்ள புகைப்படங்களும், செய்முறை விளங்கங்களும், கண்ணையும், மனதினையும் கவர்ந்து இழுக்கின்றன சகோதரி!. இட்லி, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள பொருத்தமாய் ஜோடி சேரும் இந்த மாங்காய் தொக்கை பார்த்த போதே சுவை வேண்டி என் நாவு அந்த உணவை விரும்பி யாசிக்க ஆரம்பித்து விட்டது. அவசியம் செய்து விடுகிறேன் சகோதரி! விளக்கமாக பொறுமையுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  12. அதே ஸ்டைல்....போட்டுருக்கோம்ல....சீசனாச்சே...படங்கல் அருமை....

    ReplyDelete