Saturday 6 June 2015

புதினா துவையல் / Puthina Thuvaiyal

மல்லிப்பூ இட்லிக்கு...

வெட்கி திரும்பிய
சிவந்த தோசைக்கு...

எலுமிச்சை ரசத்துக்கு
ஏற்றது இது...

தயிர் அன்னத்துடன்
தளர உண்ணவென...
ஜோடிப் பொருத்தம் அபாரம்.

அடுத்து வரும் தோசைக்கு...? 
இதைத்தான் செய்தேன்...
தொட்டுக் கொள்ள

என்ன தோசை....? அது 
பொருத்திருங்கள்...அடுத்த பதிவிற்கு...!!!

முயற்சித்த அனைத்தையும் மொழிந்து விட்டேன்....!!!



புதினா உடலுக்கு எவ்வளவு நல்லதுன்னு உங்களுக்கே தெரியும்.






தேவையான பொருட்கள்

புதினா - 1 கை
வெங்காயம் - 1
தேங்காய் - 1 கை
வர மிளகாய் - 5 அ 6
உ.பருப்பு - 3 மே.க
புளி - சிறுநெல்லி அளவு
உப்பு - ருசிக்கு
நல்லெண்ணெய் - 1 .மே.க

தாளிக்க வேண்டியது

நல்லெண்ணெய் - 1 தே.க
கடுகு -1/4 தே.க
பெருங்காயம் - சிறிது




1/2 மே.க எண்ணெய் விட்டு மிளகாய் + உ.பருப்பு சேர்த்து சிவக்க வறுத்து விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.



1/2 மே.க எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்





புதினா + புளி + தேங்காய் சேர்த்து  சிறிது வதக்கவும்.



எல்லாவற்றையும் + உப்பு சேர்த்து ஆற விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.


                                                                   புதினா துவையல்...!!!


25 comments:

  1. படத்திலேயே துவையல் மிக அருமை. நாக்கில் நீர் ஊறுகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. புதினா துவையலுக்கான கவிதையும் செய்முறையும் அருமை சகோ.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  3. அனைவருக்கும் ஏற்ற நல்ல துவையல். நாங்கள் அடிக்கடி பயன்படுத்துகிறோம்.

    ReplyDelete
  4. புதினா மணம்போலவே கவிதை மணமும் கொஞ்சம் தூக்கல்தான் :)

    ReplyDelete
    Replies
    1. :)))))).......

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  5. எனக்கு மிகவும் பிடித்தது புதினா துவையல். பகிர்வுக்கு நன்றி!
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  6. அருமையான புதினா துவையலை விரைவில் செய்து பார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் அம்மா...
      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  7. தித்திக்கும் சுவையான குறிப்பிற்கு நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  8. விருப்பமானவற்றுள் - புதினா துவையலும் ஒன்று!..

    பதிவு கண்டு மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  9. நல்லாத்தான் இருக்கும்...,கிடைச்சா!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  10. புதினாவை புடிக்காதவர் உண்டோ கிடைக்காத காரணத்தால்... தமிழ் மணம் 6 மனமே 6

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  11. சென்ற பதிவின் கவிதை இனிப்பிற்குப் புதினாத் துவையலைத் தொட்டுக் கொண்டேன்.

    தமிழ் மணம் பரவட்டும்.!

    த ம 7

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  12. நான் விரும்பி ச் சாப்பிடும் ஒன்று!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  13. வணக்கம் சகோதரி.

    புதினாவுடன் இணையும் உணவுகளை அழகான கவிதையாய் மொழிந்து விட்டீர்கள். கவிதையும் அதைச்சார்ந்த துவையலின் செய்முறையும் அழகுடன்,அருமை.
    அடுத்த தோசைப் பதிவை காண ஆவலாய் உள்ளேன்.
    எனது தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  14. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

    ReplyDelete
  15. மிகவும் பிடித்த ஒன்று . வெங்காயம் சேர்க்காமல் செய்வதுண்டு. இப்படியிம் செய்து பார்த்துவிட்டால் போச்சு. வெங்காயம் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.....குறுத்துக் கொண்டோம்....

    ReplyDelete