Wednesday 10 June 2015

துயில்...! / கவிதை

                                                                 படம் கூகுள் நன்றி


நிதானமான
குளிர் கால விடியலில்...
விழிப்பு நிதானமாய்...

சுறுசுறுப்பான
கோடை கால விடியலில்
விழிப்பு சுறுசுறுப்பாய்...

போர்வை விலக்க மனம் வரவில்லை
போர்வை போர்த்த முடியவில்லை

இமைகள் கூடியது
பிரிய மனமில்லை எப்போதும்....
இன்னும் கொஞ்சம் எனும் முனங்களில்....
லாவகமாய் திரும்பி படுக்க...

சுகம் சுகம்...
துயில் அணைத்துக் கொள்ள
அணைக்கா விட்டால்...
சோகம் சோகம் தான் மனதிற்கு
கோபம் கோபமாய் வரும் அப்போது

இரவில் துயில் அழகு
பகலில் துயில் அழகின்மை
துயிலாவிடில் ஆரோக்கியமின்மை

துயில் வேண்டி துடிக்கும் மனமே
துடிதுடி நிதானமாய்
துண்டித்து விடு எண்ணங்களை
பள்ளியறை செல்லுமுன்
பார்த்தன் போல் நீயும் பள்ளிகொள்ளலாம்.








23 comments:

  1. கவிதையைப் படித்ததும் - எனக்கும் தூக்கம் வருகின்றது!..
    (இரவு வேலை இப்போது தான் முடிந்து வந்தேன்..)

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  2. வணக்கம் சகோதரி.

    அழகாக துயிலின் சிறப்பைக் ௬றும் கவிதை.

    \\இரவில் துயில் அழகு
    பகலில் துயில் அழகின்மை
    துயிலாவிடில் ஆரோக்கியமின்மை//

    உண்மையான வார்த்தைதான் சகோ. ஒரு நாள் இரவு துயிலைத் தொலைத்தாலும் தொடர்ந்து சில நாட்கள் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கிறது. அருமை. வாழ்த்துக்கள்/

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  3. அழகான கவிதை சகோ வாழ்த்துகள்....
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  4. தூக்கம் வராதபோதுதான் தெரியும் அதன் அருமை!
    கவிதை அருமை!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  5. Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  6. துயிலின் அருமை
    (அதை எளிதாக அடைந்தவர்களை விட
    அடையாதவர்களுக்கே அதிகம் புரியும் )
    அனுபவித்து எழுதியதை அனுபவித்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மழலையின் துகில் ,மனதை மயக்கும் எழில் :)

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  8. Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  9. பகலில் பள்ளிக்கொண்ட பெருமாள் போல படுத்துக்கொண்டே இதைப்படித்ததும் ஒரு நிமிடம் திடுக்கிட்டு எழுந்தேன் ........ மீண்டும் படுக்க. :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  10. சுகம்...இதம்...அகம்....

    ReplyDelete
  11. மிகவும் இரசித்தேன். பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

    ReplyDelete