Wednesday 29 July 2015

வார்லி ஓவியம் / Warli paintimgs




ஒரு நாள் சினேகிதியுடன் தொலைபேசியில்  பேசிக் கொண்டு இருக்கும் போது ஏதாவது புதிய ஓவியம் வரைந்தீர்களான்னு....? கேட்டார்கள். 

இல்லைன்னு சென்னேன்.


வார்லி ஓவியம் முயற்சி பண்ணுங்களேன்...ன்னு சொன்னார்.....சரி அதை ரெம்ப நாட்களாக வரைந்து பார்க்கணும்ன்னு நினைத்து இருந்தேன்...... ஆனால் முயலவில்லை..... 

சரி...சொன்ன பின்னாடி சும்மா இருக்க முடியுமா...? கைகள் தன்னால் ஓவியம் வரைய துடித்தன....

சரி....சரி.... வேண்டிய சாமான்கள் வாங்கவும் பொறுக்கவில்லை...  மனம்.
இந்த மனதை என்ன சொல்வது.....விட்டா ஒரேயடியாக சோம்பலாக இருக்க வேண்டியது...இல்லை என்றால் உடனே என ஆவலாக பறக்க வேண்டியது....சரி நம்மளாலையும் பொழுதை தள்ள முடியலையேன்னு....களத்தில் குதித்து விட்டேன்...ஆர்வத்துடன் தான்
..

வீட்டில் இருந்த ஏ 4 தாளை எடுத்துக் கொண்டு கருப்பு மார்க்கர் பேனாவையும் எடுத்துக் கொண்டேன். பென்சில் ரப்பரையும் எடுத்து வைத்து அமர்ந்து விட்டேன். 

வாட்ஸ் ஆப்பில்  இந்த மாதிரி ஓவியத்தை அனுப்பி வைத்திருந்தார் சினேகிதி.

மாதிரிக் கோடுகள் போட்டு படத்தை பென்சிலால் வரைந்து கொண்டேன்.

சரிசரி...ஒரு கோப்பை தேநீர் அருந்தலாம் என்று தயாரித்து வந்து அமர்ந்தேன்.

சூடான தேநீர் அருமையாக இருக்க அனுபவித்து நிதானமாக அருந்தினேன்.

இப்போ உடல் வண்டிக்கு பொட்ரோல் போட்டாச்சு...இல்ல...... சரின்னு அது ஸ்டார்ட்டு ஆகிடுச்சு....

மார்க்கர் கொண்டு....படத்தை நிரப்ப....அழகான என் முதல் வார்லி ஓவியம் பூத்து விட்டது...... 



இரண்டாவது படத்தின் மாதிரியை கூகுளில் தேடி ...., பிடித்த ஒன்றை தேர்வு செய்தேன்.

கையால் தயாரிக்கப் பட்ட தாள் .(ஹாண்ட் மேடு பேப்பர்) எல்லாமே கையால் தானே தயாரிப்பார்கள். மிசின் தயாரித்தாலும் கைகள் இல்லாமல் எப்படிம்மா...? என பல சிந்தனைகள், கேள்விகள் வந்தால் எனக்கு பதில் தெரியாது...ஹிஹிஹி..... அப்பாடியோ...தப்பியாச்சு...

தாள் மற்றும் கருப்பு ஜெல் பென் .....இவை இரண்டையும் வாங்கிக் கொண்டு வந்தேன்.

அப்புறம் என்ன....இரண்டாவது படத்தை வரைந்தேன். 3 ,4 நாட்கள் ஆனது. வீட்டு வேலைகளுக்கு இடையில்.....மிக நிதானமாக, திருத்தமாக செய்யவும்...ஊன்று பார்ப்பதால் கண்களுக்கு சற்று ஓய்வு கொடுத்து வரையவும் காலம்  ஆகுமல்லவா....? 





                                               என்ன ரசித்தீர்களா....சகோக்களே...?







21 comments:

  1. ஓரிரு வொர்லி ஓவியங்களைத் தையலில் செய்திருக்கிறேன் . ஏனோ பின்னர் மனம் ஈடுபடவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஓரிரு வொர்லி ஓவியங்களைத் தையலில் செய்திருக்கிறேன்..//

      ஆஹா.....அருமை. ஐயா தாங்களும் பொறுமையாக செய்து இருக்கிறீர்கள்

      நன்றி

      Delete
  2. எப்படிங்க இப்படி துல்லியம்...!? வாழ்த்துகள்... ஆர்வம் + பொறுமைக்கு பாராட்டுகள்...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்களுக்கு ....மிக்க நன்றி சகோ

      Delete
  3. வர்லி பெயிண்டின் என்பது மஹாராஷ்டிரா குஜராத் பார்டர்களில் வசிக்கும் ஆதிவாசிகளின் கைவண்ணம். அவர்கள் அவர்களது வீடு மண்சுவர்களால் ஆனதால் அதில் அரிசி மாவு வைத்து பெயின்ட் செய்வார்கள் குறிப்பாக அவர்களது சமூகத்தைப் பற்றி இருக்கும்...பெரும்பாலும் வெள்ளையாகத்தான் இருக்கும்...இல்லை செங்கல் கலரில்...

    நானும் எனது புடவையில் 8 வருடங்களுக்கு முன் வரைந்து இருக்கிறேன்....புடவை என்பதால் வெளியில் கறுப்பு கோடுகளும் உள்ளே வெள்ளை நிறத்திலும் ஃபில் செய்து வரைந்திருந்தேன்....மிக எளிதுதான்...மதுபானியும் வரைந்திருக்கின்ரேன். ஆனால் மதுபானி கொஞ்சம் இன்ட்ரிக்கேட் டிசைன் எல்லாம் னேரம் எடுக்கும்....மிக்க நன்றி
    ----கீதா...

    ReplyDelete
    Replies
    1. புடவையில் செய்ய நிறைய பொறுமை வேண்டும் நிதானமாக செய்து இருக்கிறீர்கள். நான் புடவையில் ஃபேபரிக் பெயிண்டால் செய்து இருக்கிறேன். அனைத்து துறைகளிலும் தாங்கள் சிறந்து விளங்குகிறீர்கள் சகோ. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.நன்றி

      Delete
    2. தங்களது டிசைன்களை மிகவும் ரசித்தேன். அன்று இதை எழுதி போடும் போது கூகுள் போட மறுத்துவிட்டது...ஏனோ தெரியவில்லை...டிசைனையும் நோட் பண்ணிக் கொண்டேன் சகோதரி! நானும் ஃபேப்ரிக் பெயின்ட் கொண்டுதான் புடவையில் செய்தேன்....
      நீங்கள் மட்டும் என்னவாம் எல்லாவற்றிலும் கலக்குகின்றீர்கள்!!!! கவிதை உட்பட...!!! நான் நீங்கள் சொல்லும் அளவு அப்படி இல்லை சகோதரி....

      Delete
  4. அழகு தான்.. மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கின்றீர்கள்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  5. ரசித்தேன். ஆனால் இதெல்லாம் ரொம்பக் கஷ்டமுங்க....!

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி சகோ. ஆமாம் கஷ்டப்பட்டால் தான் அழகாய் வரும்....:)))...
      நன்றி

      Delete
  6. ஆஹா அருமை.
    வார்லி பெயிண்டிங் இப்போதுதான் அறிகிறேன். கொஞ்சம் விளக்கி இருந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ....
      கீதா சகோதரியார் கருத்தில் விளக்கி இருக்கிறார்கள். ஆகையால் சகோ அதை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி சகோ

      Delete
  7. அன்புச் சகோதரி!

    ஓவியம் காட்டி உளத்தோடு ஒன்றினாய்!
    காவியமும் தீட்டு கலந்து!

    அட..! திறந்த கண்களை மூட முடியவில்லை! அற்புதம்! அற்புதம்!
    சந்தேகமே இல்லை! சகலகலாவல்லிதான் நீங்கள்!

    வாழ்த்துக்கள்!
    தொடருங்கள்!...

    ReplyDelete
    Replies
    1. சகோ அழகாய் பா புனைந்து கருத்து இட்டு என்னை மகிழ்வித்து விட்டீர்கள்.
      மிக்க நன்றி சகோ

      Delete
  8. அப்புறம் என்ன கவிஞரே சொல்லிட்டாங்க சகலகலா வல்லியின்னு நானும் அதையே வழிமொழிகிறேன். சூப்பர் மா ...! என்ன என் பக்கம் காணவே இல்லை ....ம்..ம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ. என் பார்வை பக்கம்(டாஸ்போர்டில்) தங்கள் பதிவு வரவில்லை. ஆகையால் தான்...வந்து பார்த்து கருத்திட்டு வந்து விட்டேன் சகோ.

      Delete
  9. உமையாள்,

    ஒரு கருப்பு பேனாவை எடுத்துக்கொண்டு இவ்வளவு அழகா & தெளிவா படம் வரைய முடியுமா !! ஆச்சரியமா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சித்ரா முடியும்....மிக பொறுமையாக செய்ய வேண்டும். நன்றி.

      Delete