Monday 25 January 2016

சமையல் குறிப்புகள்



என்னுடைய அனுபவ டிப்ஸ்கள் உங்களுக்கும் பயன்படும் என நினைக்கிறேன்.



1. நேரம் இருக்கும் போது தேங்காயை  வாங்கி உடைத்து  பாதி அளவு தேங்காயை கீறியும், பாதியை துருவியும்  ரப்பர் டப்பா அல்லது ஜிப்லாக் பை - இவற்றில் போட்டு ஃப்ரீஸரில் வைத்துக் கொள்ளலாம். பொரியலுக்கு துருவலும், அரைக்க கீறலும் சட்னு சமைக்க எளிதாக இருக்கும்




2. பச்சை பட்டாணி சீஸன் போது வாங்கி உரித்து ரப்பர் டப்பா அல்லது ஜிப்லாக் பை - இவற்றில் போட்டு ஃப்ரீஸரில் வைத்துக் கொள்ளலாம். வருடம் முழுவதும் நன்றாக இருக்கும். வேண்டிய போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. உசிலி செய்ய காலையில் பருப்பை ஊறப்போட்டு உறிடுச்சா இன்னும் இல்லையே என கவலை படாமல் முதல் நாள் இரவில் வேண்டிய பருப்பை எடுத்து தண்ணீர் ஊற்றி மூடி ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து விட்டால் காலையில் செய்ய எளிதாக இருக்கும்.




4.பழைய புளி விரைவில்  ஊறிவிடும். ஆனால் புது புளிநேரம்  எடுக்கும். வெந்நீர் ஊற்றி வைக்கலாம். இல்லையெனில்  முதல் நாள் இரவே அடுத்த நாள் என்ன சமையலோ அதற்கு எடுத்து ஊறப்போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்து விட எளிது.


.


5.அரிசி உப்புமாவுக்கு உடைத்து வைத்துக் கொண்டால் அவ்வப்போது சட்டுன்னு செய்ய வசதியாக இருக்கும். சிலர் மிசினில் உடைப்பார்கள், அவர்களுக்கு கவலையில்லை. ஏன்னா அவர்கள் நிறைய உடைத்துக் கொண்டு வந்து விடுவார்கள்.  சிலர் அவ்வப்போது மிக்ஸியில் உடைத்துக் கொள்வார்கள். அவர்கள் மிக்ஸியில் இப்படி நிறைய உடைத்து வைத்துக் கொண்டால் அலுப்பாக இருக்கும் போது டக்குன்னு உப்புமா செய்து இட்லி பொடி வைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.


தொடரும்...

27 comments:

  1. ஆஹா ஆன்ட்டி.. சேம் பின்ச்...நானும் தேங்காயை எப்பொழும் துருவி பிரிசரில் வைத்திடுவேன். அதுதான் ரொம்ப ஈசி..பருப்பு, கொண்டக்கடலை, பட்டாணியையும் நினைத்தநேரம் எடுத்து தண்ணீர் ஊற்றி பிரிட்ஜில் வைத்திடுவேன்.. இன்னும் நிறைய டிப்ஸ் சொல்லுங்க.. எதிர்பாக்கிறோம்..

    ReplyDelete
    Replies
    1. நானும் தேங்காயை எப்பொழும் துருவி பிரிசரில் வைத்திடுவேன். அதுதான் ரொம்ப ஈசி..//

      ஆமாம் அதான் ஈசி...

      பருப்பு, கொண்டக்கடலை, பட்டாணியையும் நினைத்தநேரம் எடுத்து தண்ணீர் ஊற்றி பிரிட்ஜில் வைத்திடுவேன்.//

      ஆமாம் இது பல வழியில உபயோகப்படும். பொரியல், குழம்புக்கு ஈசி... சில நேரங்களில் இப்படி செய்து வைப்பேன். அடுத்த நாள் மெனு மாறிடுச்சுன்னா தண்ணிய வடிகட்டி விட்டு ஃப்ரீஸரில் போட்டு வைக்க மற்ற நாட்களில் உபயோகப்படுத்திக்க வசதி.

      நாம் அன்றாடம் செய்யும் போது நமக்கு நிறைய விடயங்கள் கிடைக்கிறது அல்லவா...நமக்குள் பகிர்ந்து கொள்வோம்.

      முதலில் வந்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிம்மா...

      Delete
  2. மிகவும் பயனுள்ள சமையல் டிப்ஸ். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு, கருத்திற்கும் நன்றி ஐயா

      Delete
  3. உபயோகமான சமையலறை குறிப்புகள்.
    த ம 1

    ReplyDelete
  4. நல்ல விளக்கம் சகோ இவையெல்லாம் எனக்கு விரும்பி சாப்பிட மட்டுமே தெரியும்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. எனக்கு விரும்பி சாப்பிட மட்டுமே தெரியும்//

      அதுவும் ஒரு கலை தானே சகோ

      Delete
  5. பயனுள்ள குறிப்புகள்...... நன்றி.

    ReplyDelete
  6. சப்புமா ,சாரி ,எனக்கு உப்புமாவே பிடிக்காது :)

    ReplyDelete
    Replies
    1. அடடே....அம்மாவுக்கு உப்புமா உடைக்கிற வேலையில்லை:)

      Delete
  7. பச்சைப் பட்டாணி டிப்ஸ் புதுசு. அவ்வளவு நாள் கெடாமல் இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா உங்களுக்கு ஒன்னு தெரியாததை செல்லிட்டேனே:))))..

      கெடாமல் இருக்கும்.ஃப்ரீஸரில் வைக்கவேண்டும். நாங்கள் அவ்வாறு தான் பல ஆண்டுகளாக உபயோகப்படுத்தி வருகிறோம்.

      Delete
  8. அருமை... அருமை... அனைத்தும்...

    ReplyDelete
  9. அனைத்து டிப்ஸ்களும் அருமை சகோ.

    ReplyDelete
  10. வணக்கம்

    அற்புதமான பகிர்வுக்கு நன்றி த.ம6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. இதே இதே செய்வதுண்டு உமையாள்...சுடு தண்ணீரில் புளி, பருப்பு ஊற வைத்தலும் பயனளிக்கும்...பகிர்வுக்கு மிக்க நன்றி உமையாள்...

    கீதா

    ReplyDelete
  12. பயனுள்ள தகவல்கள்.. வாழ்க நலம்..

    ReplyDelete
  13. தங்கள் சமையல் டிப்ஸ் சிறந்த வழிகாட்டல்

    இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்!

    மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றி அறிந்திட......
    http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html

    ReplyDelete
  14. பயனுள்ள குறிப்புக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  15. பயனுள்ள குறிப்புகள்.
    நானும் இப்படி செய்வதுண்டு. நன்றி

    ReplyDelete