Saturday 6 February 2016

கம்பு தயிர் சாதம்





தேவையான பொருட்கள்

கம்பு - 1/4 கோப்பை
சின்ன வெங்காயம் - 5 அ  ( பெ. வெங்காயம் - சிறிது )
ப.மிளகாய் - 1 
தயிர் - தே.அ
உப்பு - தே. அ

தாளிக்க வேண்டியவை

எண்ணெய் - 1/2 தே.க

கடுகு - 1/4 தே.க
மிளகாய் - 1
காயம் - சிறிது
கருவேற்ப்பிலை - சிறிது






கம்பை கழுவி விட்டு 15 அ 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்
(நேரம் கூட ஊறினால் பரவாயில்லை)








தண்ணீரை வடித்து வைத்துக் கொண்டு, மிக்ஸியில் கொரகொரப்பாக உடைத்துக் கொள்ளவும்.


1 1/4 - 1 1/2  டம்ளர் தண்ணீர் சேர்த்து + ப.மிளகாய் + வெங்காயம் சேர்த்து மைக்ரோவேயில் 6 நிமிடங்கள் வைக்கவும். நடு நடுவே கிளறிவிடவும்.
வாணலியில் கொதிக்கவிட 10 நிமிடங்களில் வெந்து விடும்.






இதோ....வெந்து விட்டது. சூடு ஆறிய பின்






தயிர் + உப்பு சேர்த்து கலக்கவும்.


தாளிக்கவும்.







                                         அப்புறம் என்ன சாப்பிட வேண்டியது தான்.....

 ஆனா..சும்மா சொல்லக் கூடாது .......கம்பு தயிர் சாதம் ....அசத்தலாக இருக்கும்.

இதை ஒரு தடவை.....சாப்பிட்டால்....அப்புறம் எத்தனை தடவை செய்து  புசிப்பீர்கள் என சொல்ல முடியாது...... அவ்வளவு அருமையாக இருக்கும்.
செய்வதும் சுலபம்...சாப்பிடுவதும்...எப்போதுமே அடுத்தவர்கள் செய்து கொடுத்தால்......சுலபம் தானே....?



20 comments:

  1. கம்பு கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். இதுவரை வாங்கியதேயில்லை. செய்முறை சுலபமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. கம்பு நன்றாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது சகோ

      Delete
    2. கம்பு, வரகு, தினை, சாமை, சின்னச் சோளம் எல்லாமே கிடைக்கிறது ஸ்ரீராம்.

      Delete
  2. இதுவரை கேள்விப்பட்டதில்லை. தங்கள் பதிவின்மூலம் ரசித்தேன், ருசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இனிமே உங்க வீட்டிலேயும் செய்வார்கள் என நினைக்கிறேன்...நன்றி

      Delete
  3. ஹை!!கம்பு மைக்ரோவேவில் ஈசியா வெந்திடுமா? செய்திட்டு உங்களுக்கு போட்டோ அனுப்புறேன் ஆன்ட்டி..

    ReplyDelete
    Replies
    1. ஆமா.... வெந்துடுது,,,சுலபமாக இருக்கு...கட்டாயம் அனுப்பு அபி,,,நன்றி

      Delete
    2. கம்பை ஊறாமலும், உடைக்காமலும் வேக வைத்தால் சரியாக வேகாது. நேரம் எடுக்கும். தண்ணீரும் நிறைய வைக்க வேண்டும்.

      ஊறிய பின் உடைத்து செய்தால் தான் சீக்கிரமாகவேகிறது.

      Delete
  4. கம்பு தயிர் சாதம் பிரமாதமா இருக்கு சகோ. நானும் உங்கள் செய்முறை குறிப்பின் படி கண்டிப்பாக செய்கிறேன்.

    ReplyDelete
  5. எப்போதுமே அடுத்தவர்கள் செய்து கொடுத்தால்......சுலபம் தானே....? இந்த வரிகள் என்னைச்சொல்வது போல் இருந்தது பகிர்வுக்கு நன்றி
    தமிழ் மணம் ௨

    ReplyDelete
  6. கம்பு சோறு - சாப்பிட்டு நாற்பது ஆண்டுகளாகின்றன..

    இதே பக்குவத்தில் கேழ்வரகிலும் செய்யலாம்..

    சத்து மிகுந்த கம்பஞ்சோறு குறித்த நல்ல பதிவு.. வாழ்க நலம்..

    ReplyDelete
  7. ஆஹா அருமையான பக்குவம், இப்ப செய்ய என் அம்மாவிடம் கேட்டேன்,என் அம்மா அதனை ஒரு மாயாஜாலம் போல் செய்வார்கள் எனக்கு மயக்கமே வந்துடும் போல் இருக்கும்,,, இந்த முறை எளிய முறையாக இருக்கு,, முயற்சிக்கிறேன். நன்றி

    ReplyDelete
  8. அப்புறம் என்ன சாப்பிட வேண்டியது தான்.....

    ஆனா..சும்மா சொல்லக் கூடாது .......கம்பு தயிர் சாதம் ....அசத்தலாக இருக்கும்.

    இதை ஒரு தடவை.....சாப்பிட்டால்....அப்புறம் எத்தனை தடவை செய்து புசிப்பீர்கள் என சொல்ல முடியாது...... அவ்வளவு அருமையாக இருக்கும்.

    செய்வதும் சுலபம்... சாப்பிடுவதும்... எப்போதுமே அடுத்தவர்கள் செய்து கொடுத்தால்...... சுலபம் தானே....?//

    தாங்கள் சொல்லும் ருசியான கம்பு தயிர் சாதம் இதுவரை செய்ததோ சாப்பிட்டதோ இல்லை.

    இருப்பினும் அதைவிட சுவையாக உள்ளவை .... மேலேயுள்ள தங்களின் கடைசி 5-6 வார்த்தைகள்.

    தாங்கள் செய்துதர நாங்கள் எங்கே எப்போது சாப்பிடுவது? எதற்கும் ஒரு கொடுப்பிணை வேண்டாமா? :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. இதுவரை அறியாத ரெஸிபி
    மாமியிடம் படித்துக் காட்டியுள்ளேன்
    நன்றக்க அமையும் என நினைக்கிறேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. சிறுவயதில் கம்பு அடை ருசித்திருக்கிறேன்.....

    செய்து பார்க்க வேண்டும் போல!

    ReplyDelete
  11. வணக்கம்

    பார்த்தவுடன் பசி வந்து விட்டது.செய்து பார்க்கிறோம்.பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. உமையாள், கம்பு இல்லை எந்தத் தயிர்சாதம் செய்தாலும் தண்ணீர் கொஞ்சமாகவும், மீதம் பால் விட்டும் வேக வைத்தால் இன்னும் சுவை கூடும் செய்து பாருங்கள்..மற்றதெல்லாம் சேம்தான்...

    அருமையான பகிர்வு...

    ReplyDelete
  13. உமையாள், கம்பு இல்லை எந்தத் தயிர்சாதம் செய்தாலும் தண்ணீர் கொஞ்சமாகவும், மீதம் பால் விட்டும் வேக வைத்தால் இன்னும் சுவை கூடும் செய்து பாருங்கள்..மற்றதெல்லாம் சேம்தான்...

    கீதா

    அருமையான பகிர்வு...

    ReplyDelete
  14. வணக்கம் !

    சத்தாய் உணவைச் சமைக்கும் முறைதனில்
    எத்தாய் மனமும் இனிதே இனிதே !

    மிகவும் அருமை கண்டு ரசித்தும் உண்ணாமல் களித்தோம் !

    ReplyDelete
  15. கம்பில் பல விதமாக சமைத்துக்கொண்டிருக்கிறேன். இது புது விதமாக இருக்கிறது. அவசியம் செய்து பார்க்கிறேன்! மிக அருமையான குறிப்பு தந்துள்ளதற்கு அன்பு நன்றி உமையாள் காயத்ரி!

    ReplyDelete