Tuesday 5 April 2016

நுங்கு பாயாசம்

ஊருக்கு போயிட்டு வரும் போது இளநுங்கு விற்றுக் கொண்டு இருந்தார்கள். அப்படியே கொஞ்சம் வாங்கிக் கொண்டு வந்தோம்.

அதான் இப்போ பாயாசமாக மாறிப் போச்சு....ஹிஹிஹி.....

தேவையான பொருட்கள்

பால் - 1 1/2 டம்ளர்
சீனி - 2- 4 தே.க
நுங்கு - 3 -5
ஏலக்காய் தூள் - 1 பின்ச்

பாலைக் காய்ச்சி ஆறவைத்துக் கொள்ளவும்.

பின் சீனி, ஏலம் சேர்த்து கலக்கிக் கொள்ளூங்கள்

நுங்கை சிறுதுண்டுகளாக ஆக்கிக் கொண்டு பாலுடன் சேர்க்கவும்.

ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று
சாப்பிடுங்கள்.

                அடிக்கிற வெயிலுக்கு அருமையான நுங்கு பாயாசம் ரெடி.

13 comments:

  1. நானும் இந்த பதிவு போடலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள் நீங்க போட்டு அசத்திடீங்க சகோ. இங்கும் நுங்கு நிறைய கிடைக்கிறது.

    ReplyDelete
  2. ஜில் ஜில் பாயஸம் .... நுங்கு பாயஸம் .... ஆஹா, கேட்கவே / பார்க்கவே மிகவும் அருமையாகவும் புதுமையாகவும் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. நுங்கு பாயசம் கண்டு மகிழ்ச்சி..

    அப்போதெல்லாம் குளிர் சாதனப் பெட்டி கிடையாது..
    சுண்டக் காய்ச்சிய பாலில் நுங்கைச் சேர்த்து சற்றே ஆற வைத்து சாப்பிடுவோம்..

    ஜீனி (White sugar) சேர்க்காத இனிப்புகளே உடலுக்கு நன்மையளிப்பவை..

    நம்ம ஊர் கருப்பட்டி, பனங்கற்கண்டு, அச்சு வெல்லம், சர்க்கரை இவற்றுக்கு ஈடாகுமா - சீனி..

    ஆனாலும் மக்கள் சீனிக்கு (வியாதிக்கு ) அடிமையாகிப் போனார்கள்..
    அனைவரையும் நோயாளியாக்கிய பெருமை சீனிக்கே உரியது..

    இன்னும் நிறையவே சொல்லலாம்..

    ReplyDelete
  4. மிக எளிமையாக இருக்கே ! அருமையான நுங்கு பாயாசம்.

    ReplyDelete
  5. பாயசம் சூப்பர் ஒரு கப் பார்சல்

    வாழ்த்துக்கள்,, செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நுங்கு தான் - தாராளமாகக் தஞ்சாவூரில் கிடைக்கின்றதே!..

      இருந்தாலும், அவர்களுடைய கைப்பக்குவம் தனி சுவை தான்!..

      Delete
  6. எளிமையான செய்முறை இங்கு இனிதான் நுங்கு வரவேண்டும்

    ReplyDelete
  7. நல்ல காம்பினேஷன்,ஆக்கவே வேண்டாம் பார்க்கும்போதே ருசி புரிகிறது :)

    ReplyDelete
  8. சேம் சேம் போன வாரம் மகன் கொண்டு வந்தான் என்று ஜில்லென்று வேண்டும் என்றான் என்றதும் செய்து கொடுத்தேன். இளநீர் பாயாசம் நீங்கள் செய்வீர்கள் இல்லையா அப்படியும் இதைச் செய்யலாம்.

    பாலை வற்றக் காய்ச்சி அதில் வெல்லம் இல்லை என்றால் நாட்டுச் சர்க்கரை இல்லை டெமரரா சர்க்கரை சேர்த்தும் இதைப் போட்டும் சாப்பிடலாம் நன்றாக இருக்கும். இனிப்பு எதுவுமே சேர்க்காமல் வற்றக் காய்ச்சிய பாலில் சேர்த்து சாப்பிடலாம். இன்னொன்று எளிதாகப் பாலை கெட்டியாகக் காய்ச்ச வேண்டும் என்றால் குக்கரில் டைரக்டாக விட்டு சிம்மில் வைத்து வெயிட் போட்டு வைத்து விட்டால் மெதுவாக ஒரு 1/2 மணி நேரம் வைத்தால் போதும் பால் சற்று ரோஸ் கலரில் வந்துவிடும். சுவையும் அபாரமாக இருக்கும்....இளநீர் வழுவல் இருக்கு இல்லையா அதையும் இப்படிச் செய்யலாம்..நீங்கள் செய்திருப்பீர்கள்...கேட்கவா வேண்டும்...நீங்கள் செம செஃப்!!!

    பகிர்வுக்கு மிக்க நன்றி உமையாள்

    ReplyDelete
  9. சேம் சேம் போன வாரம் மகன் கொண்டு வந்தான் என்று ஜில்லென்று வேண்டும் என்றான் என்றதும் செய்து கொடுத்தேன். இளநீர் பாயாசம் நீங்கள் செய்வீர்கள் இல்லையா அப்படியும் இதைச் செய்யலாம்.

    பாலை வற்றக் காய்ச்சி அதில் வெல்லம் இல்லை என்றால் நாட்டுச் சர்க்கரை இல்லை டெமரரா சர்க்கரை சேர்த்தும் இதைப் போட்டும் சாப்பிடலாம் நன்றாக இருக்கும். இனிப்பு எதுவுமே சேர்க்காமல் வற்றக் காய்ச்சிய பாலில் சேர்த்து சாப்பிடலாம். இன்னொன்று எளிதாகப் பாலை கெட்டியாகக் காய்ச்ச வேண்டும் என்றால் குக்கரில் டைரக்டாக விட்டு சிம்மில் வைத்து வெயிட் போட்டு வைத்து விட்டால் மெதுவாக ஒரு 1/2 மணி நேரம் வைத்தால் போதும் பால் சற்று ரோஸ் கலரில் வந்துவிடும். சுவையும் அபாரமாக இருக்கும்....இளநீர் வழுவல் இருக்கு இல்லையா அதையும் இப்படிச் செய்யலாம்..நீங்கள் செய்திருப்பீர்கள்...கேட்கவா வேண்டும்...நீங்கள் செம செஃப்!!!

    பகிர்வுக்கு மிக்க நன்றி உமையாள்

    கீதா..

    முந்தைய கருத்தில் பெயர் விடுபட்டு விட்டது எனவே இது...

    ReplyDelete
  10. புதிதாக உள்ளது ....
    நுங்கில் பாயாசம்...

    ReplyDelete