Saturday 16 April 2016

டாங்கர்





தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 2 கோப்பை
பூண்டு - 1/4 கோப்பை 
புளி – நெல்லி அளவு
உப்பு – ருசிக்கு
மிளகாய் தூள் – 1/2 தே.க
வெல்லம் - சிறிது

தாளிக்க வேண்டியவை
எண்ணெய் – 5 மே.க
கடுகு – ½ தே,க
உ.பருப்பு – ¾ தே.க
வரமிளகாய் – 8 அ 10






                 தாளிக்கவும்.









வெங்காயம், பூண்டு, இரண்டையும் நைசாக நறுக்கிக் கொள்ளவும். 

பொன்னிறம் ஆகும் வரை நன்கு வதக்கவும்.









மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்து

வதக்கவும் 






புளியில் சிறிது நீர் விட்டு கரைத்து ஊற்றுங்கள்.
கொதிக்க விடவும்.
பச்சை வாசம் போய் எண்ணெய் கக்கி வரவும், வெல்லம் சேர்த்து இறக்கவும்.


இது வெள்ளைப் பணியாரத்திற்கு ஏக பொருத்தமான ஜோடி.

இட்லி, தோசை, ஊற்றப்பம் மற்றும் சப்பாத்தி, அடைக்கும் சேர்த்து சாப்பிடலாம்.

 


27 comments:

  1. டாங்கர் செய்முறை + படங்கள் சூப்பர். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      Delete
  2. ஆஹா புகைப்படமே இவ்வளவு அழகாக இருக்கின்றதே...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      Delete
  3. படங்களையே சாப்பிட தோன்றுதே சகோ....
    அருமை சகோ செய்முறை விளக்கம்....

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      தங்கள் தளத்தில் என்னால் இரண்டு நாட்கள் முயன்றும் கருத்திட முடியவில்லை சகோ.

      Delete
  4. அருமை. செய்து விடுகிறேன் சீக்கிரமே! ஆனால் நாங்கள் டாங்கர் என்று சொல்வது வேறு.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      உங்கள் டாங்கர் பதிவை பதிவிடுங்கள் சகோ செய்து பார்த்து சுவைக்க காத்திருக்கிறேன்.

      Delete
    2. ஸ்ரீராம். 16 April 2016 at 11:41
      //ஆனால் நாங்கள் டாங்கர் என்று சொல்வது வேறு.//

      கரெக்ட். இதனை நான் என் பின்னூட்டத்தில் சொல்லலாமா என நினைத்தேன். நீங்க சொல்லிட்டீங்க, ஸ்ரீராம். :)

      Delete
    3. செப்டம்பர் 21, 2015 பதிவு, எங்கள் பிளாக்! "திங்க"க்கிழமை பதிவு!

      Delete
  5. தயிர் சோற்றுக்காக - நான் இங்கே அடிக்கடி செய்வதுண்டு.. வெல்லம் போடுவதில்லை..

    யார் சொல்லிக் கொடுத்தார்கள்?.. ஏதோ கற்பனையில் உதித்தது..

    ஆனால், டாங்கர் என்றெல்லாம் பேர் இருப்பதை தெரிந்து கொண்டேன்..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...சூப்பர் ஐயா...நன்றி

      Delete
  6. அது என்ன பெயர் டாங்கர் என்று!! வாகனம் மாதிரி இருக்கே! இந்தப் பெயருக்காகவே ட்ரை பண்ணப் போறேன்.
    எங்கயோ டாங்கர் பச்சடி என்று ஒரு குறிப்பு படித்த ஞாபகம் வருது. நீங்க பெயர்க் காரணம் தட்டி வைங்க. நான் பச்சடியைத் தேடிட்டு வரேன்.

    ReplyDelete
    Replies
    1. ட்ரை பண்ணுங்கோ சகோ....மேலேயே...ஶ்ரீராம் சொல்லி இருக்காங்க பாருங்க...

      Delete
  7. டாங்கர்.... ஏதாவது பெயர்க் காரணம் இருக்கிறதா

    ReplyDelete
    Replies
    1. ஊருக்கு போகும் போது தான் கேட்கணும் ஐயா நன்றி

      Delete
  8. உமையாள் உங்கள் டாங்கர் ரெசிப்பி நாங்கள் சொல்லுவது வேறு சின்ன வெங்காயம் வதக்கல், தொக்கு (வெந்தயப் பொடி சேர்த்தால், வெங்காயத்தை பச்சை வாசனை போக வதக்கி அரைத்து மீண்டும் கடுகு தாளித்து நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் வதக்கல் செய்து இறுதியில் வெந்தயப்பொடி கொஞ்சம் சேர்த்தும்,,,சேர்காமலும் செய்வது...)

    டாங்கர் பச்சடி என்று எங்கள் வீட்டில் செயதுண்டு. உளுத்தம் பருப்பை வறுத்துக் கொண்டு பச்சைமிளகாய் இஞ்சி பெருங்காயம் வைத்து அரைத்து அதில் தயிர் கலந்து உப்பு போட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்தல்...

    பகிர்வுக்கு மிக்க நன்றி உமையாள்...உங்கள் மூலம் பெயர் எல்லாம் தெரிகின்றது..

    ReplyDelete
    Replies
    1. அசத்தல் சகோ....நன்றி

      Delete
  9. வித்தியாசமான பெயரில் எளிமையான செய்முறையோடு இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்!
    த ம 3

    ReplyDelete
  10. பெயரே வித்தியாசமாக உள்ளதே?

    ReplyDelete
  11. டாங்கர் என்பதை
    இன்று தான் அறிகிறேன்

    சிறந்த செய்முறை வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
  12. பேர பார்த்து ஸ்வீட்னு நினைச்சேன் :)
    டாங்கர் மாதிரி நானும் செய்வேன் சமோசாவுள்ள stuff செய்ய சப்பாத்தி உள்ள stuff செய்ய ..தண்ணி சேர்க்கமாட்டேன்

    ReplyDelete
    Replies
    1. :)))))

      புளித்தண்ணீர் சகோ அது.....ஆஹா...சமோசாவுக்கு செய்து பார்த்து ருசிக்க ஆசை வந்து விட்டது நன்றி ஏஞ்சலின்

      Delete
  13. குறிப்பும் புகைப்படமும் அழகு!

    ReplyDelete