Tuesday 26 April 2016

பலாக்காய் சொதி








தேவையான பொருட்கள்

பலாக்காய் துண்டுகள் - 1 1/2 கோப்பை
 உருளைக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கருவேப்பிலை- சிறிது
எண்ணெய்-  2 தே.க

அரைக்க வேண்டியவை

தேங்காய் - 1/2 மூடி
சோம்பு - 1/4 தே.க
சீரகம் - 1/ 4 தே.க
முந்திரி - 6
கசகசா - 1/4 தே.க
பொட்டுக்கடலை - 1 தே.க
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 1 பல்

எல்லாவற்றையும் முதலில் அரைத்து விட்டு, பிறகு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்






பலாக்காய், உ.கிழங்கு இரண்டையும்
சதுர துண்டுகளாக நறுக்கிய பின்,
குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.



வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.










தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்





அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.



வேகவைத்த காய்களை சேர்த்து. உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.



இது ரெம்ப தண்ணீராகவும் இருக்கக் கூடாது, அதே சமயம் கெட்டியாகவும் இருக்கக்கூடாது.



இட்லி,சப்பாத்தி,தோசை, அடை,பூரி இவற்றிக்கு தொட்டுக் கொள்ளலாம்.
மற்றும் சாதத்திற்கு ஊற்றிக் கொள்ளவும், தொட்டுக் கொள்ளவும் பயன் படுத்தலாம்.


                                       செட்டி நாட்டு பலாக்காய் சொதி....ரெடி....!!!





16 comments:

  1. பார்க்க ஆசையாகத்தான் இருக்கு என்ன செய்வது...
    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது...ஊருக்கு வரும் போது சாப்பிட்டு விட வேண்டியது தான்..:))
      நன்றி சகோ

      Delete
  2. வணக்கம் சகோ !

    சுவையான பலாக்காய் கறி மண்வாசனையை
    நினைவூட்டியமைக்கு நன்றிகள் !

    கடைசியாய் இருப்பது நல்லா இருக்கும்
    அவ்வ்வ்வ் ........!




    வாங்க வாங்க உண்ணலாம்
    வந்த பசியைப் போக்கலாம்
    பாங்காய் உமையாள் செய்திட்ட
    பலாக்காய் சொதியைச் சுவைக்கலாம்
    தேங்காய் பாலும் உள்ளியும்
    தேவைக் களவாய் இருப்பதால்
    தூங்கும் போதும் உண்டியில்
    துளைக்கும் வலிகள் போக்கலாம் !

    அருமையான சமையல் அனுபவங்களைப் பகிருங்கள் சகோ
    எப்போதும் வாழ்க வளத்துடன் !
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாங்க, சகோ எவ்வளவு நாட்கள் ஆச்சு ....இந்தப்பக்கம் வந்து..:)

      பலாக்காய் கவிதை இனிமை...நன்றி

      Delete
  3. சொதி செய்ததும் இல்லை, சாப்பிட்டதும் இல்லை! படத்தைப் பார்க்க அவியல் போல உள்ளது. அதே சமயம் அவியலில் நாங்கள் வெங்காயம் சேர்க்க மாட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. இனி செய்து சாப்பிட்டு விட்டால் போச்சு சகோ....:))

      நன்றி

      Delete
  4. செய்து சாப்பிட்டு பார்க்கலாம்
    பலாக்காய் வீட்டின் அருகே
    காய்த்து தொங்குது...

    ReplyDelete
    Replies
    1. அடடா.....பாலாக்காய் பக்கத்திலேயே இருக்கே....அருமை சகோ செய்து பார்த்து ருசியுங்கள்.....பாலாக்காய் பார்சல் ப்ளீஸ்....:))

      Delete
    2. உமையாள் இவர் அஜய் எங்க ஊராக்கும்..நாகர்கோவில் அங்கு பலாக்காய் நிறைய

      Delete
  5. அருமையான குறிப்பு! புகைப்படம் உடனேயே செய்து பர்க்கத் தூண்டுகிறது. பலாக்காய் கிடைத்ததும் செய்து பார்த்து விடுகிறேன்!!

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் அம்மா....நன்றி

      Delete
  6. புகைப்பட்ங்கள் எல்லாம் அழகு. நாங்கள் தேங்காய் பால் எடுத்து செய்வோம் சொதி. இது மிகவும் எளிதாக இருக்கிறது இப்படி செய்து பார்க்கிறேன்,

    ReplyDelete
  7. சொதி என்றால் எனக்கு இலங்கை சொதி தான் நினைவுக்கு வரும். அருமையான சுவையுடன் இருக்கும் இலங்கை சொதி. தேங்காய்பாலில் செய்வது. இடியாப்பத்திற்கு செம காம்பினேஷன் அது.

    இது சற்றுக் குருமா போல இருக்கோ...இன்று உங்கள் பதிவின் மூலம் தான் தெரிந்து கொண்டேன் இது செட்டிநாட்டுச் சொதி என்று..

    பலாக்காயை துவரன் செய்வதுண்டு. இடிச்சக்கை என்போம் கேரளத்தில். கூட்டும் செய்வதுண்டு. பலாக்காயில் இதைச் செய்ததில்லை. உங்கள் குறிப்பைக் குறித்துக் கொண்டேன். செய்துவிட்டால் ஆச்சு...

    மிக்க நன்றி உமையாள்...

    கீதா

    ReplyDelete
  8. சுவையான குறிப்பு!
    த ம 7

    ReplyDelete
  9. கறி பெலா என்றே மரமே உண்டு!

    ReplyDelete
  10. பலாக்காய் சொதி எனக்குப் புதிது
    ஆனாலும்
    பலாக்காய்க் கறி உண்ட அனுபவம்.
    பலாக்காய் சொதி பற்றிய
    சிறந்த செய்முறை வழிகாட்டல்!

    ReplyDelete